பயனற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொது அமைப்புகளும் அதிகாரிகளும் விசனம்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 29-05-2017 மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர்களான வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் சமூகமளிக்காத நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் அங்கஜன் இராமநாதன் இருவரின் தலைமையிலேயே இன்றையக் கூட்டம் நடைப்பெற்றது.

மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் சட்ட வலுவுள்ளதாக இருக்க வேண்டும் என்றால் இணைத்தலைவர்கள் நான்குபேரும் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் இன்றையக் கூட்டத்தில் இவை இடம்பெறவில்லை.

அத்தோடு கடந்த கால கூட்டங்கள் போன்றே இன்றையக் கூட்டத்திலும் மக்கள் பிரதிநிதிகள் பல உயரதிகரிகள் திணைக்களங்களின் தலைவர்கள் சமூகமளித்திருக்கவில்லை. எனவே பல விடயங்கள் தொடர்பில் மக்கள் அமைப்புகளின் கருத்துகளுக்கு பொறுப்பான பதில்கள் கிடைக்கவில்லை.

மேலும் வழமை போன்றே ஆறு தீர்மானங்கள் இன்றையக் கூட்டத்திலும் நிறைவேற்றப்பட்டது கடந்த காலத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களிலும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதும் அவை எவையும் இதுவரையுயும் நிறைவேற்றப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்றும் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. என்றும் தெரிவித்தனர்.

இதனை தவிர கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் 24 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 16 விடயங்கள் ஆராயப்படாமல் கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. தங்களுடைய திணைக்களம் சார்ந்த விடயங்கள் ஆராயப்படும் என காலை ஒன்பது மணி தொடக்கம் ஒரு மணிவரை காத்திருந்த அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டங்களை மாவட்டத்தின் அபிவிருது;தி மற்றும் மக்களின் நலன்களை கருத்தில் எடுத்து பொறுப்புடன் நடத்துமாறு பொது மக்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளும் திணைக்களத் தலைவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்