முதல் 10 இடங்களில் 9 இடங்களை பெற்று கொழும்பு மாவட்டம் சாதனை

2015 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் நாடளாவிய ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி அகில இலங்கை ரீதியில் முதல் 10 இடங்களில் 9 இடங்களை மேல் மாகாணம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிலும் 6 இடங்களை கொழும்பு மாவட்டம் பெற்றுள்ளது. முதலாம் இடத்தை விசாகா வித்தியாலய மாணவியும் இரண்டாமிடத்தை நாலந்தா கல்லூரியும் மூன்றாமிடத்தை தேவி பாலிகா வித்தியாலயமும் கைப்பற்றியுள்ளன.மூன்றாமிடத்தை இரு மாணவர்களும் 7 ஆம் இடத்தை இரு மாணவர்களும் 8 ஆமிடத்தை மூன்று மாணவர்களும் பெற்றுள்ளனர்.

1 ஆம் இடம் – சத்சரணி ஹெட்டியாராச்சி – விசாகா வித்தியாலயம், கொழும்பு

2 ஆம் இடம் – சாமல் புன்சர – நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

3 ஆம் இடம் – ஆர்.எம். ரத்நாயக்க – தேவி பாலிகா வித்தியாலயம், கொழும்பு

3 ஆம் இடம் – ஐ. ரத்நாயக்க – மாகாமாயா பெண்கள் கல்லூரி, கண்டி

4 ஆம் இடம் – எம்.எம். ரனிது அர்ஜூன ஹேரத் – நாலந்தாக் கல்லூரி, கொழும்பு

5 ஆம் இடம் – நெவிலி அமரஜித் வல்பிட்ட – ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

6 ஆம் இடம் – எம்.ஜே. இரூஷா நெத்சரா – பண்டாரநாயக்க கல்லூரி, கம்பஹா

7 ஆம் இடம் – தருசா அன்ஜலிகா – சிறிசுமங்கலிகா பெண்கள் வித்தியாலயம் – களுத்துறை

7 ஆம் இடம் – டிநெத் சன்சுலா ஜயகொடி – மேரிஸ்டெலா கல்லூரி – நீர்கொழும்பு

8 ஆம் இடம் – டபிள்யூ.டி.ஐ. சதுரங்க விஜயசிங்க – ஆனந்தாக் கல்லூரி, கொழும்பு

8 ஆம் இடம் – ஏ.எஸ். அமாயா நானயக்கார – சவுத்லன்ட்ஸ் கல்லூரி, காலி

8 ஆம் இடம் – டபிள்யூ.எஸ். டயஸ் வெல்லப்புளி – ராகுல கல்லூரி, மாத்தறை .

முதற்கண் வாழ்த்துக்கள் எமது சகோதர மொழி பேசும் மாணவர்களின் சாதனைக்கு. தமிழ்… தமிழ்… என்று பெருமை பேசும் நாங்கள்… யாழ்ப்ப்பாணம் என்று உயர்வாகப் எண்ணும் எமக்கும் இந்த பரீட்சை முடிவு ஒரு செய்தியை சொல்லி நிற்கின்றது. தற்போது நாம் எங்கே நிற்கின்றோம் என்பதை. இதற்கு இலங்கை அரசை மட்டும்  வழமை போல் குற்றம் சாட்டி சுய இன்பம் காண்போம் ஆகின் நாம் இன்னும் எதிர்காலத்தில் கீழ்நிலைக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.