தமிழர் சமூக ஜனநாயக கட்சிஏன் தனித்து போட்டியிடுகிறது தெரியுமா?

வரதர் கொடுத்த 50 பேர் கொண்ட லிஸ்ற்… தொலைபேசியையே தூக்காத மாவை!

தமிழர் சமூக ஜனநாயக கட்சி(ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா அணி) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நுழைந்து விட்டது, அவர்களிற்கு முப்பது வேட்பாளர்கள் வழங்கப்படலாம் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை படித்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை பார்த்து குழப்பமடைந்திருப்பார்கள். சாவகச்சேரி நகரசபைக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. நாம் வெளியிட்ட செய்திக்கு மாறாக நடந்த இந்த சம்பவம் பலரை குழப்பமடைய வைத்திருக்கும்.

யாரும் குழப்பமடைய தேவையில்லை… நடந்த சம்பவத்தை குறிப்பிடுகிறோம்.

தமிழர் சமூக ஜனநாயக கட்சியை தம்முடன் இணைப்பதற்கு தமிழரசுக்கட்சி விரும்பி முயற்சித்தது. மாவை சேனாதிராசாவே இந்த பேச்சில் நேரடியாக கலந்து கொண்டிருந்தார்.

இறுதியாக, வேட்பாளர் பட்டியல் ஒன்றை தருமாறு தமிழரசுக்கட்சி கோரியிருந்தது. சமூக ஜனநாயக கட்சி ஐம்பது பேர் கொண்ட பட்டியல் ஒன்றை வழங்கியிருந்தது. இதன் பின்னர் தமிழர் சமூக ஜனநாயக கட்சியுடன் தொடர்புகளை துண்டித்து விட்டது.

இதன்பின், தமிழரசுக்கட்சி தலைமையுடன் தொடர்புகொள்ள த.ச.ஜ.கட்சி பலமுறை முயன்றது. எனினும், தமிழரசுக்கட்சியினர் தொடர்பை ஏற்கவில்லை. இப்படியே இருந்து பலனில்லையென்ற பின்னர், 12ம் திகதி த.ச.ஜ.கட்சி தனித்து வேட்பாளர் பட்டியல் ஒன்றை வழங்கியிருந்தது. வேட்புமனு தாக்கல் செய்த பின்னரும் தமிழரசுக்கட்சியை தொடர்புகொள்ள தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர் முயன்றனர். எனினும், இதற்கு இதுவரை பதிலில்லை.

(One New Media)