’வடக்கின் சுற்றுலாத்துறை முன்னேற்றப்படும்’

வடமாகாண சுற்றுலா பணியகமும் சர்வதேச சுற்றுலா சம்மேளனமும் இணைந்து, வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக முன்னெடுக்கப்பட்ட சுற்றுலாத்துறை சார் வழிகாட்டல் ஆவணம், சுற்றுலா மையங்களின் காணொளிகள் மற்றும் வழிகாட்டிகள் என்பன, யாழில் இன்று (25) வெளியிடப்பட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், வடக்கு மாகாணத்தில், கடந்த வருடம் பெப்ரவரி மாதத்திலிருந்து இவ்வருடம் பெப்ரவரி 25ஆம் திகதி வரை, சுற்றுலாத்துறை சார்ந்த அனைத்து முதலீட்டு செயற்பாடுகள், பொருளாதார செயற்பாடுகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் பலர் கொரோனா தொற்று நிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

எனினும், வடக்கின் சுற்றுலாத்துறையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருவதற்காக, வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள குறித்த வேலைத்திட்டமானது, மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் கூறினார்.
அத்தோடு, வடக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள 150 சுற்றுலா மையங்கள் தொடர்பான ஆவணங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதெனவும், அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் காலத்தில், வடக்கு மாகாணத்தில், சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு, வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஏனைய பிரதேசங்களை போல முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கு வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்துக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் எனவும், ஆளுநர் தெரிவித்தார்.