விவசாயிகளின் கோபத்தை தூண்டியது பாஜக

குடியரசு தினத்தன்று விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் டில்லியில் சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் 100இக்கும் மேற்பட்ட பொலிஸார் காயமடைந்தனர்.

விவசாயிகள் தரப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பேரணியில் விவசாயிகளில் ஒருதரப்பினர் டில்லி செங்கோட்டைக்குச் சென்று விவசாயிகளின் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்துக்கு பாஜக உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் சிவசேனா கட்சி தனது அதிகாரபூர்வ நாளேடேனா “சாம்னா”வில் டில்லி வன்முறை குறித்து தலையங்கம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த சம்பவங்களுக்கு ஒருவரும் ஆதரவு அளிக்கமாட்டார்கள். டில்லி சிங்கு எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை பாஜக கூறி வருகிறது. டில்லி எல்லைக்குள் விவசாயிகள் நுழைவது என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது, விவசாயிகள் போராட்டம் தீவிரவாதிகளின் கரங்களுக்குச் சென்றுவிட்டது என்று பாஜகவின் உளவுத்துறை கூறுகிறது.

டில்லி செங்கோட்டையில் சென்று கொடியேற்றிய ஒருபிரிவினர் தீப் சித்து எனும் இளைஞர் தலைமையில் சென்றுள்ளனர். தீப் சித்து என்பவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆகியோரின் பாசறையைச் சேர்ந்தவர். பஞ்சாப் பாஜக எம்.பி. சன்னி தியோலின் நெருங்கிய உறவினர் தீப் சித்து என்பது குறிப்பிடத்தக்கது.