மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்

சென்னை வெள்ள நிவாரணப் பணிகளில், மக்கள் தாமாகவே முன்வந்து ஒருவருக்கொருவர் உதவுவதைக் காணலாம். மதம், சாதி வேறுபாடுகள் கடந்து, மனிதநேயத்துடன் உதவுகின்றனர். இயற்கைப் பேரழிவுகள் எத்தனை துயர் மிக்கதாயினும், மனிதர்கள் யாவரும் ஒரே இனம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றன.

(“மக்களிடம் மதம் இனங்களைக் கடந்த மனித நேயம்” தொடர்ந்து வாசிக்க…)

பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை

சென்னையில் பேரிடர் நிகழ்ந்து, 48 மணி நேரமாகியும் பாதிக்கப்பட்ட மக்கள், உதவிக்காக கட்டடங்களின் மேல் காத்திருபது, பேரிடர் மேலாண்மை தோல்வி அடைந்துவிட்டதை காட்டுவதாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேதனை கருத்துகள் பரவி வருகின்றன. மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், முகநுால் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளதாவது:

(“பேரிடர் மேலாண்மை தோல்வி – பொன்ராஜ் வேதனை” தொடர்ந்து வாசிக்க…)

முன்னாள் புலிகள் நால்வர் விடுவிப்பு

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், அவர்களுடைய உறவினர்களிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்தே அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஒருவருட புனர்வாழ்வுக்கு பின்னர் அந்த நால்வரும் விடுவிக்கப்பட்டதுடன் கணினி பயிற்சிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன. இந்த புனர்வாழ்வு முகாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 50 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

‘சென்னை மக்களுக்கு எனது அனுதாபங்கள்’

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இந்தக் கடினமான சந்தர்ப்பத்தில் நாமும் இணைகின்றோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் வலைத்தளத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். சென்னையில், கடந்த சில தினங்களாகப் பெய்த் கடும் மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிப்படைந்துள்ளதுடன், 269பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாராயணன் மீதான தாக்குதல் மோசமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கள்ளமௌனங்கள் கலையட்டும்
“இந்தியாவின் இலங்கை அகதிகள் எதிர்காலம”; எனும் தலைப்பில் 4.11.15 அன்று அரசியல் மற்றும் பொது கொள்கைகளுக்கான தி இந்து மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கு சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அக்கடமியில் நடைபெற்றது.இதில் இந்த நிகழ்வானது இந்து குழுமத் தலைவர் ராம் அவர்கள் தரைமையில் நடைபெற்றது.இதில் ஈழ ஏதியிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் பொருளாளர் சந்திரஹாசன் ஐயா,”பிரண்ட் லைன”; பத்திரிகை மூத்த துணை ஆசிரியர் ஆர்.கே.ராதாகிரு~;ணன் முன்னாள் தேசிய பாதுககாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

(“முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நாராயணன் மீதான தாக்குதல் மோசமானது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” தொடர்ந்து வாசிக்க…)

தொடரும் அடாவடித்தனங்கள், அராஜகங்கள்!

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அருகிலுள்ள விடுதியொன்றில் பகல்வேளை சடுதியாக உள்ளே நுழைந்த வாலிபர்கள் குழுவோன்று, அங்கே அறையொன்றில் தங்கியிருந்த வயதுக்கு வந்த ஆணையும் பெண்ணையும் மிரட்டிக் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்கிறார்கள். பெண் அந்த வாலிபர்களிடம் ‘அண்ணை, அண்ணை’ என ஏதேதோ சொல்லி மன்றாடுகிறாள், கதறுகிறாள், தனது ஊரைச் சொல்கிறாள், வீடியோ எடுக்க வேண்டாமெனக் கெஞ்சுகிறாள். அப்போது வாலிபர்களில் ஒருவன் அந்தப் பெண்ணோடு நெருக்கமாக நின்று கொண்டிருக்கும் ஆணின் கன்னத்தில் அறைகிறான். அடி விழுந்த பின்னர் அவன் கன்னத்தை பொத்தியபடி நிற்கிறான். அந்தப் பெண் அடிக்க வேண்டாமென அலறுகிறாள். இவ்வளவு கொடுமைகளும் காணொளியாக Youtube இல் பார்க்கலாம்.

(“தொடரும் அடாவடித்தனங்கள், அராஜகங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

செந்தூரனின் மரணமும் சில செய்திகளும்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் இராஜேஸ்வரன் செந்தூரன் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டான். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டங்களில் தமது உயிர்களை நீத்த மாவீரர்களுக்கான நினைவு வாரம் அனுஷ்டிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே, செந்தூரனின் மரணம் நிகழ்ந்திருக்கின்றது.

(“செந்தூரனின் மரணமும் சில செய்திகளும்!” தொடர்ந்து வாசிக்க…)

2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி

தேசிய அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு, நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளது. நிதியொதுக்கீட்டு சட்டமூலமொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

(“2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச்சைக்கொடி” தொடர்ந்து வாசிக்க…)

பட்ஜெட் பாஸ்

2016ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.அதில், திட்டத்துக்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் 107 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய வாக்கெடுப்பின் போது 13 உறுப்பினர்கள் சமூகமளிக்கவில்லை.

1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்

1988 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விவாதிக்கத் தயார் என, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அநுர குமார திஸாநாயக்க, நேற்று(02) யோசனை தெரிவித்தார். 1988, 1989ஆம் ஆண்டு காலப்பகுதியில், மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்த அநுர குமார திஸாநாயக்க, அதே காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்ட வன்முறைகள் குறித்து விவாதிக்க தயார் என்றால், தாமும் விவாதம் மேற்கொள்ள தயார் என குறிப்பிட்டார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி குறித்த காலப்பகுதியில் அரசியல் வன்முறைகளில் ஈடுபட்டதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

(“1988, 1989 சம்பவங்களை விவாதிக்க தயார்” தொடர்ந்து வாசிக்க…)