சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது

அண்மையில் நாவற்குழி தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளில் குடியேறிய சிங்கள மக்களுக்கு எதிராக சட்டத்தரணி கேசவன் சயந்தன்( மாகாணசபை உறுப்பினர்) வழக்கு தொடுத்ததாக செய்திகளில் படித்தேன். இந்த வழக்கு சட்டரீதியாக சரியாக இருக்கலாம்.இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது தேசிய வீடமைப்பு அதிகாரசபை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களுமே. அவர்கள் அதை செய்யாதது தவறு.

(“சட்டம் எப்போதுமே ஏழைகளுக்கு எதிரானது” தொடர்ந்து வாசிக்க…)

பேட்டைக்காரன் கலைஞர்.

(தமிழ்ப் பிரபா)

கலைஞரைப் பற்றி இங்கே எழுதக்கூடிய நிதானமான மனச்சூழல் இப்போதுதான் கிடைத்தது. கலைஞர் செய்த முக்கியமானதொரு காரியமாக என்னளவில் நினைப்பது, ‘மெட்ராஸ்’ கூவத்தை ஒட்டி வாழ்ந்த குடிசைப்பகுதி மக்களுக்கு ஹவுசிங் போர்டு கட்டிக் கொடுத்தது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் ‘குடிசை மாற்று வாரியம்’ என்று அவர் தொடங்கிய ஹவுசிங்போர்டு திட்டம் அடித்தட்டு மக்களின் வாழ்வியலில் மிகப்பெரிய உளவியல் பலத்தை சேர்த்தது. கலாசார மாற்றத்தைக் கொண்டுவந்தது. தங்களிடையே இப்படியொரு மாற்றத்தை நிகழ்த்திய கலைஞரையும் மக்கள் இன்றளவும் விட்டுக் கொடுத்ததில்லை.

(“பேட்டைக்காரன் கலைஞர்.” தொடர்ந்து வாசிக்க…)

கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்

இந்தியாவின் கேரளாவின் வயனட், இடுக்கியில் மழை தொடர்பான சம்பங்களால் குறைந்தது 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டதுடன், டசின் கணக்கானோருக்கு மேல் காணவில்லை என்று கூறப்படுகிறது.

(“கேரளாவில் 22 பேர் இறந்திருக்கலாமென அச்சம்” தொடர்ந்து வாசிக்க…)

தேசத்துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் நாட்டில் இடம்பெற்ற, ஸ்டெர்லைட் விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் சேலம் சென்னை எட்டு வழிச்சாலை உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பேசிவிட்டு இன்று அதிகாலை நோர்வேயிலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை வந்தடைந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருணாநிதியின் வசனங்கள்…….

“பாலைவன ரோஜாக்கள்” என்றொரு திரைப்படம் 1986 இல் வெளியாகியிருந்தது. மலையாளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் சாயலாக மணிவண்ணன் தமிழில் எடுத்த படம். அரசியல் எள்ளல் (political satire) நிறைந்த திரைப்படம். அரசியலில் உள்ள சகல கறுப்பு பக்கங்களையும் அம்பலப்படுத்துகின்ற துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளர் கதாபாத்திரத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம். (“கருணாநிதியின் வசனங்கள்…….” தொடர்ந்து வாசிக்க…)

எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……..(Part 2)

எனது பயண அனுபவங்களில் முதல் பகுதியை வெளியிட்டு இருந்தேன். முதலில் இதற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இது என்னை செழுமைப்படுத்த உதவியது என்பதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை ஒரு ஆரோக்கியமான விவாதத்தை இது தொடங்கி வைத்திருக்கின்றது என்பதில் எனக்கு மகிழ்சியே. (“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த……..(Part 2)” தொடர்ந்து வாசிக்க…)

என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.

பன்முகத்தன்மை கொண்ட ஒரு முதியவர் தன் மூச்சை நிறுத்திக்கொண்டார். தமிழ்நாட்டின் ஐம்பது வருடத்துக்கு மேலான ஆழுமை அமரராகிவிட்டார். ஒரு வரலாற்று நாயகன் தன் பயணத்தை முடித்துக்கொண்டார். பள்ளிபருவத்திலேயே கையெழுத்து பிரதியாக தன் எழுத்து பணியை தொடங்கி நாடக கலைஞனாக பரிணமித்து திரையுலக ஜாம்பவானாக உச்சம் தொட்ட மனிதர் மௌனித்து விட்டார்.

(“என் கண்ணில் நீர் கசிவை தராத கலைஞர் மறைவு!.” தொடர்ந்து வாசிக்க…)

வெட்கம் இல்லையா?

1974 இல் சிவகுமாரன் தற்கொலைசெய்தார்.1975 இல் துரையப்பா தமிழ் துரோகி என சுடப்பட்டார்.2009 இல் புலிகள் அழிக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி 35 வருடங்கள் போராடி இருக்கிறார்கள்.

(“வெட்கம் இல்லையா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 1)

(Thiruchchelvam Kathiravelippillai)


எண்பதுகளின் முன்னர் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு இருந்தது. தமிழர்கள் தமிழ் பேசுகின்ற மக்களாவர். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் மெதுவாக கூர்மையடையத் தொடங்கிய வேளையிலும் தமிழ் பேசும் மக்களிடையே நெருங்கிய உறவு நிலவியது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கூட பல நூறு முஸ்லிம் இளைஞர்களும் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 1)” தொடர்ந்து வாசிக்க…)

கலைஞரே சென்று வாருங்கள்

உன் தமிழ் என்னையும் கவர்ந்தது. உன் பேச்சு என்னை ஈர்த்து. உன் எழுத்து என்னையும் எழுதத் தூண்டியது. உன் (திராவிட)இயக்கம் எனக்கு பிரமிப்பை தந்தது. உன் அரசியல் 25 இலட்சம் ஈழத் தமிழ் மக்களின் மேல் உனக்கிருந்த பற்று அக்கறையை மாகாண சபையை கலைத்து விடு என்ற போது எனக்கு புரிந்தது. உன் வன்மம் என் தோழன் நாபாவின் கொலையில் எனக்கு பாடம் சொன்னது. உன் ஆழுமை தனி ஒருவனாக மட்டும் வென்று(ராஜீவ் கொலைக்கு பின்பு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில்) சட்டசபை சென்ற போது புரிந்தது.

(“கலைஞரே சென்று வாருங்கள்” தொடர்ந்து வாசிக்க…)