தமிழர் சமூக ஜனநாயக கட்சிஏன் தனித்து போட்டியிடுகிறது தெரியுமா?

வரதர் கொடுத்த 50 பேர் கொண்ட லிஸ்ற்… தொலைபேசியையே தூக்காத மாவை!

தமிழர் சமூக ஜனநாயக கட்சி(ஈ.பி.ஆர்.எல்.எவ்- பத்மநாபா அணி) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் நுழைந்து விட்டது, அவர்களிற்கு முப்பது வேட்பாளர்கள் வழங்கப்படலாம் என ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த செய்தியை படித்தவர்கள் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை பார்த்து குழப்பமடைந்திருப்பார்கள். சாவகச்சேரி நகரசபைக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி தனித்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தது. நாம் வெளியிட்ட செய்திக்கு மாறாக நடந்த இந்த சம்பவம் பலரை குழப்பமடைய வைத்திருக்கும்.

(“தமிழர் சமூக ஜனநாயக கட்சிஏன் தனித்து போட்டியிடுகிறது தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

அதிசயம்.ஆனால் உண்மை, சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். எனவே இந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிக்கு நீதுமன்றம் காவல் துறை என்பன சாதகமாகவே இருக்கும்.ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதிசயமான ஒன்று. இந்த வழக்கின் குற்றவாளிகளை மேன் முறையீட்டின் மூலம் தப்பிக்க வழிபிறக்கலாம்.இந்திய நீதித்துறை அவ்வளவு பலவீனமானது.அது உறுதி செய்யப்பட்டால் இந்த நீதிபதிக்கும் கௌசல்யாவுக்கும் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.சாதிக்காக எவரையும் கொலை செய்வதை கௌரவரமாக கருதும் தேசம் இந்தியா.அதற்கான பலமான வரவேற்பும் அங்கே உண்டு. சங்கர் கொலை என்பது அறியாமையில் வாழும் சமூகம் அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இளவரசன் கொலை அரசியல் கட்சி,அரசியல்கள் சம்பந்தப்பட்டது.இங்கே குற்றவாளிகளை சட்டம் கண்டுகொள்ளவில்லை . கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடியது பாராட்டுக்கு உரியது.ஆனால் அந்தப் பெண்ணின் மன உழைச்சலை எங்களால் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு புறம் காதலனை பறிகொடுத்த கவலை.அதற்கான பழிவாங்கலாக இப்போது சமாதானமானாலும் நாட்கள் செல்ல தன் தந்தைக்காக கண்ணீர் விடும் நாளும் வரலாம். இன்று சில அமைப்புகள் கௌசல்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தமது நலன்களை கவனம் செலுத்துகிறார்கள்.வாழ்வை இழந்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக உள்ள அந்தப் பெண்ணிற்கு மீண்டும் வாழ வழி செய்தால் அதுவே பகுத்தறிவு.அதை விட்டு அவளுக்கு விளம்பரத்தை கொடுத்து அவளின் அறிவை உணர்வுகளை மழுங்கடிப்பது நல்ல விசயம் அல்ல. அவள் தனது பழைய நினைவுகளில், இருந்து வெளியே வர அவளுக்கு புதுவாழ்வு அவசியம்.பகுத்தறிவுவாதிகள் உதவுவார்களா என்பது சந்தேகமே. சாதியமைப்பு தகர்கப்பட வேண்டும்.அதற்காக எல்லோரும் போராடவும் மனங்கள் பக்குவபடவும் வேண்டும்.ஆனால் வாழ்க்கை எனறு வரும்போது கொஞ்சம் நிதானம் தேவை. மாற்றமடையாத இந்த சமூக ஊழல்களில் சாதி மாறி திருமணம் செய்வதை கொஞ்சம் யோசிக்கவேண்டும்.குறிப்பாக பெண்கள் தனியே காதலனை நம்பியே போகிறார்கள்.அந்த காதலன் இல்லாதபோது அவளின் நிலை என்னவாகும்.சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து விதவையானால் அந்தப் பெண்ணுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு இல்லை என்னும்போது சாதி மாறி திருமணம் செய்யும்போது யோசிப்பதே நல்லது. மனிதாபிமான உணர்வு இல்லாதவர்கள் காட்டும் அன்பு போலியானது.சாதி என்று வரும்போது பெற்ற மகளை மகனை கொல்லத் தூண்டுமானால் அவர்கள் காட்டிய அன்பு போலியானது.இங்கே மகளைவிட சாதி பெரிது என்றால் அந்த பாசம் வெறும் வேசமே. சங்கரின் கொலைக்கு கௌசல்யாவின் தந்தையைவிட அவரது சொந்தங்களும் சமூகமும் கொடுத்த மன உழைச்சல்களே சங்கரின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அந்த சமூகத்துக்கு எந்த சட்டம்,நீதிமன்றம் தண்டனை வழங்கும். இந்த கௌசல்யா இன்னொரு தலித் இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும்.ஆனால் கௌசல்யா போன்ற பெண்களை தலித் இளைஞர்களோ அல்லது வேறு எவரோ திருமணம் செய்ய தயாராக இல்லை.இதுவும் ஒரு வகை தீண்டாமையே.இளம் பெண்ணை விதவையாக வாழா வெட்டியாக சகல சமூகங்களுமே பார்க்கவிரும்புகிறது.அனைத்து சாதிகளும் குற்றவாளிகளாக தெரிகிறது.

சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். (“அதிசயம்.ஆனால் உண்மை, சங்கர் கொலை தொடர்பாக இந்திய நீதிமன்றம் குற்றவாளிகள் ஆறுபேருக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.பொதுவாகவே சாதி விவகாரங்களில் சட்டம் தனது கடமையைச் செய்வதில்லை.1968 இல் இடம் பெற்ற வெண்மணி படுகொலைகள் தொடர்பான வழக்கில் குற்றவாளிகளை நீதிபதி தானே ஒரு போலிக்காரணம் சொல்லி விடுவித்தார்.இதே போல இலங்கையில் மாவிட்டபுரம் ஆலய பிரவேச போராட்டம் தொடர்பான வழ்க்கில் சி.சுந்தரலிங்கத்துக்கு ஒரு நீதிபதி 50& ரூபா அபராதம், வழங்கி நீதித்துறையே கேலிக்கு உரியதாக்கினார். எனவே இந்த மாதிரியான வழக்குகளில் குற்றவாளிக்கு நீதுமன்றம் காவல் துறை என்பன சாதகமாகவே இருக்கும்.ஆனால் இந்த வழக்கின் தீர்ப்பு அதிசயமான ஒன்று. இந்த வழக்கின் குற்றவாளிகளை மேன் முறையீட்டின் மூலம் தப்பிக்க வழிபிறக்கலாம்.இந்திய நீதித்துறை அவ்வளவு பலவீனமானது.அது உறுதி செய்யப்பட்டால் இந்த நீதிபதிக்கும் கௌசல்யாவுக்கும் என்ன நடக்கும் என்று சொல்லமுடியாது.சாதிக்காக எவரையும் கொலை செய்வதை கௌரவரமாக கருதும் தேசம் இந்தியா.அதற்கான பலமான வரவேற்பும் அங்கே உண்டு. சங்கர் கொலை என்பது அறியாமையில் வாழும் சமூகம் அல்லது பெற்றோரால் நிகழ்த்தப்பட்டது.ஆனால் இளவரசன் கொலை அரசியல் கட்சி,அரசியல்கள் சம்பந்தப்பட்டது.இங்கே குற்றவாளிகளை சட்டம் கண்டுகொள்ளவில்லை . கௌசல்யா தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடியது பாராட்டுக்கு உரியது.ஆனால் அந்தப் பெண்ணின் மன உழைச்சலை எங்களால் புரிந்துகொள்ளமுடியாது.ஒரு புறம் காதலனை பறிகொடுத்த கவலை.அதற்கான பழிவாங்கலாக இப்போது சமாதானமானாலும் நாட்கள் செல்ல தன் தந்தைக்காக கண்ணீர் விடும் நாளும் வரலாம். இன்று சில அமைப்புகள் கௌசல்யாவை பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.அவளின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் தமது நலன்களை கவனம் செலுத்துகிறார்கள்.வாழ்வை இழந்து உறவுகளை இழந்து நிர்க்கதியாக உள்ள அந்தப் பெண்ணிற்கு மீண்டும் வாழ வழி செய்தால் அதுவே பகுத்தறிவு.அதை விட்டு அவளுக்கு விளம்பரத்தை கொடுத்து அவளின் அறிவை உணர்வுகளை மழுங்கடிப்பது நல்ல விசயம் அல்ல. அவள் தனது பழைய நினைவுகளில், இருந்து வெளியே வர அவளுக்கு புதுவாழ்வு அவசியம்.பகுத்தறிவுவாதிகள் உதவுவார்களா என்பது சந்தேகமே. சாதியமைப்பு தகர்கப்பட வேண்டும்.அதற்காக எல்லோரும் போராடவும் மனங்கள் பக்குவபடவும் வேண்டும்.ஆனால் வாழ்க்கை எனறு வரும்போது கொஞ்சம் நிதானம் தேவை. மாற்றமடையாத இந்த சமூக ஊழல்களில் சாதி மாறி திருமணம் செய்வதை கொஞ்சம் யோசிக்கவேண்டும்.குறிப்பாக பெண்கள் தனியே காதலனை நம்பியே போகிறார்கள்.அந்த காதலன் இல்லாதபோது அவளின் நிலை என்னவாகும்.சொந்தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து விதவையானால் அந்தப் பெண்ணுக்கு உத்தரவாதமான பாதுகாப்பு இல்லை என்னும்போது சாதி மாறி திருமணம் செய்யும்போது யோசிப்பதே நல்லது. மனிதாபிமான உணர்வு இல்லாதவர்கள் காட்டும் அன்பு போலியானது.சாதி என்று வரும்போது பெற்ற மகளை மகனை கொல்லத் தூண்டுமானால் அவர்கள் காட்டிய அன்பு போலியானது.இங்கே மகளைவிட சாதி பெரிது என்றால் அந்த பாசம் வெறும் வேசமே. சங்கரின் கொலைக்கு கௌசல்யாவின் தந்தையைவிட அவரது சொந்தங்களும் சமூகமும் கொடுத்த மன உழைச்சல்களே சங்கரின் கொலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.அந்த சமூகத்துக்கு எந்த சட்டம்,நீதிமன்றம் தண்டனை வழங்கும். இந்த கௌசல்யா இன்னொரு தலித் இளைஞனை திருமணம் செய்து வாழ்ந்து காட்டவேண்டும்.ஆனால் கௌசல்யா போன்ற பெண்களை தலித் இளைஞர்களோ அல்லது வேறு எவரோ திருமணம் செய்ய தயாராக இல்லை.இதுவும் ஒரு வகை தீண்டாமையே.இளம் பெண்ணை விதவையாக வாழா வெட்டியாக சகல சமூகங்களுமே பார்க்கவிரும்புகிறது.அனைத்து சாதிகளும் குற்றவாளிகளாக தெரிகிறது.” தொடர்ந்து வாசிக்க…)

மார்கழி 13

ஒரு குளத்தின் அருகே மேய்ந்துகொண்டிருந்த ஆட்டுக்குட்டியை கண்ட ஒநாய் ஒன்று அதனை கொன்று தின்றுவிட வேண்டுமென்று அவா கொண்டது. அதற்கான ஒரு உபாயத்தை வகுத்துக்கொண்டது. ‘குளத்தை கலக்கி நான் நீர் அருந்த முடியாதபடி செய்துவிட்டாய்’ என்று ஆட்டுக்குட்டியை பார்த்து கத்தியது. ‘குளத்தின் பக்கமே செல்லவில்லை’ என்று பதறியது ஆட்டுக்குட்டி அப்போ உனது சகோதரன் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறான்’ என்று ஆட்டுக்குட்டியை அதட்டியபடி நெருங்கியது ஒநாய். ‘எனக்கு சகோதரர்களே கிடையாது’ என்று உண்மையை பவ்வியமாய் சொன்னது ஆட்டுக்குட்டி. ‘‘ஓ! அப்போ நிச்சயமாய் உனது தந்தையாhர் தான் நான் தண்ணீர் அருந்த முடியாதபடி செய்திருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது’’ என்று கூறி ஆட்டுக்குட்டியை கொன்று புசித்து தனது ஆசையை தீர்த்துக்கொண்டதாம் ஓநாய்.

(“மார்கழி 13” தொடர்ந்து வாசிக்க…)

மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில்…..

05ம் திகதி மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில் நடந்ததாக கூறப்படும் சில சுவாரசியமான சம்பாசனைகள் :
₹ முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று இரண்டு சபைகளையும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த எதற்கும் விட்டுக்கொடுக்க முடியாதென்றார் சிவமோகன். அதுகூட பரவாயில்லை. அதற்கு அவர் கொடுத்த விளக்கம்தான் எல்லோரையும் சிரிக்க வைத்தது. “புதுக்குடியிருப்பில் சினிமா நடிகர்களை அழைத்து ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். பல இலட்சம் செலவானது. நீங்கள் வெல்லவோ நான் காசு செலவழித்தேன்?“ என மற்ற கட்சிகளை பார்த்து கேட்டார். (“மாட்டின் வீதியில் நடந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் கூட்டத்தில்…..” தொடர்ந்து வாசிக்க…)

கூட்டமைப்பு உருவாக்கம்- சில நேரடித் தகவல்கள்

2004ஆம் ஆண்டு கொள்பிட்டி அல்விஸ் பிளேஸில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆனந்த சங்கரியுடன் முரண்பட்டு அடி தடி ஏற்பட்டது. (செய்தியாளராக இருந்ததால் அடிதடி சண்டையை என்னால் நேரில் பார்க்க முடிந்தது)
இறுதியில் பொலிஸாரே விலக்குப் பிடித்தனர். அதன் பின்னர் சின்னம் குறித்து எழுந்த பிரச்சினையில், அமரர் ரவிராஜ் யோசனையின் படி வீட்டுச் சின்னம் தெரிவானது. பின்னர் ஆனந்த சங்கரி, முகுந்தன் ஆகிய ஒரு சிலரைத் தவிர, தமிழர்விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் பலரும் தமிழரசுக் கட்சியில் இணைந்தனர்.

(“கூட்டமைப்பு உருவாக்கம்- சில நேரடித் தகவல்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பாசிஸ்டை தலைவனாகவும் அவனுடைய அமைப்பை ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட TNA ????

1990 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இருந்து செயல்பட்ட அனைத்து தமிழ் அரசியல் அமைப்புகளும் ஒன்றில் புலி பாசிசத்துக்கு சார்பாகவோ அல்லது அரச பாசிசத்துக்கு சார்பாகவோ இயங்கியது தான் வரலாறு. அதுதான் யதார்த்த சூழ்நிலை. எனவே TNA அன்று புலி பாசிசத்தை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்களென்றோ அல்லது PLOTE , ஈபிடிபி, EPRLF (P ) இலங்கை அரச பாசிச நடவடிக்கைகளை முற்று முழுதாக ஏற்றுக்கொண்டார்கள் என்றோ அர்த்தம் இல்லை.

(“பாசிஸ்டை தலைவனாகவும் அவனுடைய அமைப்பை ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட TNA ????” தொடர்ந்து வாசிக்க…)

குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்

(எம். காசிநாதன்)

அனல் பறக்கும் பிரசாரத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், இரு கட்டங்களாக நடைபெறும் தேர்தல், இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.  பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால், 22 ஆண்டு கால பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சிக்கு, குஜராத்தில் மிகப்பெரிய சவாலாக அமைந்து விட்டது. தேர்தல் கணிப்புகள் காங்கிரஸுக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் ‘குரல்வளையைப் பிடிக்கும்’ அளவுக்கு சரிக்குச்சமானமான போட்டி என்றாலும், பா.ஜ.க தரப்பில், பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று விடலாம் என்றே இன்னும் கருதப்படுகிறது.

(“குஜராத் இறுதி சுற்று: பா.ஜ.கவுக்கு காங்கிரஸ் கொடுத்த குஜராத் கௌரவம்” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்

நேற்றுக் காலை 11 மணி தொடக்கம் மாலை 3 மணிவரை சந்திப்பு நடந்தது. எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், புளொட் தலைவர் சித்தார்த்தன் அண்ணர், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை.சேனாதிராசா அண்ணர், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள், ரெலோ செயலாளர் நாயகம் நல்லதம்பி சிறீ காந்தா அண்ணர் அவர்கள், எம்.பி வியாழேந்திரன் , எம்.பி சுமந்திரன் , ஆர்.இராகவன், மாகாணசபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், சிவாஜிலிங்கம். வினோநோகராதலிங்கம், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

(“தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு விபரங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

பாலகுமார்

மிகவும் நல்ல மனிதர் தனிப்பட்ட முறையில் என்றால்….? எப்படி புலிகளுடன் இணைந்து அவர்கள் செய்த ஜனநாயக மறுப்புக்களுக்கும் பாசிச செயற்பாடுகளுக்கும் துணை போய் இதற்கான நியாயங்களையும் செய்து கொண்டிருந்தார். சரி புலிகள் மட்டும் தான் களத்தில் நின்று போராடினார்கள் (மற்றவர்களைப் போராட விடாமல் புலிகள் தடுத்தார்கள் என்பதை துப்பியல் நிகழ்வாக எடுத்தாலும்) இந்நிலையில் அவரால் என்ன செய்ய முடியும் போராடுபவர்களுடன் இணந்து தனது உயிரையும் காப்பாற்றி ‘போராடினார் என்று ஒரு வாதத்திற்கு வைத்தாலும்…. ஈழவிடுதலை அமைப்புக்கள் உருவாக்கிய முதல் ஐக்கிய முன்னணி ஈழத் தேசிய விடுதலை முன்னணி(ENLF)யில் புலிகள் இணைந்த பின்பு அவர்களின் பக்கமே நின்று மாற்று இயக்கங்களை புலிகள் அழிக்க முற்பட்ட போதும், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்பான கால கட்டங்களில் சகல அமைப்புகளும் மீண்டும் செயற்படக் கூடிய ஜனநாயக சூழலிலும் புலிகளின் உளவு அமைப்பாகவும் செயற்பட்டு புலிகளை மட்டும் வளர்த்துவிட ஏன் செயற்பட்டார்.

(“பாலகுமார்” தொடர்ந்து வாசிக்க…)

‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்த வரையில், வேறு பகுதியில் ஒவ்வொரு கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றது. ஆனாலும் யாழ். மாவட்டம் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனித்து வெற்றிலைச் சின்னம் இல்லாமல் கை சின்னத்தில் போட்டியிடும்” என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

(“‘யாழ்., கிளியில் கை சின்னத்தில் போட்டியிடுவோம்’” தொடர்ந்து வாசிக்க…)