பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது

விசேட அதிரடிப்படையினரின் வாகனத்துக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (12) மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். கைதான இருவரும், துன்னாலை – வேம்படி பகுதியைச் சேர்ந்தவர்கள் என, பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

(“பருத்தித்துறை கலவரம்: மேலும் இருவர் கைது” தொடர்ந்து வாசிக்க…)

‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????

பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் கையளிக்கப்படும்” என, மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

(“‘பலாலி காணிகள் கிடைக்கும்’…????” தொடர்ந்து வாசிக்க…)

எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?

(Gopikrishna Kanagalingam)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய இரு தலைவர்களின் கீழ், இவ்வரசாங்கம் உருவாக்கப்பட்டபோது காணப்பட்ட அதிகரித்த எதிர்பார்ப்புகளை, இவ்வரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது உண்மையானது, அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அண்மைக்காலத்தில் இவ்வரசாங்கத்துக்கு எழுந்துள்ள சர்ச்சைகளும் நெருக்கடிகளும், அரசாங்கத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குட்படுத்தியிருக்கின்றன என்று கூறினால், அதைத் தவறென்று கூறமுடியாது.

(“எப்போது விழித்துக் கொள்ளும் அரசாங்கம்?” தொடர்ந்து வாசிக்க…)

தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் நோக்கில் திரு ஆனந்தசங்கரி அவர்களின் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இனணந்து பலகட்சிகள் மெகா கூட்டணி ஒன்றை அமைக்கும் செய்தி ஒன்று தற்போது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த மெகா கூட்டணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் இணைய உள்ளதாம்.

(“தேர்தல் கால மெகா கூட்டணி நிரந்தர அரசியல் தீர்வை தருமா?” தொடர்ந்து வாசிக்க…)

பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது

தலித் அர்ச்சகர்களிடமிருந்து பிரசாதம் வாங்க ஆணவ ஜாதியினரில் ஒரு சாரர் மறுப்பதாக கேரளாவிலிருந்து செய்தி வருகிறது.

“பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகரானால், கோவிலில் இருப்பது சாமியே அல்ல, வெறும் கல்தான் என்று பார்ப்பனர் பிரச்சாரம் செய்யத்தொடங்கிவிடுவார்கள்” – என்று பெரியார் சொன்னது எத்துனை உண்மை என இன்று புலப்படத்தொடங்கிவிட்டது.

(“பெரியாரின் கணிப்பு உண்மையாகிறது” தொடர்ந்து வாசிக்க…)

யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு

யாழில் தொடரும் கனமழையால் 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளாதாக, யாழ்.மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, இதுவரையில் 2,518 குடும்பங்களை சேர்ந்த 9,141 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன், 04 வீடுகள் முழுமையாகவும் , 159 வீடுகள் பகுதிகளவிலும் சேதமடைந்துள்ளன.

(“யாழில் கனமழை ; 9 ஆயிரம் பேர் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

லஷ்மி குறும்படம் – விமர்சனம்

ஒரு தவறு எவ்வாறு நடக்கிறது என்பதைக் கலையாகச் சுட்டிக்காட்டலாம்.ஆனால் அந்தத் தவறை நியாயப்படுத்தும் வகையில் கலையாக்கப்பட்டிருந்தால்அது விமர்சனத்திற்கு உரியதே. இந்தச் சமூகத்தில் திருடுவதற்குத்தேவைப்படுகிற பின்புலங்கள் அதிகம் இருக்கின்றன என்பதற்காகத் திருட்டைஆதரிக்க முடியுமா?. ஆனால் ஒரு திருடன் எவ்வாறு தோன்றுகிறான் என்பதைக்கலையாக வடிக்க முடியும். அவ்வாறு எடுக்கும் படம், பார்வையாளனுக்குச்சமூகத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தும். அந்தக் கோபம் சமூக மாற்றத்திற்குப்பயன்படும்.

(“லஷ்மி குறும்படம் – விமர்சனம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்

தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்துகின்ற நடவடிக்கைகளை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக முடிவுறுத்த வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான செல்லையா இராசையா, அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ். லோகநாதன் ஆகியோர் கூட்டாக விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அக்கரைப்பற்றில் உள்ள தமிழ் பிரதேசமான ஆலையடிவேம்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் கிளை அலுவலகம் ஒன்று கட்சி சார்ந்த அரசியல் செயற்பாட்டுக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு உள்ளது.

(“தமிழ் பெண்களை சுய இன்ப அரசியலுக்கு பயன்படுத்தாதே! அமைச்சர் றிசாத்துக்கு தமிழ் உணர்வாளர்கள் கண்டனம்” தொடர்ந்து வாசிக்க…)

மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் (பாதீடு), நாடாளுமன்றத்தில் இன்று (09) சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சராக பதவியேற்று சமர்பிக்கும் முதலாவது வரவு-செலவுத்திட்டம் இதுவாகும். இத்திட்டம் நாடாளுமன்றத்தில் இன்று மாலை 3:02க்குச் சமர்ப்பிக்கப்படும்.

(“மங்களவின் மங்கல பாதீடு மாலை 3:02க்குச் சமர்ப்பிப்பு” தொடர்ந்து வாசிக்க…)