மக்களோடு மக்களாய் தமிழர் சமூக ஜனநாயக கட்சியினர்

உண்மையில் விடியல் சமூகசேவைகள் சங்கத்தினரின் செயற்பாடுகள் அதி உன்னதமானவையாகும், மக்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் நோக்கில் அவர்களது தொடர் செயற்பாடுகள் காணப்படுகின்றது. பெரியவர்களை முன்நிறுத்தி செயற்பாட்டாளர்களாக இளைஞர்கள் இருப்பது இன்னும் சிறப்பாகும்.

இவர்களது செயற்பாடுகள் மென்மேலும் சிறப்புர வேண்டும் என்றும், இவர்களுக்கு அனுசரனை வழங்கிய, வழங்கிக் கொண்டிருக்கின்றவர்களதும் மற்றும் இதன் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆலோசகர்களினதும் வாழ்விலும் விடியல் ஏற்பட வேண்டும் என எனது வாழ்த்துக்கள்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதோடு இந்நிகழ்விற்கு என்னை அழைத்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.