‘பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம்’ உதயம்

அரசியல் தொழிற்சங்க பேதமின்றி இணைவோம்

மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பில் நேற்று (01-09-2018) இடம் பெற்ற மக்கள் சார்பான கூட்டு ஒப்பந்தம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுக் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது ‘பெருந்தோட்டத் தொழிலாளர் உரிமை சம்மேளனம்’ (Plantation Labour Rights Confederation) என்ற பொது அமைப்பு தாபிக்கப்பட்டது. இந்த அமைப்பின் ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்வதற்காக கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருந்த ஏழு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் மூன்று தனிநபர்களையும் உள்ளடக்கிய 11 பேர் கொண்ட முன் தயாரிப்பு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் பின் வரும் நபர்கள் அங்கத்துவம் வகிக்கின்றனர்.

முன்ஆயத்த குழு உறுப்பினர்கள்

1. சட்டத்தரணி சு. விஜயகுமார் (மக்கள் தொழிலாளர் சங்கம்) அழைப்பாளர் (0716275459)
2. கே. கணபதி (கொம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம்) உறுப்பினர் (0711719323)
3. எஸ். மோகன்ராஜ் (புதிய ஜனநாயக மா.லெ. கட்சி) உறுப்பினர் (0718912553)
4. இரா. நெல்சன் மோகன்ராஜ் (மக்கள் ஆசிரியர் சங்கம்) உறுப்பினர் (0718912553)
5. ஏ.சீ.ஆர். ஜோன் (சமூக நீதிக்கான மலையக வெகுஜன இக்கம்) உறுப்பினர் (0776385807)
6. சட்டத்தரணி இ. தம்பையா (மக்கள் தொழிலாளர் சங்கம்) உறுப்பினர் (0714302909)
7. சட்டத்தரணி நே. கருணாகரன் (மலையக சமூக நடவடிக்கை குழு) உறுப்பினர் (0715694071)
8. கே. சிவகுமார் (இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்) உறுப்பினர் (0779693241)
9. வி. சண்முகநாதன் (தனிநபர் – தலவாகலை) (0757312372)
10. டீ. ஸ்டாலின் (தனிநபர் – கொட்டகலை) (0715841589)
11. ஆர். செல்வநாயகம் (தனிநபர் – பதுளை பசறை) (0718843480)

அடுத்தக்கட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான பொறுப்பு முன்ஆயத்த குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 12-09-2018 அன்று புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்று என்று அழுத்தம் தெரிவிப்பதற்கு ஊடகச் சந்திப்பொன்றை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் அமைப்பின் பணிகளை மாவட்ட மட்டத்தில் தொழிலாளர்களையும் தனிநபர்களையும் அமைப்புகளையும் இணைத்து பலப்படுத்துவதற்கு மாவட்ட மட்டங்களில் கூட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.

இன்றுடன் இந்த அமைப்பில் இணைந்து செயற்பட எண்ணும் தொழிற்சங்கங்கள், அமைப்புகள் தனிநபர்கள், தொழிலாளர்கள் முன் தயாரிப்பு குழுவின் அழைப்பாளரை அல்லது உறுப்பினர்களை தொடர்பு கொள்ளவும்.