யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின் போராட்டம்” தளர்வை நோக்கிச் சரிந்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம் கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் வைத்துப் பொலிசாரினால் கொல்லப்பட்ட மாணவர்கள் கஜன், சுலக்ஸன் ஆகியோரின் மரணத்துக்கு நீதியான தீர்வு கிட்டும்வரை பல்கலைக்கழக இயக்கத்தை தவிர்ப்பது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் விடுத்திருந்தனர். இந்த அறிவிப்பு பகிரங்க வெளியில் வந்தபோது பல்கலைக்கழக நிர்வாகமோ, மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளோ மாற்று அபிப்பிராயங்களையும் மறுப்புகளையும் தெரிவித்திருக்கவில்லை. ஆகவே, “நீதி கிடைக்கும்வரை இயங்கா மறுப்பு நடவடிக்கை“ அநேகமாக வெற்றியடையும் என்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி, பின்னர் நடந்த நிகழ்ச்சிகள் அமையவில்லை.

(“யாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.

நாம் த‌மிழ‌ர் அல்ல‌து “நாம் நாஸிக‌ள்” க‌ட்சியின‌ரின் க‌ம்யூனிச‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ம்.‌ இது ஏற்க‌ன‌வே நாஸிக‌ளால் புனைய‌ப் ப‌ட்ட‌ பொய்ப் பிர‌சார‌ம். ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் விஷ‌ம‌த்த‌ன‌மாக‌ திரிக்க‌ப் ப‌ட்டுள்ள‌ன‌.

(“எல்லா கம்யூனிஸ்டுகளும் யூதர்களின் சேவகர்கள் அல்ல. ஆனால் யூதர்கள் இன்றி கம்யூனிசம் என்ற ஒன்றே அமைந்திருக்காது.” தொடர்ந்து வாசிக்க…)

‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!

கார்த்திகை பிறந்தால் போதும். முகப்புத்தக மாவீரர்களின் துன்பம் தாங்க முடியாது.

மே மாதம் என்றவுடன் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு நடத்தும் அதே கூத்து, கார்த்திகையில் திரும்பவும் தொடரும். முள்ளிவாய்க்கால் தினத்திற்கு, இணையத்தில் அகப்பட்ட, கண் கொண்டு பார்க்க முடியாத படங்களைப் போட்டு சர்வதேசத்திடம் நீதி கேட்டு தமிழுணர்வாளர்கள் போராட்டம் நடத்துவார்கள். தமிழில் இருக்கும் இவர்களின் முகப்புத்தகப் பதிவுகளைப் பார்த்து சர்வதேசம் இன அழிப்பு விசாரணை நடத்தும் என்பதில் இவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. மறுபுறத்தில் இன அழிப்பா, இனப்படுகொலையா என்று தங்களுக்குள்ளேயே குடுமிப் பிடிச் சண்டையும் நடத்துவார்கள்.

(“‘முகப்புத்தக’ மாவீரர் மாதம்!” தொடர்ந்து வாசிக்க…)

மனத்தைத் தொட்ட பதில் இது!

ஆயுதங்கள் மௌனமாக்கப்பட்ட பின்பு தமிழகத்திற்கு, “தமிழர் பிரதேசமும் தமிழர்கள் போராட்டமும்” கலை இலக்கியம் என்ற பெயரில் நல்ல சந்தையானது என்பது மிகவும் உண்மை. 2009ல் போர் முடிவுக்கு வர 2010ம் ஆண்டு சென்னைப்புத்தக விழாவிற்கு விற்ற புத்தகங்களில் அதிகளவு ஈழப்பிரச்சனைகள் பற்றியும் மாவீரர்கள் பற்றியதும். அதற்கு அடுத்ததாக கலைஞர்களின் படையெடுப்புகள்.

(“மனத்தைத் தொட்ட பதில் இது!” தொடர்ந்து வாசிக்க…)

தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்

எந்த யுத்தம் முடிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தி தங்கள் வீரத்தை மெச்சி பெருமை கொண்டு களிகூர்வது வழமையானது. கைப்பற்றிய ஆயுதங்கள் முதல் எதிரிகளின் உடல்கள் வரைக்கும் கண்காட்சிக்கு வைத்துப் பெருமை கொண்டாடியதெல்லாம் நாங்கள் கண்ணால் கண்டவையே!

(“தேசியத் தலைவரும் செந்திலின் வாழைப்பழமும்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் கனவு

(மொஹமட் பாதுஷா)

சொந்த மண்ணில் வாழக் கிடைப்பது என்பது ஒரு வரமும் கொடுப்பினையுமாகும். ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊர் போல வராது’ என்பார்கள். அதுபோலவே,இலங்கையில் பிறந்த யாராவது அமெரிக்காவிலோ, லண்டனிலோ அல்லது கனடாவிலோ மிகவும் சந்தோசமாக, பணம் படைத்தவராக, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் அவரது மனதில் தனது தாய்மண் பற்றிய நினைவுகள் இருந்து கொண்டேயிருக்கும்.

(“வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றக் கனவு” தொடர்ந்து வாசிக்க…)

குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார்

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர், கடந்த மாதம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்துக்குப் பின்னர், ‘ஆவா குழு’, ‘பிரபாகரன் படை’ என்ற பெயர்களில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் தமிழ்ப் பொலிஸாரே முக்கியமாகக் குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

(“குறிவைக்கப்படும் தமிழ்ப் பொலிஸார்” தொடர்ந்து வாசிக்க…)

‘சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்’

கொக்குவில், குளப்பிட்டியில் உயிரிழந்த மாணவர்களில் விஜயகுமார் சுலக்ஸன் (வயது 24), துப்பாக்கிக் குண்டு பட்டு உயிரிழந்ததுடன், மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த மற்றைய மாணவரான கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது 23), விபத்தால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்தரன், மரண விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

(“‘சுலக்ஸன் சுடப்பட்டார், கஜன் விபத்தில் உயிரிழந்தார்’” தொடர்ந்து வாசிக்க…)

ஈ.பி.டி.பி – புளொட் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டன: கோத்தா

முன்னைய அரசாங்க காலத்தில் ஈ.பி.டி.பி,புளொட் போன்ற அமைப்புகள் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கை இராணுவமோ, இராணுவப் புலனாய்வுப் பிரிவோ, ஆவா குழு போன்ற குழுக்களை உருவாக்க வேண்டிய காரணம் ஏதும் இல்லை.

(“ஈ.பி.டி.பி – புளொட் துணை ஆயுதக்குழுக்களாக செயற்பட்டன: கோத்தா” தொடர்ந்து வாசிக்க…)