புலிகள் சகோதர படுகொலை புரிந்தனர் – ஆவணப்படத்தை வெளியிட்டு வைத்தார் விக்கி…

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ .பி.ஆர்.எல்.எப்) யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட பிராந்திய மாநாடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த ஆவண படத்தினை முன்னாள் முதலமைச்சர் வெளியிட்டு வைத்தார்.

குறித்த ஆவணப்படத்தில், விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகோதர படுகொலைகள் பற்றி ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரெலோவினை விடுதலைப்புலிகள் தடை செய்து அதன் உறுப்பினர்கள் 151 பேரையும் , 51 பொதுமக்களையும் சுட்டு கொன்றனர் எனவும் , கந்தன் கருணை படுகொலையின் போது 60 பேரை சுட்டு கொன்றதாகவும் , பத்மநாபா உள்ளிட்ட 13 பேரை 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி படுகொலை செய்ததாகவும் குறித்த ஆவணப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.