தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!

தமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு கொழும்பில் நேற்று 22/11/16 அன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றவாத அரசியல் தலைமை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வெற்றிடத்தைப் பிரதியிடுவதற்கு முனைந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோல்வியடைந்த போது அதற்கு மாற்றாகத் தோற்றுவிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவை. ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள், தமது அரசியல் பினாமிகளை உருவாக்கும் நோக்கத்துடன் 2015 ஆம் ஆண்டு மாவை சேனாதிராசாவை அழைத்துப் பேச்சுக்கள் நடத்தின. அப் பேச்சுக்களின் அடிப்படையில் புலம்பெயர் அமைப்புக்கள் தாம் சுட்டுவிரலை நீட்டும் சிலரை கூட்டமைப்பின் வேட்பாளர்களாக நியமிக்குமாறு கேட்டுக்கொண்டன. அதற்கு கூட்டமைப்பு இணங்க மறுத்ததன் பின்புலத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கான பிரச்சாரமும் நிதித் திரட்டலும் புலம்பெயர் நாடுகளில் முடுக்கிவிடப்பட்டன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேர்தலில் படு தோல்வியடைந்ததும், மீண்டும் ஜேர்மனியில் ஒன்று கூடிய அமைப்புக்கள் தமிழ் மக்கள் பேரவையைத் தோற்றுவித்தன. இதுவே தமிழ் மக்கள் பேரவைக்கான தோற்றத்தின் அடிப்படை.

(“தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் இருப்பும் : மறைக்கப்படும் உண்மைகள்!” தொடர்ந்து வாசிக்க…)

சைப்ரஸ்: அமைதியைத் தேடி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை.  எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை.

(“சைப்ரஸ்: அமைதியைத் தேடி” தொடர்ந்து வாசிக்க…)

ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் மீது, 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதியன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டபோது, செனவிரத்ன என்ற சந்தேகநபர், கறுப்புநிறப் பையினுள் ரி-56 ரகத் துப்பாக்கியை வைத்து எவ்வாறு சுட்டார் என்பதை, முதலாவது சாட்சியாளரான மனம்பேரிகே பிருதிவிராஜ் சம்பத், கொழும்பு மேல்நீதிமன்றத்தில், நேற்று வியாழக்கிழமை செய்துகாட்டினார்.

(“ரவிராஜ் எம்.பி கொலை வழக்கு: சுட்டுக் காட்டினார் சாட்சியாளர்” தொடர்ந்து வாசிக்க…)

தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை

  • மக்கள் தொழிலாளர் சங்கம் ஆணையாளருக்கு அறிவிப்பு

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா அச் சங்கத்தின் சார்பாக தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள 2016.11.18ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம், 18 மாதங்கள் கழிந்த பின்னர் 500/= அடிப்படை சம்பளம் உட்பட 730/= சம்பள உயர்வுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்பு (legitimate expectation), இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற உரிமைகள் (Acquired or existed rights) என்பற்றுக்கு எதிராக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு சட்ட அந்தஸ்த்தினை வழங்க வேண்டாம் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஒப்பந்தத்தின் தர்ப்புகளான கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்து தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள சரத்துக்களை நீக்கி சட்ட பூர்வமானதும், நியாயமானதும் ஒப்புறவானதுமானதுமான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அதனை இரு வார காலத்தினுள் செய்ய தவறுமிடத்து கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட பாதுகாவலனாக இருக்கும் தொழில் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

(“தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 78 )

முல்லைத்தீவில் ஞானசந்திரன் பல நெருக்கடிகள் கொடுக்க நினைத்து தோல்விகளையே கண்டார்.இந்த காலங்களில் இலங்கையின் இனப்பிரச்சினைகள் தொடங்கின.பல அமைப்புகள் மறைமுகமான தொடர்புகள் கொண்டபோதும் அவரகள்மீதான நம்பிக்கைகள் அவருக்கு ஏற்படவில்லை .அவரகளின் தேவைகளை நிறைவேற்றியிருக்கிறார்.ஆரம்பகாலங்களில் சந்ததியார் தங்கதுரை மூலமாக அறிமுகமானவர்.பாலகுமார் பல்கலைக்கழகத்தில் இவரின் மாணவர்.அதேபோல பத்மநாபாவும் வேறுவகைகளில் அறிமுகமானவர்.

(“பற்குணம் A.F.C (பகுதி 78 )” தொடர்ந்து வாசிக்க…)

மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம்

(வியாசன்)
ஈழத்தில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம் எவ்வளவு தியாகங்களையும் அர்ப்பணங்களையும் எமக்கு முன்னால் விட்டுச் சென்றிருக்கிறதோ அதே அளவிற்கு தனிநபர் பயங்கரவாதம், உட் கட்சிப் படுகொலைகள், அதிகாரவர்க்க அரசியல் என்ற அனைத்தையுமே தன்னகத்தே கொண்டிருந்தது. அன்னிய அரசுகள் போராட்டத்தின் எச்ச சொச்சங்களே தெரியாத அளவிற்கு அழித்துத் துடைத்தெறிவதற்கான அடிப்படைகளே அவற்றிலிருந்து தான் ஆரம்பமானது.

(“மாவீரர் தினம் – அழித்தவர்களே நடத்தும் அவமானகரமான களியாட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

சமஷ்டியே எமக்கு தேவை

‘எழுக தமிழ்’ஆனது மக்களுக்கான ஒரு அமைப்பு அதில் சமூக அக்கறைக் கொண்டவர்களே உள்ளனர். எனினும் அதன் நடவடிக்கையை தெற்கில் திரிபுபடுத்தி கூறிவிட்டனர். வடக்கு மக்களின் அபிலாஷைகளை உலக்குக்கு எடுத்துக் காட்டும் நடவடிக்கையையே நாம் முன்னெடுத்திருந்தோம்’ என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார். வடக்கு- தெற்குக்கான கலந்துரையாடல்’ எனும் ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை மன்றக் கல்லூரியின் இன்று மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் கேள்விகளுக்க பதிலளிக்கையில் விக்கனேஸ்வரன், இதனைக் கூறினார்.

(“சமஷ்டியே எமக்கு தேவை” தொடர்ந்து வாசிக்க…)

புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.

தோழர்பத்மநாபா அன்னை இந்திராகாந்தி ஆகியோரின் பிறந்த நாளான நவம்பர் 19 அன்று புழல் முகாமில் உள்ள தமிழர் சமூக ஜனநாயகட்சியினர் அங்கு அதனை அனுஸ்டித்தனர். தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் தோழர்கள் தோழர்பத்மநபா அவர்களின் குணநலன்கள்.அவர் மனிதநேயத்துடன் நடந்து கொண்டது,,அவரில் பொதிந்துள்ள மனிதநேயம், உலகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் மீது அவர் கொண்டிருந்த கரிசனை பேர்ன்றவற்றை விளக்கி துண்டு பிரசுரம் வழங்கியதுடன் முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பும் வழங்கினர்.முகாமில் உள்ள பள்ளி மாவணவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார்

பழம்பெரும் கர்னாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவால் சென்னையில் செவ்வாய்கிழமை காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு கலையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

(“பழம்பெரும் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா காலமானார்” தொடர்ந்து வாசிக்க…)

தீவகத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் மீதுதாக்குதல் இருவருக்கு சர்வதேச பிடியாணை

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் வழக்கு எதிர்வரும் 2 ஆம் திகதிவரை தொடர்ச்சியாக விசாரிக்கப்ப டவுள்ளதுடன் இத் தாக்குதலுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு சர்வதேச பிடியாணையையும் பிறப்பித்தார் யாழ் மேல் நீதி மன்ற நீதிபதி இளஞ்செழியன். கடந்த 28-11-2001 அன்று யாழ். தீவகப்பகுதிக்கு தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்றவேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு இன்றைய தினம் (21/11/2016) யாழ் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

(“தீவகத்தில் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் மீதுதாக்குதல் இருவருக்கு சர்வதேச பிடியாணை” தொடர்ந்து வாசிக்க…)