யாழ்ப்பாண பொலீசாரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது

கோவில் வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதிவழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், அப்போது எனது வீட்டுக்கு சற்றுத் தொலைவில் மறைவாக யாழ் போக்குவரத்து போலீசார் நின்றிருந்தனர் அவர்களில் சுமித் என்ற பொலீஸ் அதிகாரி வீட்டு வாசலில் நின்ற எனதருகில் வந்து எனது மோட்டார் சைக்கிள் காப்புறுதி பத்திரம் மற்றும் இறை வரி பத்திரம், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களைக் காண்பிக்குமாறு கோரினார், நான் அவரிடம் அதற்கு மறுத்துவிடடேன். வீதியில் செல்லும்போது மாத்திரமே போலீசாருக்கு ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும் நான் எனது வீட்டு வாசலில் நின்றிருந்த போது நீங்கள் ஆவணங்களைக் கோருவது சட்டவிரோதமானது ஆகும் என்று கூறி நான் எனது வீட்டுக்குள் சென்று விட்டேன்.

(“யாழ்ப்பாண பொலீசாரின் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானது” தொடர்ந்து வாசிக்க…)

என் இனிய குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக எனக்கும் பலருக்கும் அறிமுகமான நடிகை ஸ்ரீதேவி. பாபு படத்தில் அவரின் வசதி, வறுமை என்ற இரு மாறுபட்ட நடிப்பில் எனக்கு அறிமுகமாகி பாலசந்தரின் கறுப்பு வெள்ளையில் கமலஹாசனின் காதலி ரஜனியின் தாய் என்ற இரு பரிமாண நடிப்பை தனது 15 வயதில் வெளிப்படுத்தி கமல், ரஜனி என்ற இரு முன்னிலை நடிகர்களையும் தனது நடிப்பால் தோற்க வைத்தவர். கூடவே பாரதிராஜாவின் 16 வயதில் சப்பாணியின் ஆதரவுடன் பரட்டையிடம் இருந்து தன்னை பாதுகாத்த பண்பட்ட நடிப்பு இவரை உச்சத்திற்கு கொண்டுவர பாபுவில் சிவாஜியின் பேத்தி போல் தோன்றியவர் அவருக்கு காதலியாக நடிக்கும் பார்முலா நடிப்பிற்குள் பிற்காலத்தில் தள்ளப்பட்டவர்.

(“என் இனிய குழந்தை நட்சத்திரம் ஸ்ரீதேவி” தொடர்ந்து வாசிக்க…)

ரஷ்யாவில் புரட்சி

ரஷ்யாவில் புரட்சி பாதுகாக்கப்பட்டவுடன்,
ஆரம்ப கொள்கைத் தவறுகளுக்குப் பின்னர்,
புதிய பொருளாதாரக் கொள்கையால் வழிநடத்தப்பட்ட
கலப்புப் பொருளாதாரத்தை நிர்மாணிக்கும் பணியில்
சோவியத் யூனியன் முனைந்தது. 
குறிப்பாகச் சிறு நிலவுடைமை மற்றும் அந்நிய முதலீடு ஆகிய தனிச்சொத்து உள்ளிட்ட பலதரப்பட்ட சொத்துடைமை வடிவங்களை அது சட்டபூர்வமாக்கியது. (“ரஷ்யாவில் புரட்சி” தொடர்ந்து வாசிக்க…)

நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரமாக பாவிக்கப்படுகிறது.  அப்படி பாவிப்பதில் அதற்கான நியாயமும் உள்ளது. காரணம் மயிலாக வந்த ஸ்ரீதேவியாகட்டும் அல்லது எண்பதுகளின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியாகட்டும், அந்த தலைமுறையின் காலாச்சார மறு-ஒப்பனையாக (cultural re-fashioning) குறிப்பாக காதலுறுதலுக்கான அழகியல் பிம்பத்தை சமூக நனவிலியில் கட்டமைத்தவர். அந்த தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒருசேர விரும்பிய ஒரு தமிழ் முகமாக இருந்தவர். கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஸ்ரீதேவி அடித்தட்டு மக்களின் குறிப்பாக விளிம்புநிலையினரின் முகத்தை தனது முக-ஒப்பனைகள் வழியாக ஆள்தள உளவியலிலை வடிவமைத்தவர். ஆனாலும், மேட்டிமையினர் மற்றும் மையத்துவ நடுத்தர வர்க்கத்தினர் ஸ்ரீதேவியால் கவரப்படவில்லை. அவர்கள் அவரை ஒரு மாதிரியாக கொள்ளவில்லை. இது உள்ளார்ந்து நிகழும் ஒரு உளவியல் போராகக் கொள்ளலாம்.

(“நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்” தொடர்ந்து வாசிக்க…)

வரதராஜப்பெருமாளின் வாக்குமூலம்

எனக்கு இடது கைப்பக்கம் இருப்பவர் இப்போது வடக்கு ஆளுநராக இருக்கும் ரெஜினோல்ட் கூரே அவர்கள். அதற்கு அடுத்ததாக இருப்பவர் இப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருக்கும் ராஜித செனிவிரத்னா. அந்த நாட்களில் எமது வடக்கு கிழக்கு மாகாண ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள். அப்போது இவர்கள் விஜய குமாரதுங்க ஆரம்பித்த ஐக்கிய சோசலிச முன்னணியின் சார்பில் தென்னிலங்கையில் மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்கள்

Demons in Paradise… சொர்க்கத்தில்  சாத்தான்கள்

(அரவம்)

இலங்கையின் இன அரசியல்மோதலை (Sri Lanka’sEthno Political  conflict) கருப்பொருளாகக் கொண்ட யூட் இரத்தினத்தால் எழுதி இயக்கப்பட்டஆவணப்படத்தைஅண்மையில் பார்க்கசந்தர்ப்பம் கிட்டியது. அருமையானபடம்.சிந்தனையைக்கிளறி எம்மை நாமே கேள்விகேட்டு சுயமீளாய்வைதூண்டச்செய்யும் படம். எம்மை அழவைத்து வெட்கித்தலைகுனியவைக்கும் ஆவணப்படம். எம் இனத்தின் மேல் உண்மையானபற்றுள்ள ஒவ்வொருதமிழனும் அவசியம் பாரக்கவேண்டியபடம். குறிப்பாக இளம் தலைமுறையினர் இப்படத்தைபார்த்து தங்கள் பெற்றோர்களிடம் “இவ்வளவு அட்டூளியங்களும் உங்கள் கண் முன் நடக்கும்போதுநீங்கள் என்னசெய்தீர்கள்”?என அவர்களது மனசாட்சியை உறுத்தசெய்யவேன்டும்.

(“Demons in Paradise… சொர்க்கத்தில்  சாத்தான்கள்” தொடர்ந்து வாசிக்க…)

ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.

எங்கள் தெருவில் இருந்த அந்த நாய்
வாயில் அடிபட்டப் புண் புரையோடிப் போய்
மரணாவஸ்தையில் கிடந்து அரற்றிற்று.

தினமும் பிஸ்கெட் போட்டதால் பல்லாண்டு நண்பன்.

ஸ்கேன் பவுண்டேஷனுக்கு சொன்னேன்.
டாக்டர் வந்து பார்த்தார்.

(“ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.” தொடர்ந்து வாசிக்க…)