மட்டுநகர் கல்லடி ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை, பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்து, மட்டக்களப்பு கல்லடிசுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக ஊழியர்கள், இன்று செவ்வாய்க்கிழமை 22.08.2017 கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள்நிறுவகத்துக்கு முன்னால் ஒன்று திரண்ட கல்விசார் மற்றும் கல்விசாராஊழியர்கள், கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டடத் தொகுதி மாணவர்கள்சிலரால் ஆக்கிரத்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாகவும்நீதிமன்றம் விடுத்துள்ள கட்டளையை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும்போராட்டம் எனும் போர்வையில் எமது கலாசார விழுமியங்களை கொச்சைப்படுத்த வேண்டாம் எனவும் உடனடியாக அம்மாணவர்கள், நிர்வாக கட்டடத்தொகுதியிலிருந்து வெளியேற வேண்டுமெனவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?

(Niroshini)
பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறைக்கு எதிராக கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக மேற்கொண்ட போராட்டங்களின் விளைவால், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் ஓரளவுக்குக் குறைந்ததாகத் தென்பட்டாலும், அது தொடர்கதையாகவே இருக்கின்றது. பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகளினதும் அதனால் பெண்கள் முகங்கொடுக்கக்கூடிய சவால்களினதும் வடிவங்களில் மாற்றம் பெற்றதே ஒழிய, இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலையாக மாற்றம் பெற்றுள்ளது.

(“பெண்களின் வாழ்க்கை விடுகதையாகவே தொடருமா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்

(எஸ்.கருணாகரன்)
‘பிரித்தாளும் தந்திரத்தில் பிரித்தானியர்களுக்கு நிகரில்லை’ என்று சொல்வார்கள். ஆனால், அவர்களையும் விடச் சிங்கள அரசியல் தலைமைகள் நிபுணத்துவம் மிக்கவை என்பது இலங்கையின் அண்மைய வரலாறு. இதற்கு மிக எளிய உதாரணம், 1970 கள் வரையில் இணக்கமாக, ஒருமுகப்பட்டிருந்த இலங்கையின் சிறுபான்மையினங்கள், இப்போது மிக ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டுள்ளன. அகரீதியாகவும் புறரீதியாகவும் இந்தப் பிளவு மிக ஆழமாகச் செய்யப்பட்டுள்ளது.

(“தமிழ் ​மொழிச் சமூகங்களைப் பலி எடுக்கும் பிரித்தாளும் தந்திரம்” தொடர்ந்து வாசிக்க…)

மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.

மட்டக்களப்பு நாவற்குடாவினை பிறப்பிடமாகக்கொண்டு கல்லடி சிவாநந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்புமத்திய வங்கியின் சிரேஸ்ட நிர்வாக அதிகாரியாகக் கடமையாற்றிய திரு. இளயதம்பி தங்கராஜா அவர்கள் கனடாரொரன்ரோவில் இன்று (22-8-2017) காலமானார்.

(“மதிப்பிற்குரிய ஐயா இ.தங்கராஜா அவர்கள் நினைவாக.” தொடர்ந்து வாசிக்க…)

அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரே ஒரு காணியே உள்ளது.குறித்த காணி யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டு அப்பகுதியில் பொலிஸ் நிலையம் இயங்கி வந்தது. தற்போது பொலிஸ் நிலையத்திற்கு என காணி வழங்கப்பட்டு அது வேறு ஓர் இடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

(“அபிவிருத்தி சங்க பொதுக்காணியில் பொலிஸ் நிலையம் மக்கள் கவலை” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!

ராஜிவ் ஆட்சிக்கு வந்த புதிதில் கொஞ்சம் வேடிக்கையாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும்தான் இருந்தது. இடதுசாரிகளை ஒரு சிறுபிள்ளை மனோபாவத்தில் அவர் விமரிசித்ததும் – கூடவே கைகோர்த்து அலையும் நண்பர்கள்தாம் அவரையும் ஆட்சியையும் இயக்குகிறார்கள் என்ற செய்திகளும்….
‘என்ன நடக்கிறது இங்கே!?’
அருண் நேரு, அருண் சிங், இன்னும் நான் பெயர் மறந்துபோன சிலரும்…ராஜீவுடனேயே வலம் வந்தார்கள்.
காங்கிரஸ் கட்சியில் குறிப்பாக மூத்தத் தலைவர்களிடம் இது விசனத்தை உண்டுபண்ணியது.
ஆனால் நிகழ்ந்ததென்னவோ, ஓராண்டுக்குள் ராஜிவிடம் மாறுதல்கள்….!

(“வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழர்களுக்கென்றே தமிழர் ஆட்சி!” தொடர்ந்து வாசிக்க…)

துருவங்கள் இணைந்தன: துணை முதல்வராகிறார் ஓபிஎஸ்

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் பிரிந்த இரு அணியினர் இன்று (21) ஒன்று சேர்ந்தனர். தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் தமது இணைவு தொடர்பான அறிவித்தலை வெளியிட்டனர். இதனடிப்படையில் தமிழகத்தின் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கே.பாண்டியராஜனும் அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்துறை அமைச்சு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!

(ரி. தர்மேந்திரன்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை இதன் தலைவர் ரவூப் ஹக்கீம் அழித்து வருவதை பொறுக்க முடியாமலேயே இக்கட்சியில் இருந்து சுய விருப்பத்தின் பெயரில் வெளியேறி உள்ளார் என்று ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் தூய முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், முஸ்லிம் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸை அழிக்கின்றார் ஹக்கீம்!” தொடர்ந்து வாசிக்க…)

தலைகளை தேடும் தமிழர் நிலை?!

ஈழமக்களின் அரசியல் வரலாற்றை சற்று நோக்கினால் அங்கு தலைகளை நோக்கிய பார்வை மட்டுமே தென்படும். மாறாக நல்ல தலைவர்களை நோக்கியதாக அல்ல. இதனை யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் காலத்துக்கு பிந்திய தொடர் நிகழ்வாகவே நாம் பார்க்கவேண்டியுள்ளது. காரணம் அன்று டொனமூர் அரசியல் அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை வடக்கில் பகிஸ்கரித்தும் அடுத்த தேர்தலில் பொன்னம்பலம் தலைமையிலான அணி பங்குபற்றியது. இருந்து அவர்கள் தேர்தலில் வென்றும் தனி சிங்கள மந்திரிசபை அமைந்தது.

(“தலைகளை தேடும் தமிழர் நிலை?!” தொடர்ந்து வாசிக்க…)

உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)

வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

(“உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தின் மோசடிகள் அம்பலம்! (ஆதாரங்கள் இணைப்பு)” தொடர்ந்து வாசிக்க…)