அரசுக்கு எதிராக மஹிந்த அணி!

தேசிய அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பில் மாபெரும் மக்கள் எதிர்ப்பு கூட்டமொன்றை நடத்துவதற்கு பொது எதிரணி எனத் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் மஹிந்த ஆதரவு அணியினர் தீர்மானித்துள்ளனர். நல்லாட்சி அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், அரசுக்கு எதிரான சக்திகளின் செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்வரும் 15 ஆம் திகதி சில அமைப்புகள் இணைந்து கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளன. இதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பங்கேற்கவுள்ளது. இந்தக் போராட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் முகமாகவே 17ஆம் திகதி கூட்டத்தை மஹிந்த அணி ஏற்பாடு செய்துள்ளது.

(“அரசுக்கு எதிராக மஹிந்த அணி!” தொடர்ந்து வாசிக்க…)

மைத்திரிக்கு பதிலடி கொடுக்க மஹிந்த வியூகம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து தனது விசுவாசிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக நீக்கியுள்ளதால் கடும் சீற்றத்தில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்‌ஷ, இதற்கு எவ்வாறு பதிலடிகொடுக்கலாம் என்பது பற்றி பொது எதிரணி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். பத்தரமுல்லை நெலும் மாவத்தையிலுள்ள மஹிந்தவின் மக்கள் தொடர்பாடல் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்த அவசர சந்திப்பில் காமினிலொக்குகே, ரோகித்த அபேகுணவர்தன உள்ளிட்ட மஹிந்த ஆதரவு அணி எம்.பிக்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

(“மைத்திரிக்கு பதிலடி கொடுக்க மஹிந்த வியூகம்!” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்கின்றார்

இம்பால் : மணிப்பூரில் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த இரோம் ஷர்மிளா, நீதிமன்ற காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்பும், தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.

(“உண்ணாவிரதப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்கின்றார்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழில் போராட்டம்!

விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது. மகஸின் சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் 14 அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவுகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாகத் தடுத்துவைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் கொழும்பு விசேட நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் முருகையா கோமகனும் கலந்துகொண்டார்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?

பொறுப்புக்கூறும் பொறிமுறைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக் கூறுவதை தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வல் பரணகம தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட காணாமற்போனோர் குறித்த விசாரணைகள், நேற்றுடன் முடிவடைந்தன.

(“வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை!?” தொடர்ந்து வாசிக்க…)

ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள், முறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்கும் அதிபர் ஆணைக்குழுவின் செயலர் பதவியில் இருந்து லசிலி டி சில்வா திடீரென நீக்கப்பட்டுள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அவர் நேற்று இந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதுபற்றி, சிறிலங்கா அதிபரின் செயலர் பி.பி.அபயகோன் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.

(“ஊழல் விசாரணை ஆணைக்குழு செயலர் பதவி நீக்கம்!?” தொடர்ந்து வாசிக்க…)

தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)

வேலாயதம் வளவு கொலையைத் தொடர்ந்து மீளவும் அவர்கள் தமது ஊர் மீது தாக்குதல் நடாத்தினால் இம்முறை கைக்குண்டை வீசலாம் என தீர்மானித்து கைக்குண்டை தேடிப்போக சில நாட்களுக்குள்ளேயே அதை சுற்றி புற்று கிளம்பிவிட்டது.அதை எடுக்க முடியவில்லை .ஒரு குண்டு கொஞ்சம் தெரியவே அதை துப்பாக்கியால் சுட்டு வெடிக்க வைக்கப்பட்டது.

(“தீண்டாமை ஒழிப்பு போராட்டம்- மந்துவில்(பகுதி 14)” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், மீண்டும் உசாரடைந்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின், முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான், முஸ்லிம் தனி மாகாணம் என்பதாகும்.

(“முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

எமது மக்களின் அபிலாசைகளை தீர்க்காத எந்தவொரு தீர்வையும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அது வடக்கு கிழக்கு இணைந்தாகவும் ஆனால் தமிழ் மக்களை பிரிக்காததாகவும் அமைய வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் சமகால நிலைமைகள் பற்றி அவர் நேற்று திங்கட்கிழமை மாலை விளக்கமளிக்கையிலேயே மேற்படி கருத்தை அவர் வெளியிட்டார். அவர் இங்கு தொடர்ந்து பேசுகையில்,

(“வடக்கு கிழக்கு இணைந்ததாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)

டக்ளஸிடம் விசாரணை?

ஈ பி டி பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சென்னை நீதிமன்றம் காணொளி மூலம் விசாரணைகளை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும் 5ஆம் திகதி இந்த விசாரணைகள் நடாத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினரான டக்ளஸ் தேவானந்தா 1986ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த திருநாவுகரசு என்ற நபரை சுட்டுக் கொலை செய்துள்ளதாகவும், பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

(“டக்ளஸிடம் விசாரணை?” தொடர்ந்து வாசிக்க…)