தேர்தலில் தலையிடவில்லை என்கிறது சீனா

இவ்வாண்டு நவம்பரில் இடம்பெறவுள்ள தேர்தல்களில் தலையிடுவதற்கு சீனா முயல்கிறது என்ற, ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் விமர்சனத்தை, சீனா நிராகரித்துள்ளது. ஐ.அமெரிக்கப் பொருட்களின் இறக்குமதிக்கான தீர்வையை அதிகரிக்கும் முடிவை சீனா எடுத்தமை மூலமாகவே, அந்நாடு இவ்வாறு முயல்கிறது என, ஜனாதிபதி ட்ரம்ப் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இரு நாடுகளும் அண்மைக்காலமாக மாறி மாறி, தீர்வைகளை அதிகரித்துவரும் நிலையில், 200 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சீனப் பொருட்களுக்கான தீர்வைகளை ஐ.அமெரிக்கா அதிகரிக்க, அவற்றுக்குப் பதிலாக, 60 பில்லியன் ஐ.அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஐ.அமெரிக்கப் பொருட்களுக்கான தீர்வைகளை, சீனா அதிகரித்திருந்தது.