போராட்டங்களின் பின்னால் தமிழ் கடும்போக்கு சக்திகள்: மைத்திரி

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது அரசாங்கம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ள போதிலும் அதனை வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகள் குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மனை இன்று சந்தித்த ஸ்ரீலங்கா ஜனாதிபதி இராணுவத்தினர் வசமிருக்கும் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டங்களையும் வடக்கிலுள்ள தமிழ் கடும்போக்குவாதிகளே தூண்டி வருவதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார். (“போராட்டங்களின் பின்னால் தமிழ் கடும்போக்கு சக்திகள்: மைத்திரி” தொடர்ந்து வாசிக்க…)

திரு பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி

அன்னை மடியில் : 15 சனவரி 1972 — ஆண்டவன் அடியில் : 20 யூலை 2017
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரபா சுகிர்தரன் ரட்ணசபாபதி அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவஜோதி, லோகேஸ்வரி தம்பதிகளின் முதற் பேரனும்,

காலஞ்சென்ற இளையதம்பி ரட்ணசபாபதி (ஈழப்புரட்சி அமைப்பு – EROS), தில்லை மாலினிதேவி(மாலினி) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ரேஹான், பிருந்தன், ஆயிஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

திங்கட்கிழமை 24/07/2017, 03:20 பி.ப — 04:00 பி.ப
முகவரி: North East Surrey Crematorium, Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, UK

பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447956160779

தகவல்
குடும்பத்தினர்

‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’

‘நல்லூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டது அல்ல. நீதிபதிக்கு, யாழ்ப்பாணத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை’ என யாழ். பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் கனிஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்து உள்ளார். நல்லூரில், சனிக்கிழமை( 22) மாலை 5:10க்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(“‘இளஞ்செழியன் இலக்கு அல்ல’” தொடர்ந்து வாசிக்க…)

இரு தரப்பினர் இன்று புறக்கணிப்பர்

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாணத்தில், இன்றுத் திங்கட்கிழமை பணிப் புறக்கணிப்புகள் இடம்பெறவுள்ளன. வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தப் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபடவுள்ளனர். இந்தப் பணிப் புறக்கணிப்புத் தொடர்பில் வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசியல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம். நீதித்துறைக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.

(“இரு தரப்பினர் இன்று புறக்கணிப்பர்” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)

வடக்குக் கிழக்கு மாகாணங்களின் இணைப்புத் தொடர்பாக வட மாகாண சபை உறுப்பினர் அ. அஸ்மினால் கடந்த ஆண்டு இதே தினத்தில் எழுதப்பட்ட கட்டுரை.

“வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முஸ்லிம் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்ற அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் தொடர்தேர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் மக்கள் சார்பாக இதுவரை தீர்க்கமான எவ்வித பதில்களும் முன்வைக்கப்படவில்லை. முஸ்லிம் மக்கள் வடக்குக் கிழக்கு இணைப்பு விடயத்தில் பூரண உடன்பாட்டினை இதுவரை வெளியிடவில்லை. இதனை அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான மக்கள் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் குழுவிற்கு முன்னதாக குறிப்பாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் மிகவும் தெளிவாக எடுத்துரைத்திருப்பதன் மூலம் எம்மால் அறிந்துகொள்ள முடியுமாக இருக்கின்றது.
எனினும் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வடக்குக் கிழக்கு இணைவு விடயத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்மறையாக நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளமுடிகின்றது, அத்தோடு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவுக்கு உடன்பட்டு விடுவார்கள் என்ற அச்சமும் சமூகவலைத்தளங்களில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் மேற்படி விடயத்தை மிகவும் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்திக்கவும் கருத்தாடவும் தமிழ் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

(“வடக்கு கிழக்கு இணைப்புக்கான தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயங்களும்; முஸ்லிம் மக்களின் பொறுப்பும். – அ.அஸ்மின் (வ.மா.ச. உறுப்பினர்)” தொடர்ந்து வாசிக்க…)

ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்

இறந்தவர்களைப் புதைப்பது  ஒரு கலையாகவே வளர்ந்திருந்த எமது காலத்தில்
இந்த நிகழ்வு மட்டும் அழிய மறுத்து எஞ்சியிருப்பதற்குக்
காரணம் ஏதுமில்லை
சத்தியமாகச் சொல்கிறேன்:
நான் உணர்ச்சிபூர்வமானவன் அல்லன்
சித்தம் குழம்பியவனாகவும் ஒருபோதும் இருந்ததில்லை
உங்களைப் போலவே
நானும் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தயங்குபவன்
மேலும் அன்றாட வாழ்க்கையிலும்
நான் ஒரு யதார்த்தவாதி
எச்சரிக்கை உணர்வுள்ளவனும்கூட
மறந்துவிடு என்று அரசு ஆணையிட்டால்
உடனடியாகவே மறந்துவிடுகிறேன்
மறப்பதில் எனக்கிருக்கும் ஆற்றல் பற்றி எவருக்குமே ஐயமிருந்ததில்லை
என்னை ஒருவரும் குறை சொன்னதும் கிடையாது.

(“ஜூலை 1983: மேலும் ஒரு சம்பவம்” தொடர்ந்து வாசிக்க…)

கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இயற்கை வளங்கள் வரமா, சாபமா? என்கிற கேள்வி ஒருவகையில் அபத்தமானது.  ஏனெனில், இன்று உலகளாவிய நிலையில் வளர்ந்துள்ள நாடுகளின் அடிப்படையாக, இயற்கை வளங்களே இருந்தன; இன்னமும் இருக்கின்றன. அந்த வளங்கள் சொந்த நாட்டில் இருந்த வளங்களாகட்டும் அல்லது சுரண்டிய வளங்களாகட்டும் அவையே அந்நாடுகளை வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு சென்றன. சூரியன் அஸ்தமிக்காத சாம்ராட்சியமாக, பிரித்தானியா திகழ்வதற்கு, அவற்றின் கட்டுப்பாட்டில் இருந்த நாடுகளின் இயற்கை வளங்கள் முக்கிய காரணியாகின. இவை, ஏனைய காலனியாதிக்கவாதிகளுக்கும் பொருந்தும். காலங்கள் மாறிவிட்டன. ஆனால், களங்கள் மாறவில்லை. மாறாத களத்தின் நிகழ்காலக் கதைதான் இது.

(“கொங்கோ: அலைபேசியில் வழியும் குருதி” தொடர்ந்து வாசிக்க…)

ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை.

(“ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்” தொடர்ந்து வாசிக்க…)

‘பிரபாகரனை காப்பாற்ற முயலவில்லை’

இலங்கையின் இறுதிக்கட்டப் போரில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டை, இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய றொபேர்ட்ஓ . பிளேக் நிராகரித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகளின் படகுகளை மூழ்கடிப்பதற்கு, ஐ.அமெரிக்கா உதவியது என்ற தகவலும் பொய்யானது எனத் தெரிவித்த அவர், எனினும், படகுகளின் இருப்பிடம் தொடர்பான தகவலை, ஐ.அமெரிக்க புலனாய்வுப் பிரிவு வழங்கியதை ஏற்றுக் கொண்டார்.

(“‘பிரபாகரனை காப்பாற்ற முயலவில்லை’” தொடர்ந்து வாசிக்க…)

சம்மந்தனின் அரசியல் நேர்மை…?

மலையக மக்களை இழிவு படுத்தும் விதமாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கூறியமைக்கு எதிராகத் தமது கண்டனத்தைத் நேற்று முன்தினம் (12.07.2017) வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியப் பிரதிநிதிகள் கண்ணியமான முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனிடம் நேரில் தெரிவித்தனர். இதன்போது மேற்படி விடயம் குறித்த தமது கண்டன அறிக்கையையும் சம்மந்தனிடம் பிரதிநிதிகள் கொடுத்திருந்தனர்.

(“சம்மந்தனின் அரசியல் நேர்மை…?” தொடர்ந்து வாசிக்க…)