தமிழக – கேரள போலீஸாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர் கேரளாவில் பிடிபட்டார்: மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரள எல்லையோரப் பகுதியான அகளியில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளரான காளிதாஸ் என்பவர் 14 ஆண்டுகளுக்குப் பிறகு கேரள போலீஸாரிடம் பிடிபட்டார்.

(“தமிழக – கேரள போலீஸாரால் 14 ஆண்டுகளாக தேடப்பட்ட மாவோயிஸ்ட் இயக்க கமாண்டர் கேரளாவில் பிடிபட்டார்: மாநில எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை” தொடர்ந்து வாசிக்க…)

செல்வி: இவள் எங்கே?

(குஞ்சன்)

இன்றும் செல்வி மீது என்னால் சிந்திக்க முடிகின்றது. நிறைய போர், வன்முறை, அரசியல் அக்கிரகாரம் இவைகளுக்கு எதிரில் நிற்பவர்கள் இன்றும் செல்வி மீது நினைப்பார்கள். இவள் எப்படிக் காணாமல் போனாள் எனக் கேட்பார்கள். இவளது கவிதைகளை மீளவும் வாசிப்பார்கள். ஆம்! இலங்கையின் புலிப் போர் தமிழர்களின் அத்திவாரத்தை உடைத்தது, இது தமிழ் இலக்கியத்தின் அறிவியல், இலக்கியவாதிகளையும் ஒழித்தது. இப்போதும் சொல்லலாம் நிறைய வெளியால் வந்தோர் புலிகளின் ரகசியப் போராளிகளாக இருக்கின்றனர். இது வெட்கப்படவேண்டியது.

(“செல்வி: இவள் எங்கே?” தொடர்ந்து வாசிக்க…)

சித்தியடையாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத்திட்டங்கள் அறிமுகம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள், உயர்தரக் கல்வியை தொடருவதற்காக புதிய இரண்டு பாடத்திட்டங்களை அடுத்த மாதத்திலிருந்து அறிமுகப்படுத்த இருப்பதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, உடற்கல்வி மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு, நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படயிருப்பதாக தெரிவித்துள்ளது.

(“சித்தியடையாத மாணவர்களுக்கு புதிய இரு பாடத்திட்டங்கள் அறிமுகம்” தொடர்ந்து வாசிக்க…)

திருத்தச் சட்டமூலம் நிறைவேறியது

மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பிலான இரண்டாவது மதிப்பீட்டு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவையென, சட்டமா அதிபர் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய அறிவுறுத்தியிருந்தார். இதனடிப்படையில், இன்றுமாலை இடம்பெற்ற வாக்கெடுப்பில், திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 44 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’

(கே. சஞ்சயன்)
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு புதிய அரசமைப்பு மூலம் தீர்வு காணப்படும் என்று திட்டவட்டமாகக் கூறி வந்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், “தீர்வு வரலாம், வராமலும் போகலாம்” என்று கூறுகின்ற நிலைக்கு இப்போது வந்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவரும் என்ற நம்பிக்கையில் தான், அவர் அந்தக் காலக்கெடுவை முன்வைத்திருந்தார். ஆனால், கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழித்துத்தான், அந்த இடைக்கால அறிக்கை வெளிவந்திருக்கிறது. (“விற்று விடுவாரா சம்பந்தன்? ‘வரலாம், வராமலும் போகலாம்’” தொடர்ந்து வாசிக்க…)

அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்

வடகொரியாவின் அணுவாயுதப் பிரச்சினை, மிகவும் தீர்க்கமானதாக மாறிவரும் நிலையில், 51 நாடுகள் ஒன்றுசேர்ந்து, அணுவாயுதத்தை அழிக்க வேண்டுமென, ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வுக்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கு அநேகமான நாடுகள் சென்றுள்ளன நிலையிலேயே, இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. எனினும், ஐ.அமெரிக்கா உள்ளிட்ட அணுசக்தித் திறனைக் கொண்ட நாடுகள், இந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்கின்றன.

(“அணுவாயுதத்துக்கு எதிராக 51 நாடுகள் ஒப்பந்தத்தில்” தொடர்ந்து வாசிக்க…)

முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!

– கிழக்கு முஸ்லிம்களுக்கு ஹசன் அலி அறைகூவல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ரவூப் ஹக்கீமின் தலைமை தேவை இல்லை என்கிற தீர்ப்பை எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதன் மூலமாக கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் நிச்சயம் வழங்க வேண்டும் என்று இக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம். ரி. ஹசன் அலி தெரிவித்தார்.

(“முஸ்லிம் காங்கிரஸுக்கு ஹக்கீமின் தலைமை வேண்டாம் என்ற தீர்ப்பை வருகின்ற தேர்தல் மூலமாக வழங்குங்கள்!” தொடர்ந்து வாசிக்க…)

உலகத்தை இன்னும் ஒரு போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ட்றம் இன் ஐநாவின் பேச்சு

(சாகரன்)
நடந்து முடிந்த ஐநாவின் வருடாந்தக் கூட்டத் தொடரில் அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சு உலக மக்களின் கவனத்தை அச்சுறுத்தல் என்ற வகையில் ஏற்படுத்தியுள்ளது. வட கொரியாவை முற்றாக அழித்தொழிப்பது என்ற பேச்சாக இருக்கட்டும்…. ஈரான் மீதான சமாதான சகோதரத்து செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அறை கூவலாக இருக்கட்டும்… அமைதிப் பூங்காகவாக இருந்து அதி உச்ச போர்களமாக மாற்றப்பட்ட சிரியாவில் ஏற்பட்டுவரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வுகளை நிராகரிப்பதாக இருக்கட்டும் எங்கும் உலகத்தின் பெரும்பான்மை மக்களின் விருப்பை நிராகரிக்கும் போக்குடையதாகவே ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

(“உலகத்தை இன்னும் ஒரு போர் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ட்றம் இன் ஐநாவின் பேச்சு” தொடர்ந்து வாசிக்க…)

ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
கோவில் திருவிழாக்கள் ஆண்டு தோறும் நடப்பதுபோல, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்தக் கூட்டங்களும் மாறிவிட்டன. வெறுமனே ஒரு சடங்காக, உலகத் தலைவர்கள் உரையாற்றும் இடமாக, பொதுச்சபைக் கூட்டம் நடந்தேறுகின்றது. இன்று, எதையும் பயனுள்ள வகையில் செய்ய இயலாதுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கையறுநிலை, இதற்கான பிரதான காரணமாகும். ஐ.நா வலுவாகவும் உலக அலுவல்களில் முக்கிய சக்தியாகவும் திகழ்ந்தவொரு காலத்தில், பல வரலாற்றுச் சிறப்பு மிக்க உரைகளை இச்சபை கண்டுள்ளது. அவ்வுரைகள் காலத்தின் கண்ணாடியாக, உலக அலுவல்களின் நிகழ்நிலையைப் பிரதிபலிக்கும் விமர்சனங்களாக அமைந்தும் உள்ளன.

(“ட்ரம்பின் ஐ.நா உரை: பழைய பொய்களும் புதிய கதைகளும்” தொடர்ந்து வாசிக்க…)

றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்

(Gopikrishna Kanagalingam)
அண்மைய நாட்களில், உலகின் எந்த நாட்டு ஊடகங்களையும் தொடர்ச்சியாகப் படிப்பவர்கள், பார்ப்பவர்கள், அல்லது கேட்பவர்கள், “றோகிஞ்சா” என்ற பதத்தை அறிந்திருப்பர். இல்லாவிடின், “றோகிங்கியா”, “ரோஹிஞ்சா”, “ரோஹிங்கியா”, “றோஹிங்கா” என்று, அக்குழுவினரை வேறு பெயரில் அறிந்திருந்தாலும், அவர்களைப் பற்றி நிச்சயமாக அறிந்திருப்பர்.

(“றோகிஞ்சாக்கள் அடையாளங்காட்டும் பல முகங்கள்” தொடர்ந்து வாசிக்க…)