பற்குணம் A.F.C (பகுதி 81 )

பற்குணம் யாழ்ப்பாணத்தில் வேலை செய்வது என்பது உயிரைப் பணயம் வைத்து செயலாற்றுவது போன்று இருந்தது.இராணுவம் முகாம்களில் முடக்கப்பட்டிருந்த காலம்.உணவுக் களஞ்சியங்கள் துறைமுகம் என்பன இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன.

(“பற்குணம் A.F.C (பகுதி 81 )” தொடர்ந்து வாசிக்க…)

‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’

“நிலைத்தன்மையற்ற கோமாளி அரசியலை எப்போதும் செய்யும் வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு பதிலளிக்க, நான் விரும்பவில்லை. என்றாலும், இவரது போக்கிரித்தனமான கருத்துகள் ஒரு சிலரைகூட தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்பதால், இந்த பதிலை தர விரும்புகிறேன்” என என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(“‘சிவாஜிலிங்கத்தைப் பற்றி ஆராய்ந்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும்’” தொடர்ந்து வாசிக்க…)

அம்மானுக்கு விளக்கமறியல்

கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டார். அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட ​ போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

அன்புடன் தமிழ் மக்களுக்கு,

நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக கட்சிக்காக அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.” தொடர்ந்து வாசிக்க…)

அம்மாவிற்கு அன்பு மடல்

அம்மாவிற்கு
அன்பு மடல்
எழுதி வைத்துவிட்டு
பொழுது சாயும் முன்னே
போனவன் இன்னும்
வீடு திரும்பவில்லை……

(“அம்மாவிற்கு அன்பு மடல்” தொடர்ந்து வாசிக்க…)

பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர்

கியூபாவின் முன்னாள் பிரதமர் பிடல் காஸ்ட்ரோவின் மரணத்துக்கு, கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்த அஞ்சலி மூலமாக, சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ட்ரூடோவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

(“பிடல் காஸ்ட்ரோவின் மரணம்: அஞ்சலியால் சர்ச்சையில் கனேடியப் பிரதமர்” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சி தாதா சிறீதரன் ஏற்றிய சுடரும் அவரின் எதிர்தரப்பின் ஒற்றைப் பரிமாண எதிர்ப்பும்

கிளிநொச்சியின் தாதா சிறீதரன் எம்.பி கனகபுரத்தில் மாவீரர் தின நிகழ்வில் வேட்டியுடன் விளக்கேற்றிய அவலம் மரணித்தவர்களை மீண்டும் கொலை செய்ததாக இருந்தது! விதவைகளுக்கு புலம்பெயர் நாடுகளிலிருந்து நிதி வழங்க முற்பட்ட சிறிய குழு ஒன்றிடமே 20 வீதத்தை தரகுப் பணமாகக் கேட்ட சிறீதரன் எம்.பியும் அவரது அடியாள் குழுக்களும் சுருட்டும் பணத்தை சிறீதரன் ஏற்றிய நெருப்பு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு புறத்தில் இலங்கை அரசபடைகளின் நண்பன், மறுபுறத்தில் வாக்குப் பொறுக்குவதற்காக மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் தேசியவாதி என்ற முகங்களைக் கொண்ட சிறீதரன் போன்றவர்கள் தீபம் ஏற்றும் போது இலங்கை அரசே மாவீரர் தினத்தை ஒழுங்குபடுத்தினாலும் வியப்பில்லை.

(“கிளிநொச்சி தாதா சிறீதரன் ஏற்றிய சுடரும் அவரின் எதிர்தரப்பின் ஒற்றைப் பரிமாண எதிர்ப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!

ஆங்காங்கே நடந்த வாள்வெட்டு போன்ற ஒருசில அசம்பாவிதங்கள் தவிர, ஈழ விடுதலை போரில் தம்மை ஆகுருதியாக்கிய போராளிகளின் நினவு கார்த்திகை தீப ஒளி ஏற்றும் நிகழ்வு முடிந்துவிட்டது. இனி அடுத்த கார்த்திகை மாதம் மட்டும் மௌனிப்பதும், மீண்டும் நினைவு கூருவதும் தொடரும். ஒருவர் முகநூலில் இட்ட பதிவில், கடைசி தமிழன் இருக்கும் வரை கார்த்திகை மாத நினைவு கூரல் தொடரும் என்கிறார். சாசுவதமான உண்மை. உயிர் நீர்த்த தங்கள் உறவுகளை என்றும் எவரும் மறக்க மாட்டார். அவர்களின் விளையும் பயிரை முளையில் பறிகொடுத்த மனத்தாக்கம், அவர்கள் மடியும் வரை நீடிக்கும்.

(“எல்லோர்க்கும் எல்லோரையும் பிடிக்கும் நாள்!” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 80 )

பற்குணம் யாழ்பாணத்தில் பொறுப்பேற்றபோது அரச நிர்வாகம் செயலிழந்து இருந்தது.ஆயுத குழுக்களின் தலையீடுகள் அதிகமாக இருந்தன.அரசாங்க வாகனங்களை ஆயுத குழுக்கள் பறித்து தமது தேவைகளுக்கு பாவித்தனர்.பொதுவாக எந்த அமைப்புக்கும் அரச நிர்வாகம்,அந்த அதிகாரிகளின் தேவைகள் என்பவற்றை புரிந்துகொள்ளவில்லை.அரச அதிபர் பஞ்சலிங்கம் கூட வாகனம் இன்றி அவஸ்தைப் பட்டார்.

(“பற்குணம் A.F.C (பகுதி 80 )” தொடர்ந்து வாசிக்க…)

‘கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது’

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் அரசியல் ரீதியாக இணைந்து செயற்படுவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த இரு அமைப்புகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றுப்பட்டு செயற்பட முடியும் என எதிர்பார்க்கின்றேன் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

(“‘கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது’” தொடர்ந்து வாசிக்க…)