எம்ஜிஆர் காலத்திலும் இதே கொலைகள் நடைந்தேறியே இருக்கின்றது

“தொழிலாளர்களையும், மாணவர்களையும் ஒடுக்கிய பிறகு விவசாயிகள் பக்கம் திரும்பியது, எம்.ஜி.ஆரின் பாசிச பார்வை. எம்.ஜி.ஆரின் தொகுதியாயிருந்த அருப்புக்கோட்டை அருகே, வாகை குளம் கிராம விவசாயிகள் ராட்சத ஆழ்கிணறு தோண்டுவதற்கு எதிராகப் போராடினர். அவர்கள் மீது போலீசு துப்பாக்கி சூடு நடத்தி 2 பெண்கள் உட்பட 5 பேரைச் சுட்டுக் கொன்றது, எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு வழக்கம் போல இறந்து போனவர் குடும்பத்துக்குத் தலா ரூ 5000 நிதியும், விசாரணைக் கமிஷனும் அறிவித்தார் எம்.ஜி.ஆர். ஏற்கெனவே பல கோரிக்கைகளை வைத்துப் போராடி வந்த நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலந் தழுவிய கடையடைப்பு நடத்தியது.

(“எம்ஜிஆர் காலத்திலும் இதே கொலைகள் நடைந்தேறியே இருக்கின்றது” தொடர்ந்து வாசிக்க…)

“வெறுங்கையுடன் நிற்கிறேன்”

(Karunakaran Sivarasa)

“அளவெட்டி மல்லாகம் ப.நோ.கூ. சங்கத்தின்ர தலைவராக இருந்த ஜெகநாதனும் மகனும் கரண்ட் அடிச்சு பலியாகீட்டினம. இண்டைக்குக் காலமைதான் சம்பவம் நடந்திருக்கு” என்று சொல்லி, அந்தச் செய்தியை வாசித்தார் கே.கே என்று நான் எப்போதும் அன்பாக அழைக்கும் ஊடகவியலாளர் கிருஸ்ணகுமார் .கிருஸ்ணகுமாரின் குரல் தளம்பியது. அது ஒரு சகோதரனின் இழப்பினால் உண்டான சோகத்தின் தவிப்பு. தத்தளிப்பு.

(““வெறுங்கையுடன் நிற்கிறேன்”” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடியிற்கான அறுவடைக்கு சொல்லும் சேதி……?

வறுமையும் பஞ்சமும்
தலைவிரித்தாடிய ரஷ்யா.

1905. ஜனவரி 9.
ஞாயிற்றுக்கிழமை.

“ஜார் மன்னருக்கு நடப்பது எதுவும் தெரியாது.
அவரிடம் முறையிடுவோம் வாருங்கள்”
என்று…
மக்களை – தொழிலாளர்களைத் திரட்டினார்
கப்பான் என்கிற கிருஸ்துவ பாதிரியார்.

(“தூத்துக்குடியிற்கான அறுவடைக்கு சொல்லும் சேதி……?” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நேற்று (22.05.2018) நடந்த ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தின்போது பயங்கர வன்முறை வெடித்தது. போலீஸ் துப்பாக்க டில் 9 பேர் உயி ரிழந்தனர். தடியடி, கல்வீச்சு சம்பவங்களில் 12 போலீஸார் உட்பட 75-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வாகனங்கள் கொளுத்தப்பட்டன. தூத்துக்குடி நகரமே கலவர காடாக மாறியது. பதற்றம் நீடிப்பதால் பெருமளவு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(“ஸ்டெர்லைட் போராட்டம்: கள நிலவரம்” தொடர்ந்து வாசிக்க…)

ஆடைக் கலாச்சார அரசியல்: புதிய திசைகள்

தெற்காசியாவின் எதிர்கால அரசியல், சமூக போக்கை தீர்மானிப்பதில் மதங்கள் கணிசமான பங்கு வகிக்கப் போகின்றன என்பதையே நம் கண் முன்னே நடைபெற்று வரும் சம்பவங்கள் உறுதி செய்து வருகின்றன. இந்த மாற்றமானது தேசங்களினதும் வெவ்வேறு மக்கள் கூட்டத்தினரதும் இன்றைய பண்பை புரட்டிப் போட்டு அம்மக்களை வெறும் மதக் குழுக்களாக குறுக்கி விடும் ஆபத்தை தன்னகத்தே கொண்டிருப்பது சமூக நலன் சார்ந்து செயற்படும் சக்திகளின் கரிசனையாக உள்ளது.

(“ஆடைக் கலாச்சார அரசியல்: புதிய திசைகள்” தொடர்ந்து வாசிக்க…)

முள்ளிவாய்காலில் நாம் குலறியபோது எவனுமே கண்டுகொள்ளவில்லை

ஐயோ எங்களை காப்பாற்றுங்கள், சிங்களவன் எங்களை கொல்கிறான் என குடாநாட்டில் இருந்து ராஜிவை நோக்கி கூக்குரல் எழுப்பினோம். ஊரடங்கு சட்டம் போட்டு எங்களை பட்டினி போட்டு ஆமியை விட்டு எங்களை சாகடிக்கின்றான். உடனேயே தலையிட்டு அதனை நிறுத்துங்கள் என இரவு பகலாக யாழ் குடாநாடு ஓலமிட்டது. கிட்டத்தட்ட முள்ளிவாய்க்கால் அபயக்குரல்தான் அன்று ஒழித்ததும். எம்ஜிஆரின் தொப்புழ்கொடி தமிழகமும் ராஜிவை யாழ்ப்பாணத்துக்கு உதவுமாறு அந்த மனிதரின் பிறைவேட் டைமில் கூட நெருக்கடி கொடுத்தது. (“முள்ளிவாய்காலில் நாம் குலறியபோது எவனுமே கண்டுகொள்ளவில்லை” தொடர்ந்து வாசிக்க…)

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி

தமிழகத்தில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்களில் 9 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது மாநில அரசே மக்களைக் கொன்று குவிக்கும் அரசு பயங்கரவாதச் செயலுக்கு கொடூரமான உதாரணமாகும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து தமிழக அரசைச் சாடியுள்ளார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

(“ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு ‘அரச பயங்கரவாதம்’: தமிழக அரசை விளாசிய ராகுல் காந்தி” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை: தேவே கவுடா

காங்கிரஸ் அல்லாத பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை என மதச் சார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் தேவே கவுடா தெரிவித்திருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் இருக்கும் சூழலில் தேவே கவுடாவின் இந்த கருத்து அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

(“காங்கிரஸை தவிர்த்து பாஜக எதிர்ப்பு கூட்டணியை உருவாக்குவது சாத்தியமில்லை: தேவே கவுடா” தொடர்ந்து வாசிக்க…)

ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?

கர்நாடகாவில் நாளை முதல்வராக மஜத தலைவர் குமாராசாமி பதவியேற்கிறார். கர்நாடக பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி.பரமேஸ்வரா அம்மாநிலத்தின் முதல் தலித் துணை முதல்வராகப் பொறுப்பேற்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனாலும் மதச்சார்பற்ற ஜனதாதளம் காங்கிரஸின் இந்த முன்மொழிவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பதாகவும் கூறப்படுகிறது.

(“ஜி.பரமேஸ்வரா கர்நாடகத்தின் முதல் தலித் துணை முதல்வர்?” தொடர்ந்து வாசிக்க…)