30வது நினைவுதினம்…..

தோழர் மதன்லால் அவர்கள் 1983ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து கல்வியைத்துறந்து போரடப்புறப்பட்ட ஆயிரக்கணக்கான போராளிகளில் அவரும் ஒருவர்.EPRLF இன் இணுராவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையின்( PLA) இராணுவப்பயிற்சி பாசறையில் பயின்று களத்தில் நின்று போராடியவர். புலிகளால் தடைசெய்யப்படும்வரை பல்வேறு இராணுவ நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொண்டவர்.இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து திருமலை மாவட்டத்தில் தோழர் ஜோர்ஜ
தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அரசியல் பணிகளில் தன்னை இணைத்துக்கொண்டு பயணித்தவர். குறிப்பாக வடகிழக்கு மாகாண சபை தேர்தலைத்தொடர்ந்து திருகோணமலையில் மாகாண அரசை நிறுவி இயங்கச் செய்வதில்லும் அதற்கான கட்டுமானப் பணிகளை உருவாக்குவதிலும், அதைப்பாதுகாப்பதிலும் பங்களிப்பை செலுத்தியவர்.இவரைப்போன்றே இதில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய தோழர்களும் போராட்ட காலத்திலும்சரி ,அதன்பின்பான இந்திய ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர்கள் மரணிக்கும் வரை திருமலை மாவட்டத்தில் தமது பணிகளை மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.