கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!

“அப்படி விசாரிக்கும் போது, தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தை மேடையில் வைத்துக் கொண்டு, அவரது ஆட்சேபனை எதுவும் இல்லாமல், “தமிழ் துரோகிகளுக்கு இயற்கை மரணம் கிடையாது” என்று பேசிய அன்றைய தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர்களின் (மாவை சேனாதிராசா, வண்ணை ஆனந்தன் போன்றவர்கள் அன்றைய பிரபல தலைவர்கள்) உரைகள், எப்படி புலிகளின் மிக மோசமான அராஜகம் வரை இட்டுச் சென்றது என்பதை வரலாறு பதிவு செய்வதுடன், சுமந்திரன் இன்று அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும்.

(“கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு கல்லெறியும் சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியானது! ஈழத்தமிழர்கள் அதிர்ச்சியில்

ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈழத்தமிழர் தரப்புக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்த்திருந்த குறித்த அறிக்கை, தமிழர்களுக்கு பெரும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. இதில் இலங்கை அரசை காப்பாற்றும் வகையிலேயே இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவில் நிகழும் இடங்களாக எமது பிரதேசங்கள் மாறியுள்ளன. பெண்கள் சிறார்களுக்கான சமூக பாதுகாப்பு அச்சம் தரும் வகையில் குறைந்துள்ளது. ஆளரவமற்றுப்போகும் ஊர்கள் என்பன பெண்களுக்கெதிரான வன்முறைகளின் களமாக மாறுகின்றன.
கைக்கோடரி வாள் வீச்சு கோஸ்டிகள் பொதுவாக சமூகத்திற்கு மாத்திமல்ல குறிப்பாக பெண்களுக்கெதிரான வன்முறைகளை இலக்காக கொண்டவை.

(“அடிமைத்தனத்திலிருந்து விடுதலை நோக்கி——-” தொடர்ந்து வாசிக்க…)

எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?

அண்மைக்காலமாக மாணவர்களின் அரசியல் பார்வை அவர்களை எடுப்பார் கை பிள்ளை நிலைக்கு உட்படுத்டுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைமையை மட்டும் விமர்சிப்பது முதல், சர்வதேச அரசியலில் முதிர்ச்சி உள்ளவர் போல அவர்கள் பேசும் பேச்சுக்களே அவ்வாறு எண்ணத் தூண்டுகிறது.

(“எழுபதுகளில் இருந்து மாறுபட்ட இன்றைய மாணவர் செயல்!?” தொடர்ந்து வாசிக்க…)

வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை

(கருணாகரன்)

வேலைகோரும் பட்டதாரிகள் வீட்டிலும் வீதியிலுமாக நிறைந்து போயிருக்கிறார்கள். படித்துப் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கவில்லை என்றால், அவர்களால் என்ன செய்ய முடியும்? வேலை கேட்டுப்போராடுவார்கள். இந்தப் போராட்டத்தைப் பற்றி அரசாங்கம் அக்கறைப்படவில்லை என்றால், அதைக் கோவிப்பார்கள், அரசாங்கத்துக்கு எதிராகக் குரல் எழுப்புவார்கள். கூடவே தங்களுக்கு முன்னே உள்ள அரசியல்வாதிகளையும் அதிகார அமைப்புகளையும் எதிர்ப்பார்கள். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.

(“வேலையில்லாதவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உற்பத்திசார் பொருளாதார கொள்கைகளே தேவை” தொடர்ந்து வாசிக்க…)

ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.

தேசத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.

(“ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.” தொடர்ந்து வாசிக்க…)

கூவல்!

(எஸ். ஹமீத்)
குயில் கூவுகிறது…
அகம் மகிழ்கிறது!
குழந்தை கூவுகிறது…
அரவணைப்பு கிடைக்கிறது!
வியாபாரி கூவுகிறான்…
விற்பனை நடக்கிறது!
அரசியல்வாதி கூவுகிறான்…
வாக்குகள் சேர்கிறது!
சேவல் கூவுகிறது…
காலை புலர்கிறது!
சிரியா கூவுகிறது…
மரணங்களே மறுமொழியாகிறது!

ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

(எஸ். ஹமீத்)

கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ நாலாயிரம் பெண்களைக் கடத்தி காமுகர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.250 கோடி ரூபா பணம் சம்பாதித்த கணவனையும் மனைவியையும் டில்லி உளவுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வங்கதேசம் வழியாக வெளிநாடுகளுக்குப் பெண்கள் இரகசியமாகக் கடத்தப்பட்ட அநியாயம் பற்றிய தகவல் டில்லி உளவுத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் மூலம் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்தான் மிக அதிகளவில் கடத்தப்பட்டிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, கடத்தல் கோஷ்டியைப் பிடிக்க நாடெங்கும் வலை விரித்துத் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

(“ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!” தொடர்ந்து வாசிக்க…)

கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று (05) குவிக்கப்பட்டிருந்தனர். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் சூரியபுரத்தைச்சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால், தொடர் போராட்டத்தை புதன்கிழமை (01) முதல் முன்னெடுத்துவரும் நிலையில், போராட்டம் 5 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (05) தொடர்ந்தது.

(“கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

மாகாண சபை தேர்தல் முந்தும்?

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்கு முன்னதாக, மாகாண சபைகளின் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசனை செய்துவருதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூராட்சிமன்றங்களுக்கான தேர்தலை நடத்தினால், அது ஒன்றிணைந்த எதிர்க்கட்சிக்கே வாய்ப்பாக அமையும். அவ்வாறு அமைவதை தடுக்கும் நோக்கிலேயே, சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரேநாளில் நடத்துமாறு, அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

(“மாகாண சபை தேர்தல் முந்தும்?” தொடர்ந்து வாசிக்க…)