பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடமும் இலங்கை 40வது இடமும் பெற்றுள்ளது!

பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடமும் இலங்கை 40வது இடமும் பெற்றுள்ளது! உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் வாழ்க்கைத்தரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வருங்கால தலைமுறை திட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அந்த பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

(“பொருளாதார அடிப்படையில் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் இந்தியா 62-ஆம் இடமும் இலங்கை 40வது இடமும் பெற்றுள்ளது!” தொடர்ந்து வாசிக்க…)

இலங்கை தமிழ் இசையை தீவகத்திற்கு அப்பால் ஜனசஞ்சரமாக்கிய ஏ.ஈ. இற்கு அஞ்சலி

(சாகரன்)
முத்தழகு, கலாவதி, பரமேஸ், கோணேஸ் என்று இலங்கை தமிழ் இசைக்கு குரலால் வளம் கொடுகப் புறப்பட்டவர்கள் ஓரளவிற்கு மேல் ஜனசஞ்சமாக தமிழ் இசையைக் கொண்டு செல்ல முடியவில்லை. இவ் வேளையில் பைலாப் பாட்டு இரகத்தில் பொப் இசையாக இலங்கைத் தமிழ் இசைக்கு ஜனசஞ்சர ஆதரவை உருவாக்கியதில் ஏஈ மனோகரனுக்கு முக்கிய பங்குண்டு. நித்தி கனகரத்தினம், அமுதன் அண்ணாமலை, எம்எஸ். பெனான்டோ போன்றவர்கள் சமகாலத்தில் இதேயளவு பங்களிப்புகளை செய்திருக்கின்றார்கள். இந்த ஜனசஞ்சர அறிமுகம்தான் இலகு இலங்கை தமிழ் இசையை எம் தீவிற்கு அப்பால் கொண்டு செல்வதற்கு ஆதாரமாக இருந்தது.

(“இலங்கை தமிழ் இசையை தீவகத்திற்கு அப்பால் ஜனசஞ்சரமாக்கிய ஏ.ஈ. இற்கு அஞ்சலி” தொடர்ந்து வாசிக்க…)

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கா கைது செய்யப்பட வேண்டும்.

(சாகரன்)

பதுளை பாடசலை ஒன்றி அதிபர் பவானி ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கா முழந்தாளிட்டு மன்னிப்பு கோர வைத்த சம்பவம் எந்த வகையிலும் எற்புடையது அல்ல. செல்வாக்கின் அடிப்படையில் இரு மாணவர்களை பாடசாலையில் சேர்த்துக் கொள்ளுமாறு வலியுறுத்திய அதிகாரிகளை கல்வி அமைச்சின் சுற்றறிக்கையிற்கு அமையவே தன்னால் செயற்பட முடியும் என்ற அறம் சார்ந்த செயற்பாட்டிற்கு முதலில் அதிபர் பவானியை பாராட்டியே ஆக வேண்டும்.

(“ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கா கைது செய்யப்பட வேண்டும்.” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் – கண் மூடி ஆதரவும் எதிர்ப்பும்

கடந்த இரு நாட்களும் சுமந்திரனின் பேச்சை அதுவும் நேற்றைய பேச்சை இரு தடவைகள் கேட்டேன் .ஒரு ஆசிரியராக இருந்தால் 90 மார்க்குகள் கொடுப்பேன். கேள்விகளுக்கே இடம் இல்லாமல் அனைத்து விடயங்களையும் மிக தெளிவாக அனைவருக்கும் விளங்கும் விதமாக புள்ளிவிபரங்களுடன் பேசினார்.

(“சுமந்திரன் – கண் மூடி ஆதரவும் எதிர்ப்பும்” தொடர்ந்து வாசிக்க…)

முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தின் அதிபர் ஆர்.பவானியை, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வைத்து, அச்சுறுத்தி முழங்காலிடவைத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. முதலமைச்சர் முன்னிலையில் முழங்காலிட்டு, வணங்கி மன்னிப்பு கேட்ட விவகாரத்தை அந்த அதிபர் மூடிமறைத்தார். எனினும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

(“முழங்கால் விவகாரத்தால் பதுளை சூடானது” தொடர்ந்து வாசிக்க…)

ஏ.இ. மனோகரன் காலமானார்

சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன்  சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார். இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார். பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார்.  அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.

உயர்ந்தது அடிப்படைச் சம்பளம் மட்டும் அல்ல… விலைவாசியும்… முதலாளிகளின் கரங்களும்தான்…

Lost jobs, cut hours, no paid breaks. Do minimum wage hikes hurt workers?

(நான் வாழும் கனடா ஒன்றாறியோ பற்றி பதிவு இது. ஆனால் முழு முதலாளித்துவ நாடுகளுக்கும் இது பொருந்தியே இருக்கின்றது. எனது நண்பர்கள் சம்பளத்தை உங்கள் நாட்டு நாணயத்திற்கு மாற்றி இந்த பதிவை வாசியாதீர்கள். இங்கும் ஏற்பட்டிருக்கும் வாழ்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப தாமதம் ஆனாலும் அடிப்படைச் சம்பளம் 14 டாலர் ஆக உயர்த்தப்பட்டது நியாயமானதே(போதுமான என்ற அர்த்தம் இல்லை)

(“உயர்ந்தது அடிப்படைச் சம்பளம் மட்டும் அல்ல… விலைவாசியும்… முதலாளிகளின் கரங்களும்தான்…” தொடர்ந்து வாசிக்க…)

‘ஜெருசலேம் முடிவு, பலஸ்தீனத்துக்குக் கிடைத்த அறை’

இஸ்‌ரேலின் தலைநகராக ஜெருசலேத்தை அங்கிகரிக்கும் ஐக்கிய அமெரிக்காவின் முடிவை, தமது நாட்டுக்குக் கிடைத்த அறை எனக் குறிப்பிட்டுள்ள பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸ், இஸ்‌ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான பிரச்சினைகள் தொடர்பான மத்தியஸ்தத்தில், ஐ.அமெரிக்கா தனித்துச் செயற்படுவதை ஏற்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

(“‘ஜெருசலேம் முடிவு, பலஸ்தீனத்துக்குக் கிடைத்த அறை’” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும்

(க. அகரன்)

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது.

(“தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

என் பார்வையில்….. அறம்

(சாகரன்)

அறம் ராக்கெட் விடும் தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த தேசம் ஒன்றில் ஆழ் குழிக்குள் வீழ்ந்த கிராமத்துக் குழந்தையை காப்பாற்ற ஒழுங்குகள் இல்லாத கையறு நிலையை எடுத்துக்காட்டும் ஒரு சினிமா. தொழில் நுட்ப வளர்ச்சி மக்களின் வாழ்வின் மேம்பாட்டிற்கு உதவாத வெறும் வியாபாரப் போக்கில் நீட்சியடைந்திருக்கும் செய்தியை அறைந்து கூறி இருக்கும் சினிமா.

(“என் பார்வையில்….. அறம்” தொடர்ந்து வாசிக்க…)