மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக……. என்னும் நூலின் வெளியீட்டு விழா

தமிழர் சமூக ஜனநாயக கட்சியின்(SDPT) தலைவரும், சமுக செயற்பாட்டாளருமான தோழர் சுகு சிறிதரன் அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட மனிதாபிமானம் கொண்ட புதிய தலைமுறைக்காக..….. என்னும் நூலின் வெளியீட்டு விழா Germany இல் Neuss என்றும் நகரத்தில் 13.05.2018 அன்று மாலை 14.30 இலிருந்து 17.30 வரை நடைபெற்றது.தோழர் அலெக்ஸ் அவர்களின் வரவேற்புரையினைத் தொடர்ந்து இலங்கையில் இதுவரை காலமும் நடைபெற்ற பல்வேறு அனர்த்தங்களினால் மரணித்த மக்களுக்கான மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.இந் நிகழ்வினை திருமதி சசிப்பிரியா ஜெயந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.

நூலாசிரியரை கௌரவிக்கும் முகமாக செல்வி றொசானி தம்பித்துரை அவர்கள் பூங்கொத்தை வளங்கினார்.

இந்த நூலிற்கான ஆய்வினை இலங்கையின் பொதுவுடமை அரசியல் பாரம்பரியத்தை சேர்ந்தவரும், போராளி பத்திரிகைக்குழுவின் ஆசிரியரும், 1980கயளில் பொதுவான சமூக, மாணவ ,இளைஞர் இயக்கங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவரும் புலம் பெயர்ந்து அறுவை சஞ்சிகையை நடாத்தியவருமான தோழர் லோகநாதன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்ர்.

அவரைத்தொடர்ந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறயியல் துறையில் கற்றவரும், இன நல்லுறவிற்காக செயற்பட்டவரும் ,NLFT இயக்கத்தின் சிரேஸ்ட செயற்பாட்டாளரும் தற்போது கொலண்டில் மென்பொறியியலாளராக பணியாற்றும் தோழர் பாலசூரியா அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.

அவரைத் தொடர்ந்து 1970களிலிருந்து தமிழர் சமுக ,அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவரும் வடகிழக்கில் இன்றளவும் தெரிந்த பட்டிமன்ற பேச்சாளரும் ஜெர்மனியில் புலம் பெயர்ந்து கலை இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருபவருமான தோழர் குமரன் மாஸ்ரர் அவர்கள் ஆய்வினை மேற்கொண்டார்.

இவர்கள் மூவரின் ஆய்வுகள் நூலாசிரியரை பாராட்டுவதுடன் நின்றுவிடாது தமது ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் முன்வைத்து நூலாசிரியரிடம் அதற்கான பதிலையும் கூறுமாறும் கேட்டுக்கொண்டார்,
.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் புகழ் பூர்த்த ஜவர்கலால் நேரு பல்கலைக் கழகத்தில் இரண்டு தடவைகள் மாணவர் அணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டவரும், மெய்ன்ஸ்றீம் ஆங்கில சஞ்சிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றியவரும் ,தற்போது சட்டத்தரணியாக பணிபுரிபவரும் சமூக செயற்பாட்டாளருமான தோழர் கன்ணியப்பன் இளங்கோவன் அவர்கள் உரையாற்றினார்கள்.அவருடைய பேச்சு அங்கு நூலினை ஆய்வுசெய்த தோழர்களின் கருத்துக்களின் அடிப்படையாக அமைந்ததுடன் புலம்பெயர் மக்கள் எவ்வகையில் தாயகத்திலுள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பை செலுத்தமுடியும் என்பதையும் அவருடைய பேச்சில் கானக்கூடியதாகவிருந்தது.

அதைத்தொடர்ந்து நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. தோழர் இளங்கேவன் அவர்களினால் நூலினை வெளியீட்டு வைக்க திருமதி விகிரிதா இளங்குமரன், திரு ஜெயமோகன், திருமதி சாந்தி ரகு ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.அவர்களைத் தொடர்ந்து அங்கு வருகை தந்த அனைவரும் நூலினைப் பெற்றுக் கொண்டார்கள்.

இறுதியாக நூலாசிரியர் தோழர் சுகு சிறிதரன் அவர்கள் உரையாற்ரினார்.அவருடைய உரையில் நூலை ஆய்வு செய்தவர்களின் கருத்துக்களுக்கான பதிலாக அமைந்திருந்தது. அவர்களுடைய விமர்சனங்களை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.நேரம் போதாமை காரணமாக அவர் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்.நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன.