தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்கிறது- சித்தார்த்தன் மறுக்கிறார்.

தமிழ் மக்கள் பேரவையில் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக்கட்சி விளக்கம் கேட்க முடியாது. கூட்டமைப்பே கேட்க முடியும் அவ்வாறு கேட்டால் அதற்கான விளக்கத்தைக் கொடுப்பேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.


வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் இணைத் தலைமையில் தமிழ்’ மக்கள் பேரவையொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு அரசியற் கட்சிகளும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மதத்தலைவர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.
இதனால் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. இந் நிலையில் நேற்று முன்தினம் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற இப் பேரவையின் இரண்டாவது கூட்டத்தில் புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்hனmavai-s_1 கலந்து கொண்டிருந்தார்.
இந் நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் விளக்கம் கேட்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
இத்குப் பதிலளித்த சித்தார்த்தன் தமிழ் மக்கள் பேரவையில் நான் கலந்து கொண்டமை தொடர்பில் தமிழரசுக் கட்சி எனக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. அவ்வாறு அவர்கள் என்னிடம் விளக்கமும் கேட்க முடியாது. ஆனால் கூட்டமைப்பு அவ்வாறு விளக்கம் கேட்கலாம்.
அவ்வாறு அவர்களும் விளக்கம் கேட்பதாயின் அதுவும் கூட்டமைப்பின் பொதுக் கூட்டத்திலேயே கேட்க முடியும். அவ்வாறு கூட்டமைப்பு கேட்டால் அதற்கான பதிலை நாங்கள் வழங்கத் தயாராகவே இருக்கின்றோம் என்றார். இவ்வாறு இன்றைய பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளது.