மகிந்த கோட்டா முப்படையினருக்கு தண்டனை இல்லை என்றால்…

ஜெனீவா தீர்மானத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தாலும்இ அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்பு படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்கள் என அரசு இன்று அறிவித்துள்ளது. அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும் அரசின் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்படியாயின் எதற்கு விசாரணை? கண்துடைப்புக்கா? அல்லது…? உண்மையைக் கூறுமாறு கூறாது கூறும் நரித்தந்திரமா? தென்கிழக்காசியப் பிராந்தியத்தையே வல்லரசுகளுக்கு எதிராக வைத்து ஆட்டிய மகிந்தவுக்கா இந்தச்சமிஞ்ஞையைக் கொடுக்கிறார்கள்?

அமைச்சர் அமரவீரவின் உரை உண்மைக்குப் புறப்பாக இருப்பதாகத் தோன்றினாலும் அதனுள் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளதை அறியமுடிகிறது. ஒரு மந்திரியாக உள்ளவர் எழுந்தமானமாக எதையும் இயப்பிவிட இயலாது. இவை அனைத்தையும் உலகநாடுகளும் செய்தியாளர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை உணர்தல் அவசியம். ஐ.நா சபையின் முடிவை ஏற்று விசாரணை நடத்துகிறோம். தண்டனை கொடுக்கமாட்டோம், பாதுகாப்போம், காப்பாற்றுவோம் என்பது உண்மைக்கும், முறைமைக்கும் மாறாக உள்ளது. இது முக்கியமாக தமிழ்மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆக விசாரணை என்பது இறுதிப்போரில் என்ன நடந்தது என்பதை அறியும் வெறும்; விடுப்புப் பொறிமுறைதானா?

அதுதான் எல்லோருக்கும் தெரியுமே. வெள்ளைக் கொடியுடன் சென்றவர்கள் கொல்லப்பட்டார்கள்…. கைதானவர்களும் கொல்லப்பட்டார்கள். மனித உரிமை மீறல், யுத்ததர்ம மீறல் நடந்துள்ளது… அனைத்தும் தெளிவானதே. இதில் புதிகாக எதைக்கண்டு பிடிக்க இந்த விசாரணை. யார் உத்தரவில் இது நடந்தது என்பதை அறிவதா? சுயமாக இராணுவம் இதைச் செய்தது என்பதை அறிவதா? அல்லது மூன்றாம் அமைப்பின் ஊடுருவலால் இவை நடந்தது என்பதை உணர்வதா? எதை அறிவதற்கு இந்த விசாரணை? எதை எப்படி நடத்தினாலும் குற்றவாளியாக யாரோ உறுதிசெய்யப்பட வேண்டும். இக்குற்றவாளிகளை என்ன செய்வது என்பதை அடுத்தகட்டப் பொறிமுறை தீர்மானிப்பதாக இருக்காலாம்.

பாதுகாப்போம், காப்பாற்றுவோம் என்ற பதங்களின் பின்னால் ஒழிந்திருக்கும் உண்மைகள் என்ன? இன்றைய அரசின் பின்புலத்தில் இயங்கும் நாடுகளின் நிகழ்ச்சி நிரல்தான் என்ன? மகிந்தவை நாளை பாவிக்கலாம் அதற்கு இது ஒரு துருப்புச்சீட்டாக இருக்கும் என்பதா?

குழந்தைப்பிள்ளைக்குக் கதை சொல்வதுபோல் நாங்கள் அடிக்கமாட்டோம் நீ உண்மையைச் சொல்லு என்று மகிந்த கோட்டா முப்படைக்கும் கொடுக்கும் செய்தியா இது?

ஒருவனை சிறைப்பிடித்து வைத்திருப்பது தண்டனை என்று பலர் எண்ணலாம். அது உண்மையில் நேர்மான நோக்கையும் கொள்ளும். குற்றவாளியானவனின் எதிரிகள் அவனைக் கொல்லாது சிறையில் பாதுகாத்து வைப்பதும் பாதுகாத்தல் , காப்பாற்றுதலாகும் என்பதையும் அறிக.

இலங்கையில் சட்டம், நீதி, ஒழுங்கு, வாக்கு மூலம் என்பன சீரற்ற நிலையில் உள்ளதாலும் ஊடகங்கள் வலுவிழந்து அரசுகளின் கையாளாக நடந்து கொள்வதாலும் அரசியில்வாதிகள் எதையும் சொல்லலாம், வாக்குறுகி அளிக்கலாம் என்ற நிலை உள்ளது. இந்த அமைச்சரின் வார்த்தைகளை வைத்து எதையும் நாம் இன்று தீர்மானிக்க இயலாது. பின்புலத்தில் இன்றைய அரசின் நோக்கம் என்பதை அறிவதும், இவ்வரசுக்குப் பின்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மேற்கின் நோக்கம் என்ன எப்பதையும் சிறிது பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.

ரணில், மைத்திரி அரசபீடம் ஏறினாலும் பின்புலமேற்குகள் தோழ் கொடுத்தாலும் மகிந்த குடும்பத்தின் மீதான உள் மனப்பதட்டம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. காரணம் தேர்தல் முடிவுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மகிந்த தெற்கில் பலமான மக்களின் சொல்வாக்குடன் இருப்பது அரசினதும் மேற்கினதும் அடிவயிற்றைக் கலக்கும் விடயமாகும். ஆக மகிந்த குடும்பத்தை அடியோடு அடித்துத் தள்ளும் நோக்கம் மேற்குக்கு இல்லை என்பது உறுதி. காரணம் மகிந்தகுழுமம் ஓரேயடியாக அரசியிலில் இருந்தும் அரசியிலில் இருந்தும் அடியோடு அடித்து விரட்டப்படுமாயின் இன்றைய அரசகுழுமம் சர்வாதிகாரம் கொண்டு ஆடும். அதற்கும் செக்கை வைக்க வேண்டியநிலையிலேயே மேற்கு உள்ளது. மேற்கு என்றும் தன்கையிலேயே நாணயக் கயிற்றை வைத்துக் கொள்ள விரும்பும். இன்றைய அரசு மேற்கின் சொல்லுக்காடவில்லை என்றால் நாளை மகிந்த மேற்கின் கையாளாவார் என்பது திண்ணம்.

தமிழர்களாகிய நாம் இன்று செய்யக்கூடியது என்ன? இச்சூழலை எப்படிப் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது. அடுத்து எம் அரசியல் நகர்வுகள் என்ன என்ன என்பதைப் பற்றியோசிப்பதும், பொறுத்திருந்து அரசின் நடவடிக்கைகளையும், வளக்கின் போக்கையும் உன்னிப்பாக அவதானிப்பதே ஆகும். அத்துடன் போதிய ஆதாரங்களை இரகசியமாகத் திரட்டி தமிழர்களின் நியாயத்தை நிலைநாட்ட உழைப்பதுவுமே ஆகும். இங்கே மனஞ்சோர்ந்து விடுவதைத் தவிர்த்தல் அவசியம். விசாரணை நியாயமான முறையில் நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்றால் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை உண்டு என்பதை மறக்காதீர்கள். அவசரப்பட்டு எதையும் குழப்புவது உசிதமானது அல்ல.

இந்தக் கூற்றை ஊடகங்களுக்கு வளங்கிய அமைச்சரிடம் இதுபற்றி ஆளமாக விசாரிப்பதை உங்கள் போக்காகக் கொள்ளலாம். அதற்கான நியாயமான பதிலைக் கொடுக்க வேண்டிய அவசியம் அவருக்கு உண்டு. இவரின் இக்கூற்று வேறு இராஜதந்திர நகர்வுகளுக்கான உரையாக இருந்தால் நேர்மையான பதில் கிடைக்காது என்பதையும் அறிக.

(நோர்வே நக்கீரா)