புயலால் இலங்கைக்கு கடுமையான பாதிப்பு: நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா

இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம்.
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட கொழும்பு நகர வீதி ஒன்றில் வழிந்தோடும் வெள்ளம். ரோனு புயலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைக்கு, மருந்து உள்ளிட்ட நிவாரண பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் மற்றும் மீட்புக் குழுவினருடன் சி-17 விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது.

டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் வெளியுறவு விவகாரங்கள் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்திய கடற்படை சார்பில் ஐஎன்எஸ் சட்லஜ் மற்றும் ஐஎன்ஸ் சுனைனா ஆகிய 2 கப்பல்கள் இலங்கைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. அதோடு, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினருடன், சி-17 ரக விமானமும் இலங்கைக்கு அனுப்பப்படுகிறது.

டெல்லியில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் குழுவினருடன் இலங்கைக்கு செல்லும் விமானம், வழியில் சென்னையில் கூடுதல் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, வெள்ளிக்கிழமை மாலையே இலங்கை சென்ற டையும். இலங்கைக்கு அனுப்பப் படும் நிவாரணப் பொருட்களில் மருந்து, தார்பாலின், எமர்ஜென்சி லைட்டுகள், நுகர்வு பொருட்கள், மொபைல் டாய்லட்டுகள், மிதவைப் படகுகள், மோட்டார்கள் மற்றும் ரேஷன் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.

இலங்கை நமக்கு நெருக்கமான அண்டை நாடாகவும், நட்பு நாடா கவும் உள்ளது. அந்நாட்டுக்கு துன்பம் ஏற்படும் போது, முதலாவ தாக உதவும் நாடாக இந்தியா எப்போதும் திகழ்கிறது.

இவ்வாறு விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.

வெளியேறும் மக்கள்

இதற்கிடையே, இலங்கையில் நேற்றும் கனமழை நீடித்தது. களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாகி, கொழும்பு நகரின் வடகிழக்குப் பகுதிகள் கடுமையாக பாதித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாழ்வான பகுதியில் வசிக்கும் 2 லட்சம் பேர் பாதுகாப்பான இடங் களை நோக்கி தாமாக வெளியேறி விட்டதாகவும், 4 லட்சம் மக்கள் வலுக்கட்டாயமாக நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப் பட்டதாகவும் இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை மையம் அறிவித்துள்ளது.

கேகாலை மாவட்டத்திலும் இரவு பகலாக மழை பெய்ததால், பல இடங்களில் கட்டிடங்கள் சரிந்துவிழுந்தன. இதில் சேதாரம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இலங்கையில் ரோனு புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச் சரிவில் சிக்கி 63 பேர் பலியாகினர். நிலச்சரிவு ஏற்பட்ட நாளில் இருந்து 37 குழந்தைகள் உட்பட 144 பேர் காணவில்லை. பல இடங் களில் 50 அடி உயரத்துக்கு சேறும் சகதியுமாக இடிபாடுகள் காணப் படுவதால், அதில் சிக்கியிருப் பவர்களை மீட்க முடியாமல் மீட்புப் படையினர் போராடி வருகின்றனர்.