திராய்க்கேணி படுகொலைகள்

திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும். சிறப்பு இராணுவப் படையினர் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் உதவியுடன் முஸ்லிம்களால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி ( Thiraayk-kea’ni) கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிறப்பு இராணுவத்தினரின் உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம்கள் அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

(“திராய்க்கேணி படுகொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் போதே எமது நாடு இந்தியாவின் கீழ் செயற்பட வேண்டிய நிலையை தோன்றிவிட்டது. எமது நாட்டின் சுயாதீன தன்மையும் இல்லாது போய்விட்டது. எனவே தற்போது ஹனுமான் பாலம் அமைத்தால் இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும் அச்சுறுத்தலான நிலைமை தோன்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

(“இந்தியாவின் 30 ஆவது மாநிலமாக இலங்கை மாறிவிடும்” தொடர்ந்து வாசிக்க…)

பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கவில்லை என்றால், அதனை அச்சமின்றி நாட்டுக்கு தெரியப்படுத்துமாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க சவால் விடுத்துள்ளார். கொழும்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும்போதே அவர் இந்தச் சவாலை விடுத்தார். மகிந்த ராஜபக்ஷ, தனது சகோதரர் பசில் ராஜபக்ஷ மற்றும் கொழும்பில் இருந்து சேறுபூசும் புலியான டிரான் அலஸும் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு பணத்தை வழங்கினர். இதனை நாங்களும் அறிந்திருக்கவில்லை.

(“பிரபாகரனுக்கு மகிந்த 8,000 இலட்சம் ரூபா வழங்கினார் ஆதாரம் அமைச்சர் கையில்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம்.

உலககம்யூனிஸ‬ இயக்கத்தின் தோழர்களில் முக்கியதோழரான தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம். ஆகஸ்ட்13. உலகில் அதிகமாக கரும்பு விளையும் நாடு கியூபா ஆகையால் அதனை உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கிறோம். அந்த நாட்டில் பிறந்த அருமை தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவின் அருகில் கியூபாவை ஒரு சோசலிஸ நாடக உருவாக்கிய பெருமைக்கு சொந்தகாரர் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ.

(“தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம்.” தொடர்ந்து வாசிக்க…)

உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”

 

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளுக்குள் கடந்த வருடம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அரசு தலைவர்களுடன் பேச்சுக்கள் நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஆர்.சம்பந்தன், சிறைக் கைதிகளிடம் நேரடியாக உறுதியளித்திருந்தார்…

(“உறுதி… உறுதி… உறுதி… How many times “உறுதி…?”” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……

அவர்களை இன்னும் இன்னும் உசுப்பேத்தி விடடவர்களும் ,,புகழ்ந்து அவர்களை பலிக்கடா ஆகியவர்களும்….

இன்று புலம்பெயர் தேசங்களிலும் ,,இலங்கையிலும் இருந்து கொண்டு ????

புலிகள் செய்தது அது பிழை ,,,இது பிழை என்று டிவி நிகழ்ச்சிகளும் ,,பத்திரிகையியிலும் விளாசி தள்ளுகிறார்கள்….

அரசியல்வாதிகள் மாறி மாறி !!!!!

புலிகளை விமர்ச்சிப்பதும் பின்பு தியாகிகள் என்று சொல்வதும் தொடருகிறது…..

(“இலங்கையில் புலிகள் பலமாக இருந்து போராடியபோது……” தொடர்ந்து வாசிக்க…)

வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி

வடமாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக, பொதுமக்களால் பல குற்றச்சாட்டுகள், முதலமைச்சரிடம் ஆதாரங்களுடன் கையளிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, குறித்த அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு, இளைப்பாறிய நீதிபதிகளைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், மாகாண சபை அமர்வில் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொது நூலகக் கேட்போர்கூடத்தில், நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் மக்கள் பேரவையின்; ஐந்தாவது கூட்டத் தொடரின் பின்னர், ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

(“வடமாகாண அமைச்சர்களுக்கு பாரிய நெருக்கடி” தொடர்ந்து வாசிக்க…)

இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி

வடக்கிலும் கிழக்கிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட இரண்டு முக்கியமான கூட்டங்களில், வடக்கு கிழக்கை இணைப்பது தொடர்பிலான யோசனைக்கு, ஏட்டிக்குப் போட்டியான வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் பேரவையின் ஐந்தாவது கூட்டத் தொடர், யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது. இதேவேளை, கிழக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்களின் சம்மேளனத்தின் மாநாடும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனை அஸாத்பிளாசா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

(“இணைப்பு விவகாரம் வடக்கிலும் கிழக்கிலும் ஏட்டிக்குப் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)

சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.

இதை எல்லாம் அரசியல் அரங்குக்குக் கொண்டு வந்தவர்களும் பைத்தியக்காரர்கள் தான்.  தமிழர் விடுதலை போராட்டம் தொடர்பில்இதவறான எண்ணப்பாட்டில் அனந்தி சசிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாகஇ விடுதலைப் போராட்டம் குறித்து சிங்களவர்களால் எழுதப்பட்ட சில புத்தகங்களை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அவர்கள் மீது போர் தொடுக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.

(“சிங்களவர்களிற்கு எதிராக போர் தொடுக்கும் நிலை ஏற்படும் – அனந்தி எச்சரிக்கை.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்

எவ்விதமான விசாரணைகளும் இன்றி, சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், இன்று திங்கட்கிழமை(08), அடையாள உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு கையளிக்குமாறு கடிதமொன்றையும் கடந்த சனிக்கிழமையன்று அனுப்பிவைத்துள்ளனர்.

(“தமிழ் அரசியல் கைதிகள், இன்று உண்ணாவிரதத்தில் குதித்தனர்” தொடர்ந்து வாசிக்க…)