ஹைபிரிட் நீதிமன்றம் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும் – ஐ நா ஆணையாளர்

(சாகரன்)

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளில் ஹைபிரிட் நீதிமன்றம் ஊடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க சிறந்த கட்டமைப்பு எதுவும் கிடையாது, உள்நாட்டு நீதிமன்றக் கட்டமைப்பின் ஊடாக போர்க் குற்றச் செயல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்த முடியாது. எனவே முன்னர் வலியுறுத்தியதனைப் போன்றே சர்வதேச பங்களிப்புடன் கூடிய விசாரணைப் பொறிமுறை, அதாவது கலப்பு நீதிமன்ற முறைமை பொருத்தமானதாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.முடிவு தமிழ் மக்களுக்கு சாதகமானதாக தோற்றம் அளித்தாலும் இது ஒரு வகையில் எற்கனவே திட்டமிட்ட அரசியல் பின்னணியில் அதுவும் அமெரிக்க அரசு போன்ற பின்னணியுடன் உருவாக்கப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இறுதியுத்தத்திலும் இதற்கு பின்னரான இலங்கைக்கு ஆதரவழித்துவரும் சீனா ரஷ்யா கியூபா போன்ற நாடுகளை குப்புற விழ வைக்க செய்யும் முயற்சிகளின் ஒரு வடிவமாகவும் இதனைப் பார்கலாம். அதுவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பன் சவூதியின் தலைவர் ஒருவர் அமெரிக்காவின் விருப்பை நிறைவேற்றாமல் வேறு எதை செய்ய முயலுவார் என்பதை சீர் தூக்கிப் பார்காமல் இருக்க முடியவில்லை.