பாராட்ட பெரியமனது வேண்டும்!

என்னென்ன தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்!

  1. முதலில் விழிப்புணர்வுப் பிரச்சாரம். அனைத்து ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வழிகாட்டுதலைச் சொல்லி இருக்கிறார்கள்… நீங்கள் கோபப் படும் தொலைபேசி முன்னுரைப் பேச்சு உட்பட!
  2. கவனமாக மாகாணங்களை இணைக்கும் வகையில் மருத்துவமனைகளை தேர்ந்தெடுத்து நீங்கள் என்ன செய்ய வேண்டும், நாங்கள் என்ன செய்வோம் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
  3. மருத்துவமனைகளில் இடம் போதாவிட்டால் உபயோகிக்காத வற்றிகொலோ கெம்பஸ் போன்ற தணியார் மற்றும் அரச வளாகங்கள் போன்றவற்றில் சிகிச்சைக்கான வசதிகளை உண்டாக்கி உள்ளனர்.
  4. பொது இடங்கள், சூப்பர் மார்க்கற், பள்ளி, பல்கலைக்கழகம் , திரை அரங்கம், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் கூடும் இடங்களை விடுமுறையாக அறிவித்து உள்ளனர்.
  5. விமான நிலையங்களில் ஆரம்பத்தில் குறைந்தளவிலான கட்டுப்பாடுகள் இருந்தாலும் இப்போது மிக அதிக கவனம் செலுத்தி உள்ளனர்…
  6. தனியார் தொழில் நிறுவனங்களை மூடச் சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். பலரும் அதை பின்பற்றி உள்ளனர்.
  7. வணிகப் பதுக்கல்கள் இன்றி மக்களுக்கு பொருட்கள் கிடைக்க வழி வகுத்துள்ளனர்.
  8. மக்கள் ஜனநாயக அரசு என்று முழங்கிய பிரித்தானியா, அமேரிக்கா கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலைமை!…. ஆனால் இலங்கை அவர்களைப் போலப் பலம் பொருந்திய நாடாக இல்லாத போதும் கொறோனா பிரச்சனை மிகத் திறமையாகக் கையாளப்படுகிறது!
  9. குறை மட்டுமே கூறி வரும் எதிர்கட்சிகள் வாயடைத்து நிற்பது தெரிகிறது. அவர்களை பேச முடியாமல் செய்து காட்டி விட்டார் கோட்டாபாய ராஜபக்ச.
  10. மருத்துவத் துறையையும், இராணுவத்தினரும் பாராட்டியே தீர வேண்டும்… அவர்கள் இன்றி இது சாத்தியமில்லை!…

நீங்கள் ஆளும் இந்த அரசுக்கு ஆதரவாளர்களாயினும் எதிரானவர்கள் என்றாலும் கூட மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்…..

இந்த அரசு செய்த பணியை ஒரு மனிதனாக பாராட்ட வேண்டாமா?