மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள பொதுமக்களின் காணிகளில் சிலவற்றை, மக்களின் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்க, படைத்தரப்பு இணங்கியுள்ளது. இது தொடர்பில், பலாலி ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், ‘தையிட்டி வடக்கு ஜே. 249 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 54 ஏக்கர் காணியை, மக்களின் பாவனைக்காக, எதிர்வரும் ஜூலை மாதம் 3ஆம் திகதி விடுவிப்பதற்கு, படைதரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

(“மயிலிட்டி துறைமுகம் 27 வருடங்களின் பின் விடுவிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

ஐங்கரநேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு

வடமாகாண விவசாய அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோர் இராஜினாமா செய்திருக்கும் நிலையில், புதிய அமைச்சர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வடமாகாண அமைச்சர்கள் மீது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கையின் பிரகாரம், மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர், தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தனர்.

(“ஐங்கரநேசன், குருகுலராஜாவின் இடங்கள் அனந்தி, சர்வேஸ்வரனுக்கு” தொடர்ந்து வாசிக்க…)

புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?

வடக்கு மாகாண சபை நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபின் இரண்டு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களை முதல் அமைச்சர் வசம் கையளித்து அமைதி காக்கின்றனர். இடையில் யாரை புதிய அமைச்சர்களாக நியமிப்பது என்ற கலந்துரையாடல் தமிழ் அரசு கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றதாகவும் அதில் திரு ஆணல்ட் அவர்களை கல்வி அமைச்சராக நியமிக்க பெரும் ஆதரவும்   அதே வேளை எதிரணியில் திருமதி அனந்தி  அவர்களையும் அமைச்சராக்கும் அழுத்தமும் வந்ததாம்.

(“புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?” தொடர்ந்து வாசிக்க…)

FASCISM, SOVEREIGNTY AND THE TRUTH ABOUT THE TAMIL STRUGGLE

(Dr. Dayan Jayatilleka)

Let’s have a little context, shall we, comrades? When the vast multitude of Sri Lankan citizens was hoping and praying for emancipation from decades of terrorism and was determined to finish off the Tigers, Ajit Surendra Rupesinghe (ASR) was striving pathetically to mobilise opposition to that goal, by creating an organisation termed the Anti-War Front. An Anti-War Front, precisely during the last war! Relatively recent exposures in the media reveal that the Anti-War Front received quite considerable funding from a Western source.

(“FASCISM, SOVEREIGNTY AND THE TRUTH ABOUT THE TAMIL STRUGGLE” தொடர்ந்து வாசிக்க…)

புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கொட்டகலை யில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.சுமார் முப்பது வருடகாலமாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இந்த சந்திப்பு தொடரானது யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை

(“புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்நாட்டில் 27 வது தியாகிகள் தினம்

தமிழ்நாட்டில் தியாகிகள் தினம் நினைவுகூரப்பட்டது. தமிழ்நாட்டின் புளல் அகதிமுகாமில் வாழும் தோழர்கள் மற்றும் தமிழ் நாட்டின் முற்போக்கு ஜனநாயக சக்திகள் தமது அஞசலிகளை செலுத்தினார்கள்.

லண்டனில் தியாகிகள் தினம்–2017

“பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யானது “பத்மநாபா மக்கள் முன்னணி” என்ற பெயருடன் ஒரு சமூக இயக்கமாகவும், “தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி” (S.D.P.T). என்ற பெயருடன் ஒரு அரசியல் கட்சியாகவும் மாற்றம் பெற்று இயங்கி வருகிறது. தமிழ் பேசும் மக்களின் சுதந்திரம், ஐக்கியம், தமிழ் சமூகத்தில் ஐனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றிற்காகப் போராடி மரணித்த தோழர்கள், போராளிகள், அரசியல்வாதிகள், அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுக்கான இவர்களது 27வது வருட அஞ்சலி நிகழ்வு, வெளிநாட்டுப் பிராந்திய லண்டன் கிளையினரால் கடந்த 24 ஜூன் 2017ல் லண்டனில் நடாத்தப்பட்டது.

(“லண்டனில் தியாகிகள் தினம்–2017” தொடர்ந்து வாசிக்க…)

கனடாவில் 27 வது தியாகிகள் தினம்

இம்முறையும் வருடம் தோறும் நடைபெறும் தியாகிகள் தின நிகழ்வு கனடாவில் ஜுன் 24 ம் திகதி பிப 6 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10:30 மணி வரைக்கும் நடைபெற்றது. தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)யினருடன் இணைந்து ஈபிடிபி, ரெலோ, புளட், ஈரோஸ், ஈபிஆர்எல்எவ்., சம உரிமை இயக்கம், இலங்கையின் பாரம்பரிய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுடன், பொது மக்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

(“கனடாவில் 27 வது தியாகிகள் தினம்” தொடர்ந்து வாசிக்க…)