நான் ரசித்த மிக அழகான பதிவு…

 

அவசியம் முழுவதுமாக படித்துவிட்டு பிறர் பார்க்க பகிருங்கள்…

ஒரு நடுத்தர குடும்பத்து வீட்டில் நடக்கும் பதிவு,

மகனுக்கு வீட்டில் இருக்கவே
பிடிக்கவில்லை.

‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போகிறாய்,

ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை,

பேனாவை
ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.

இப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது
அவனுக்குப் பிடிக்கவில்லை.

(“நான் ரசித்த மிக அழகான பதிவு…” தொடர்ந்து வாசிக்க…)

சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…

நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல் போன் கோபுரங்களும் அதிலுருந்து வரும் கதிர் வீச்சும் தான் சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம் என்று…

எனக்கு நிச்சயமாக தெரியாது அது தான் காரணமா என்று!!

ஆனால் மிக நிச்சயமாக தெரியும அது மட்டும் காரணம் இல்லை என்று!!

நான் 12 ஆம் வகுப்பு பயிலும் வரை எங்கள் தோட்டத்தில் அணைத்து வகை சிறு தானியமும் பயிர் செய்தோம்.

(“சிட்டுகுருவுகளின் அழிவிருக்கு காரணம்…” தொடர்ந்து வாசிக்க…)

கம்யூனிஸ்டுகள் சிந்தனைக்கு (!!!????)

கொஞ்சநாள் முன்புவரை காங்கிரஸ் ஆட்சிதான் இருந்தது.

அப்போதும் இதே இந்திய வரலாற்றுக் கழகம் இருந்தது.

ரொமீலா தாப்பர் – இர்பான் ஹபீப் – பணிக்கர் என்று மார்க்சிய சிந்தனையாளர்கள் அதில் பொறுப்பேற்று நிரம்பி வழிந்தார்கள்.

அவர்களை கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்கள் என்பதற்காக – ‘வரலாற்றை திரித்து தமக்கு சாதகமாக எழுதுவதற்காக’ காங்கிரஸ் கட்சி நீக்கவில்லை.

ரொம்பப் பெரிய கதை வேண்டாம்.

(“கம்யூனிஸ்டுகள் சிந்தனைக்கு (!!!????)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!

தமிழ்த் தேசியம் என்றால் என்ன? தமிழ்ப் பேசுகின்ற எல்லோரும் ஒரே தேசிய இன வகைக்குள் அடங்குவார்கள் என்பதே அதன் மறு அர்த்தம். ஆக, தமிழ் நாடு, வட கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், இன்னும் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்கள், வேண்டுமானால் புலம்பெயர் தமிழர்கள் போன்ற அனைவரையும் இணைத்து ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்வதே தமிழ்த் தேசியமா என்ன? தமிழ்த் தேசியவாதிகள் பல சந்தர்ப்பங்களில் தம்மைத் தமிழ் உணர்வாளர்கள் என்றும் அழைத்துக்கொள்கிறார்கள். தமிழ்த் தேசியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்பவர்களின் பொதுவான ஆரம்பமே தாம் ஏனைய மொழி பேசும் மக்களைவிட உயர்வானவர்கள் என்பதே. இவர்கள் அனைவரதும் மற்றொரு முழக்கம் ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பது என்பதாகும் எனப் புரிந்துகொள்ளலாம்.

(“தமிழ்த் தேசியம், சீமான் – திருமுருகன்,வை.கோ.. ஒரு வேண்டுகோள்!” தொடர்ந்து வாசிக்க…)

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்ட பொது மக்கள் கலந்துரையாடல் கூட்டம்

கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 04ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு திருகோணமலை குளக்கோட்டன் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஒன்றியத்தின் இணைப்பாளர்களான சிரேஸ்ட சட்டத்தரணி த.சிவநாதன், செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன் ஆகியோரின் அழைப்பின் பேரில் இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(“கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்ட பொது மக்கள் கலந்துரையாடல் கூட்டம்” தொடர்ந்து வாசிக்க…)

வரலாற்று சுவடுகள்

(நேரத்தை ஒதுக்கி படித்துப் பாருங்கள் துரோகிகள் என்று கூறும் சமூகமும் புதைந்து கிடக்கும் வரலாற்று உண்மைகள் பிரபாகரனையும் விட்டுவைக்காத துரோகப் பட்டியலில்)

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜாஎனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள்தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்குசந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன.அப்போது இணக்கம் என்ற சொல்லைத் தவிர வேறுஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனதுகிராமத்தில் ‘இயக்கம்’ என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் ‘பொடியள்’என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ்தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா, நான் தமிழ்த் தேசிய அரசியல்குறித்து அறிந்து கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார்.

(“வரலாற்று சுவடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?

(எம். காசிநாதன்)
‘பஞ்சாப் தேசிய வங்கி’ மோசடி, இந்திய வங்கிகளின் அத்தியாயத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசாங்கத்துக்கு எதிராக, தங்கள் தாக்குதலைத் தொடுக்க, எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்துள்ள மிக முக்கியமான ஆயுதமாக, பஞ்சாப் வங்கி ஊழல் அமைந்திருக்கிறது. ‘லெட்டர் ஒப் அன்டர்டேங்கிங்கை’ பயன்படுத்தி, 110,400 மில்லியன் ரூபாயை அபகரித்துள்ள வைரவியாபாரி நிராவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடிக்குப் பெரிய தலைவலியைக் கொடுத்திருக்கிறார்.

(“பஞ்சாப் வங்கி ஊழல்: பா.ஜ.கவின் பிரசார ஆயுதம் பறி போகிறதா?” தொடர்ந்து வாசிக்க…)

மனிதம் மரணித்த சிரிய யுத்தம்

(சாகரன்)
 
இடதுசாரி அரசை நிறுவிய ஆப்கானிஸ்தானை இல்லாமல் செய்தல்… மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஈரான் நாட்டில் ஆட்சியை அகற்றல்…. வாழ்கைத் தரதில் உயர்ந்து நின்ற ஈராக் லிபியா இன் இருப்பை கேள்விக் குறியாக்கல்…. இவற்றிற்கும் மேலாக மத்தியதரை கடற்பகுதியில் இருக்கும் (எண்ணை)வழங்களை சுரண்டுதல் இவற்றிற்காக தமக்கு சாதகமான பொம்மை அரசுகளை அங்கு உருவாக்குதல் என்பதற்கு மேற்குலகம் கையாண்ட வழி முறை இஸ்லாமிய மதத்தை முன்னிறுத்தி செயற்படும் தீவிரிவாத்தை உருவாக்குதல் என்பது முகைதீன் என்று ஆரம்பி ஐஎஸ் வரை உருவாக்கட்ட அமைப்புவரை நீண்டு இன்று சிரியாவில் உச்சமாக மையம் கொண்டு யுத்தத்தின் விளைவுகளை நாம் இன்று காண்கின்றோம்.

(“மனிதம் மரணித்த சிரிய யுத்தம்” தொடர்ந்து வாசிக்க…)

அம்பாரை சம்பவமும் அது சொல்லும் பாடங்களும்

மலட்டுத்தன்மை! இது தான் சிங்களவர்கள் சொல்லும்/ குற்றம் சாட்டும் “வந்தபாவய” எனும் சொல்லுக்கு நேரடியான தமிழ் சொல்லாக எனக்கு தெரிகிறது. இதை விட நல்ல சொற்கள் இருந்தால் யாராவது கூறுங்கள். மலட்டுத்தனத்தை ஏற்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்கள் என்பதே சமீபத்திய அம்பாரை கலவரத்தின் ஆணி வேராக இருந்தது.

(“அம்பாரை சம்பவமும் அது சொல்லும் பாடங்களும்” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?

(எம்.குமரேசன் எம்.குமரேசன்)

`நடிகை ஸ்ரீதேவி, உண்மையிலேயே சந்தோஷமாக வாழ்ந்தாரா அல்லது நிஜத்திலும் நடித்தாரா?’ என்று பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீதேவி, வாழ்க்கையில் பல விஷயங்களில் தோல்வியைச் சந்தித்தவர்தான். கோலிவுட்டுடன் ஒப்பிடுகையில் பாலிவுட் மிகப் பெரியது. பத்மினி, வைஜெயந்தி மாலா, வஹிதா ரஹ்மான், ஹேமமாலினி, ரேகா வரிசையில் தென்னிந்தியாவிலிருந்து சென்று பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றவர் ஸ்ரீதேவி. பாலிவுட்டில் `லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற அந்தஸ்த்தைப் பெற்ற ஒரே நடிகை இவர் மட்டுமே! அவரின் சொந்த வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சியாகவா இருந்தது?

(“ஸ்ரீதேவி, மிதுன், போனி கபூர்… ராம் கோபால் வர்மா சொன்னதும் நிஜத்தில் நடந்ததும் என்ன?” தொடர்ந்து வாசிக்க…)