பொலிவிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியை உரிமை கோரிய சோஷலிசவாதிகள்

சிஸ்மோரி கருத்துக்கணிப்பால் மேற்கொள்ளப்பட்ட துரித வாக்கு எண்ணிக்கை பொலிவிய தொலைக்காட்சி அலைவரிசை யுனிட்டெல்லால் நேற்று நள்ளிரளவில் வெளியிடப்பட்டதில் லூயிஸ் அர்சே 52.4 சதவீதமான வலிதான வாக்குகளைப் பெற்று, வலதுசாரிக் கொள்கைகளுக்கும் இடதுசாரிக் கொள்கைகளுக்கும் இடையேயான கொள்கைகளைக் கொண்ட தனது போட்டியாளரான 31.5 சதவீதமான வாக்குகளைக் கொண்ட கார்லோஸ் மெஸாவை விட 20 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று காணப்படுகின்றார்.

வேட்பாளரொருவர் முதலாவது சுற்று வாக்களிப்பிலேயே வெற்றி பெறுவதற்கு 40 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெறுவதுடன், எதிரணி வேட்பாளரை விட 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.முன்னாள் ஜனாதிபதி இவா மொராலெஸின் கீழ் முன்னாள் பொருளாதார அமைச்சராக லூயிஸ் அர்சே காணப்பட்டிருந்தார்,