தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்

(காரை துர்க்கா)
“முல்லைதீவு மாவட்டத்தின் கொக்கிளாய், நாயாறு, சாலை, சுண்டிக்குளம் எனப் பல பிரதேசங்களைத் தாண்டிய, தென்னிலங்கை மீனவர்களின் ஆக்கிரமிப்பு, தற்போது யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வரை சென்று விட்டது. இப்படியே சென்றால், யாழ்ப்பாணம் நல்லூர் முருகன் ஆலயத்துக்கு அருகில் விகாரை அமையப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் வடக்கு மாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார்.

(“தமிழினத்தின் முடிவுறாத சாபம்; அதுவே தென்னிலங்கையின் வரம்” தொடர்ந்து வாசிக்க…)

முகமட் அலியின் நினைவு தினம் – 3 யூன்

 10000 மைல்களுக்கு அப்பால் போய் அந்த மண்ணிற மனிதர்கள்மீது (வியட்நாம் மீது) அமெரிக்க இராணுவ உடையணிந்து குண்டுகள் வீசவும் படுகொலை செய்யவும் என்னைக் கேட்கிறார்கள். இங்கு கறுப்பின மக்களை நாய்போல நடாத்தவும் அவர்களது மனித உரிமைகளை மறுக்கவும் செய்கிற வெள்ளை எசமானர்கள் உலகம் முழுமையும் நிற மனிதர்கள் மீதான தமது மேலாதிக்கத்தை நிறுவ முனைகிறார்கள். இவர்களுக்காக அந்த ஏழை மக்களின் வீடுகளை எரிக்கவும் படுகொலை செய்யவும் என்னால் முடியாது. இது முடிவுக்கு வரவேண்டும்.

(“முகமட் அலியின் நினைவு தினம் – 3 யூன்” தொடர்ந்து வாசிக்க…)

தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை

ஏப்பிரல் மாதம் 25ந் திகதி தங்களது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ‘எதுவரை’ இதழ் 21 இல், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகிய ‘1952-1986 தோழர் விசுவானந்ததேவன்’ நினைவு நூல் பற்றி எஸ்.கே.விக்கினேஸ்வரன் எழுதிய எதிர்வினைக் குறிப்புகளைப் படித்தேன்………..

(“தோழர் விசுவானந்ததேவன் நூல் பற்றிய எஸ்.கே. விக்னேஸ்வரனின் குறிப்புகளுக்கு, பா.பாலசூரியனின் எதிர்வினை” தொடர்ந்து வாசிக்க…)

‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் 76ஆவது பிறந்தநாள் வைபவத்தில் கலந்துகொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரைக்கு, எவ்வகையிலும் பதிலளிப்பதற்கு முயல வேண்டாமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்டளையிட்டுள்ளார்.

(“‘சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்’” தொடர்ந்து வாசிக்க…)

தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம் தன் உண்மை முகத்தைக் காட்டும் போது மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். எதை ஆண்டாண்டு காலமாக, ஆதரித்துக் காத்து வந்தார்களோ, அதுவே அவர்களைக் குறிவைக்கும் போது, பாரபட்சமின்றிக் கொன்றொழிக்கும் போது, மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்தத் திகைப்பிலிருந்து அவர்கள் வெளிவரும் முன்னர், அவர்களது எண்ணங்கள் மடை மாற்றப்படுகின்றன. அதிகாரத்துக்கும் ஆட்சியாளர்களுக்கும் மக்கள் சிந்திப்பது ஆபத்தானது. மக்கள் சிந்திப்பதையும் செயற்படுவதையும் ஒன்றிணைவதையும் அனுமதிப்பதன் விளைவுகளை அவர்கள் அறிவார்கள். இதனால்தான், அறிவால் அல்லது ஆயுதத்தால் மக்களது சிந்தனைக்கும் செயலுக்கும் அவர்கள் தடைபோட முனைகிறார்கள். இது என்றென்றைக்குமானதல்ல.

(“தூத்துக்குடிப் படுகொலைகள்: நின்றும் அன்றும் கொல்லுதல்” தொடர்ந்து வாசிக்க…)