சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் : ஆர். துரைரெட்ணடம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிற்றூழியர் வெற்றிடங்கள் சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் என்பதுடன் நல்லாட்சியை தவறாக வழிநடத்தும் முறையாகவும் அமையும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்குப் பகிரங்க வேண்டுகோள் என்ற தலைப்பில் ஜனாதிபதிக்கு இன்றைய தினம் (03) ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் அனுப்பி வைத்துள்ள அவசரக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

(“சிங்களம் பேசுகின்ற சிற்றூழியர்கள் நியமிக்கப்படுவதனால் பிரச்சினைகள் பல உருவாவகும் : ஆர். துரைரெட்ணடம்” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறு!

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்திக்கு இராணுவ முகாங்களினால் இடையூறுகள் காணப்படுவதாக யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கிளிநொச்சி நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஆராயும் முகாமைத்துக் குழுவின் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் கூறியுள்ளார்.

(“கிளிநொச்சி நகர அபிவிருத்திக்கு இராணுவ முகாம்களினால் இடையூறு!” தொடர்ந்து வாசிக்க…)

Lankan ministers respond to UK Tamil diaspora concerns in London

For the first-ever time since the civil war ended, a delegation of Sri Lankan ministers met with the UK Tamil diaspora in a public forum and responded to their concerns in London last week. Deputy Foreign Minister Dr Harsha de Silva and Mrs Rosie Senanayake, Deputy Chief of Staff of the Prime Minister’s Office met with a wide gathering of Tamils at a meeting organized by the Non Resident Tamils of Sri Lanka (NRTSL) at Sangam Hall, Burnt Oak, Edgware, Middlesex.

(“Lankan ministers respond to UK Tamil diaspora concerns in London” தொடர்ந்து வாசிக்க…)

விண்துகள்கள் : ‘நாசா’வின் சக்தி வாய்ந்த ராக்கெட்!

அமெரிக்காவிலுள்ள யூட்டா மாகாணத்தின், புரோமோன்டோரி பாலைவனப் பகுதியில், உலகின் மிகப் பெரிய ராக்கெட் உந்து இயந்திரத்தை, ‘நாசா’ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ஆர்பிட்டல் யு.டி.கே.,’ என்ற தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. கடந்த மார்ச், 2015ல், இதே திட எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை வெப்பமூட்டிய நிலையில் வெற்றிகரமாக நாசா சோதித்தது. சமீபத்திய சோதனை மிகவும் குளிரூட்டப்பட்ட நிலையில் நடந்தது. இரு சோதனைகளுமே வெற்றி கரமாக நடந்ததால், இதுவே இறுதி சோதனை. இந்த ராக்கெட் இயந்திரத்திற்கு, 16.33 லட்சம் கிலோ உந்து சக்தி கொண்டது. செப்டம்பர் 2018ல், செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலனையும், 2025ல் மனிதர்கள் உள்ள விண்கலனை ஒரு விண்கல்லின் மீது தரையிறக்கவும், பின், 2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இத்தகைய உந்து இயந்திரங்களையே நாசா பயன்படுத்தும்.

மரண அறிவித்தல் இலவசம்.!!!

சூத்திரம் இணையத்தில் மரண அறிவித்தல்கள் இலவசமாகப் பிரசுரிக்கப்படும்.
அறிவித்தல் பக்கத்தைத் தயார் செய்து கீழ் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
உறுதிப்படுத்துவதற்காக 3 பேர்களின் தொலைபேசி இலக்கங்களையும் இணைத்து அனுப்பவும். நீங்களாகவே பக்கத்தைத் தயார் செய்து அனுப்பும் பட்சத்தில் எவ்வித கட்டணமும் அறவிடப்படமாட்டாது. அறிவித்தல்கள் தொடர்ந்து 3 நாட்களுக்கு  இடம்பெறும்.
அனுப்ப வேண்டிய முகவரி
sooddram3@gmail.com

இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 5)

அநகாரிக தருமபாலர், ஏ.இ.குணசிங்கா போன்றோரைப் பின்பற்றியே டி.பி. விஜயதுங்க சிங்களவர்களை மரத்துக்கும் தமிழர்களை அம்மரத்தைச் சுற்றிப் படரும் கொடிக்கும் அந்தக் கொடிக்கு மரத்துக்கு அப்பால் வாழ்வு இல்லை என்ற கோட்பாட்டை முன்வைத்தார்.

“The majority race should be safeguarded for the livelihood of the minority races. When the tree is safe, the vines can get entangled in it and grow. If the majority race is divided and it seeks the assistance of minority races for power, no fruitful activity could take place.” (Sunday Times, 30 January 1994)

(“இலங்கையின் ஆதிக் குடிகள் நாகர், இயக்கர், வேடர்! சிங்களவர் அல்ல! (Part 5)” தொடர்ந்து வாசிக்க…)

மாதா! பிதா! குரு?

தாய் கடமை தவறினால் அறுசுவை போகும். தந்தை கடமை தவறினால் நல்வாழ்வு போகும். நண்பர் தவறு செய்தால் சமூக அந்தஸ்த்து போகும். ஆனால் ஆசிரியர் தப்புசெய்தால் அனைத்தும் போகும். பசித்த வயிற்றுக்கு புசிக்கத்தராது தாய் தன் நிலை தவறினால் எமக்கு உணவு கிடைக்காது போகலாம். பொறுப்புடன் எம்மை பராமரிக்க வேண்டிய தந்தை கடமை தவறினால் நாம் எதிர்பார்க்கும் நல்வாழ்வு எமக்கு சவாலாகலாம். நண்பர்களின் உன்மத்த செயல், எம்மை ஊரவர் வசைபாடலுக்கு உள்ளாக்கலாம். இத்தனையும் எம்மை தனித்தனியே பாதிக்கும் செயல்களே. ஆனால் எம் அகக்கண் எனும் கல்விக் கண்ணை திறக்கும் ஆசான்கள் நிலை தடுமாறினால், எமக்கு சர்வமும் நாசமே. மாதா! பிதா! குரு! தெய்வம்! எனும் வரிசையில், பெற்றதால் தாய், வளர்ப்பதால் தந்தை என முன்னிலை படுத்தபட்ட போதும், தெய்வத்துக்கு முன், முன்னிலைப் படுத்தப்படுவது குரு. குரு பார்க்க கோடி நன்மை. அப்படியான குருப்பிரமாக்கள் கோலோச்சிய யாழ் மண்ணில் இன்று சில நாசகார நீசர்கள், ஆசிரியர்கள் என்ற போர்வையில் பாடசாலையில் நடத்தும் பாலியல் துன்புறுத்தல் செய்தியால், நாறிக்கிடக்கிறது எம் தாய் மண்.

(“மாதா! பிதா! குரு?” தொடர்ந்து வாசிக்க…)

என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்

யுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

(“என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்” தொடர்ந்து வாசிக்க…)

மரண அறிவித்தல்

திரு நாகமுத்து சிவநாதன்
(சிவம்)
அன்னை மடியில் : 21 யூலை 1954 — ஆண்டவன் அடியில் : 30 யூன் 2016
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவநாதன் அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு

தொழில்களுக்காக மனிதக்கடத்தல் அமெரிக்கப்பட்டியலில் இலங்கை, நான்காவது ஆண்டாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு மனித கடத்தலை மேற்கொள்ளும் நாடுகளில் இலங்கையையும் கண்காணிப்பு பட்டியலில் அமெரிக்கா உட்படுத்தியுள்ளது. அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கையின்படி இலங்கையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொழிலாளர்களாக பலவந்தமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை செய்விக்கப்படுகின்றனர். அத்துடன் பாலியல் கடத்தல்களும் இடம்பெறுகின்றன.

(“மனிதக்கடத்தல்களில் மீண்டும் இடம்பிடித்த இலங்கை – அமெரிக்கா அறிவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)