மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்?

(எம். காசிநாதன்)
250 சட்டமன்றத் தொகுதிகளுக்கு குஜராத்திலும் ஹரியானாவிலும் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தல் பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு சரிந்துள்ளதா, விரிவடைந்துள்ளதா என்பதை வெளிப்படுத்தும் “மந்திரக்கோலாக” இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளுக்கும், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளும் இரு இந்திய தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.

(“மோடிக்கு மாற்றாக வருகிறார் ராகுல்?” தொடர்ந்து வாசிக்க…)

‘றக்காவை அழித்துவிட்டது அமெரிக்கக் கூட்டணி’

ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணி, சிரியாவின் றக்கா நகரத்தை, பூமியிலிருந்தே இல்லாதுசெய்து விட்டது என, ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. 1945ஆம் ஆண்டில், ஜேர்மனியின் ட்ரெஸ்டெனை, ஐக்கிய அமெரிக்காவும் பிரித்தானியாவும் இணைந்து குண்டுத் தாக்குதல் நடத்தித் தகர்த்ததைப் போன்றே றக்காவும் தகர்க்கப்பட்டுள்ளது என, ரஷ்யா தெரிவித்துள்ளது.

(“‘றக்காவை அழித்துவிட்டது அமெரிக்கக் கூட்டணி’” தொடர்ந்து வாசிக்க…)

‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ – தீஷான் அஹமட் 

தமிழ், முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வைப் பற்றி முஸ்லிம் கட்சிகள் இன்று பேசுகின்றார்கள். இவர்கள் பேச வேண்டிய சந்தர்ப்பத்தில் பேசாமல் தற்போது பேசுகின்றார்கள் என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான் நேற்று (21) தெரிவித்தார். புதிதாக பதிவு செய்யப்பட்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக் கட்சியின் பொதுக் கூட்டம் மூதூரில் நடைபெற்றது. இதன்போதே அவர் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

(“‘தமிழ்,முஸ்லிம் மக்களின் புரிந்துணர்வை முஸ்லிம் கட்சிகள் பேச தகுதியற்றவர்கள்’ – தீஷான் அஹமட் ” தொடர்ந்து வாசிக்க…)

பாலன் தோழரின் பதிவின் நகல்.

அந்த கையில் கட்டப்பட்டிருக்கும் மணிக்கூடு
இப்பவும் டிக் டிக் என அடித்துக்கொண்டே இருக்கிறது!
17.04.2000 யன்று பாதர் இமானுவேல் அடிகளார் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்களுக்கு எழுதினார் “தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க துணிச்சலுடனும் முதுகெலும்புடனும் நீங்கள் செயற்பட வேண்டும் இல்லையேல் அரசியலில் இருந்து ஒதுங்குங்கள்”. இக் கடிதத்தை பாதர் முதுகெலும்புடன் எழுதும்போது அவர் கையில் இருந்த மணிக்கூடு டிக் டிக் என அடித்துக்கொண்டிருந்தது.

(“பாலன் தோழரின் பதிவின் நகல்.” தொடர்ந்து வாசிக்க…)

அவர் வாழும் போதே வாழ்த்துங்கள் தோழர்களே !…….

எமது முப்பாட்டன் மகாகவி பாரதியார் பற்றி படிக்கும் போதெல்லாம் என்மனம் துடிக்கும். வாழும் போது மட்டுமல்ல அவரின் சாவின் போதும் கலந்து கொண்டவர் எண்ணிக்கை பற்றிய செய்தி அறிந்து. பிராமண சமூகத்தின் திமிர் அதி உச்சத்தில் இருந்த வேளை அதை துச்சம் என தூக்கி எறிந்து மற்ற சமூகத்தின் எச்ச நிலையை எடுத்து இயம்பியவர் அவர்.

(“அவர் வாழும் போதே வாழ்த்துங்கள் தோழர்களே !…….” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்.பல்கலை மாணவர்கள் வகுப்பு பகிஷ்கரிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று(18) ஜனாதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்தை திருப்தியளிக்கவிலை என தெரிவித்து யாழ்.பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களைச் சேர்ந்த மாணவர்களும் இன்று(20) காலை முதல் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளன​ர். அத்துடன் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்களுக்கு இன்று(20) நடத்தவிருந்த பரீட்சையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ள வகுப்பு பகிஷ்கரிப்பு நடவடிக்கை காரணமாக நடத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்

(கே. சஞ்சயன்)
அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், மூன்றாவது வாரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், அதை வைத்து அரசியல் நலன் தேடுவதற்காக இன்னொரு போராட்டமும், தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் நடந்து கொண்டிருக்கிறது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த தமது விசாரணைகள், திடீரென அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் தமது வழக்குகள் வவுனியாவிலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியே, மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

(“அரசியல் கைதிகளை மறந்து மோதிக்கொள்ளும் அரசியல்வாதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு; ஓரிரு நாட்களில் முடிவென உறுதி

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நேற்று (19) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்களின் உடனடியாக கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான எந்தவிதமான உறுதிமொழியும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை.

(“அரசியல் கைதிகளின் உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு; ஓரிரு நாட்களில் முடிவென உறுதி” தொடர்ந்து வாசிக்க…)

‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’

சாப்தத்துக்கு இரண்டு தடவைகள் இடம்பெறும், சீன ஆளுங்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், தமது நாட்டிலிருந்து தாய்வான் பிரிவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என, உறுதியாக அறிவித்துள்ளார். பெருத்த எதிர்பார்ப்புடன் ஆரம்பித்த இந்த மாநாட்டில், நாட்டைக் கொண்டு செல்வதற்கான தனது தூரநோக்குப் பார்வையை, ஜனாதிபதி ஸி வெளிப்படுத்தினார். ஏறத்தாழ மூன்றரை மணித்தியாலங்கள் நீடித்த உரை, பல்வேறு விடயங்கள் பற்றியும், தனது கவனத்தைச் செலுத்தியிருந்தது.

(“‘தாய்வான், தனிநாடாக பிரிவதற்கு அனுமதியோம்’” தொடர்ந்து வாசிக்க…)

அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 25 வருட கால வரலாற்றில் இத்தொழிற்சங்கத்தின் மத்திய குழுவுக்குள் முதல் தடவையாக வட மாகாண உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொதுச் செயலாளராக முல்லைத்தீவில் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை சேர்ந்த எஸ். சற்குணராசா நியமிக்கப்பட்டு உள்ளதுடன் இணைத் தலைவர்களில் ஒருவராக கிளிநொச்சியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தை சேர்ந்த ஏ. புண்ணியமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளார்.

(“அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மத்திய குழுவுக்குள் வட மாகாண உறுப்பினர்கள் முதல் தடவையாக உள்ளீர்ப்பு!” தொடர்ந்து வாசிக்க…)