கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு

1983க்கும் 1987க்கும் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் அவரை அடிக்கடி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். அப்போது வாய் நிறைய அவர் பேராசிரியர் என்று அழைக்கும் பெருமையும் பெற்றேன். தமிழகம் என்னும் ஏழு கோடி மக்களைக் கொண்ட மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த அவர் இலங்கையில் இருபத்தைந்து லட்சம் மக்களைக் கொண்ட வடக்கு கிழக்கு முதலமைச்சரான என்னை சரியாசனம் தந்து கௌரவித்த வரலாற்றைப் பெற்றேன்.

(“கலைஞரை, தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு” தொடர்ந்து வாசிக்க…)

கலைஞர் கருணாநிதி காலமானார்

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95. மாலை 6.10 மணிக்கு கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளது. சூத்திரம் இணைத்தளத்தின் சார்பில் அவருக்கு எமது அஞ்சலி

OPERATION சுமந்திரன்!

(ப. தெய்வீகன்)
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு கௌரவப்போரட்டாத்தில் போயும் போயும் அந்த நாயிடம் தோற்றுப்போவதா என்ற உள்மன எரிச்சல் எப்போதும் திரும்ப திரும்ப அந்த வீதி வழியாகத்தான் எங்களை வீரத்துடன் போகவைக்கும். அந்த நாயும் தவறாமல் எங்களை பார்த்து குலைக்கும். பிறகு கலைக்கும். அதற்கு ஊச்சு காட்டிக்கொண்டே இரண்டு கால்களையும் ஹாண்டிலுக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டே எங்களுடன் வரும் சிலர் தப்பித்துவிடுவர். நானும் இன்னும் சிலரும் செருப்பை கழற்றிவிட்டு, கலைத்துக்கொண்டு வரும் “தோழருக்கு” இரண்டு அடிகொடுத்துவிட்டுப்போவதுதான் வழக்கம். அடியை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த நாய், முதல்நாள் அடிக்காதவர்களையும் அடுத்தநாள் கலைக்கும். இவ்வளவும் ஏன், அடிகொடுத்தது நாங்கள்தான் என்பதை மறந்துகொண்டு அந்த வழியால் போகும் வேறுபலரையும் கலைத்துக்கொண்டோடும். மொத்தத்தில் அந்த நாயின் வேலை அந்த வீதியில் படுத்துக்கிடந்து இரவு பகல் பாராது போய் வருவோரை கலைப்பதும் குரைப்பதும்தான்.

(“OPERATION சுமந்திரன்!” தொடர்ந்து வாசிக்க…)

கறி மணக்கும்… (Part2)

(SLM ஹனிபா)

இந்த நினைவுகளின் தொடரில் ஒரு போதும் கற்பனைகளை அவிழ்த்து விடுவதில்லை என இதை எழுதுபவர் உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறார். இங்கே இன்றிலிருந்து விதானைப் பொண்டிலை சீமாட்டி என்று அழைக்கப்போகிறேன்.

(“கறி மணக்கும்… (Part2)” தொடர்ந்து வாசிக்க…)

உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?

அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!

உடனே மனது ஏற்காது. ஆனால் உன்மை.

நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.

(“உங்களுக்கு 40 முதல் 50 வயதாகிவிட்டதா?” தொடர்ந்து வாசிக்க…)

கறி மணக்கும்…..(Part1)

(SLM ஹனிபா)

1970ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் 7வது பொதுத் தேர்தல். அக்கரைப்பற்றிலிருந்து வெலிக்கந்தைக்கு மாற்றம் பெற்று வந்த ஓரிரு மாதங்களில் நிகழ்ந்தது. இந்த நாட்களில் தான் பொலன்னறுவை மாவட்டத்தில் TA ஆக கடமையாற்றிய உமா மகேஷ்வரன் அவர்களையும் மூன்று வருடங்களுக்கு முதல் காலமான திரு. அம்பிகை பாகன் (கூபா முதலாளி) அவர்களையும் சந்திக்கிறேன்.

(“கறி மணக்கும்…..(Part1)” தொடர்ந்து வாசிக்க…)

ஒரு உண்மையான அக்கறை

கருணாநிதி சுகவீனமுற்ற நிலையில் அவரை துரோகியாக்கி அரசியல் ஆதாயம் தேட சிலர் முனைந்தனர்.சிலர் அறிவீனம் காரணமாக அவரை துரோகி என்று எழுதினார்கள்.இதனைத் தொடர்ந்து நண்பர் ராஜ் செல்வபதி வடக்கு கிழக்கு மாகாண சபையின் இறுதிக்காலம் தொடர்பான ஒரு பதிவினை எழுதிவருகிறார்.இது தொடர்பாக நண்பர் யோகா வளவனும் ஏற்கனவே சில தகவல்களை பதிவு செய்திருந்தார்.

(“ஒரு உண்மையான அக்கறை” தொடர்ந்து வாசிக்க…)

வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர சிந்தனை மாற்றத்தை எற்படுத்தி ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்

(சாகரன்)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வரும் வன்முறைகளை கட்டுப்படுத்தி இல்லாமல் செய்ய இளைஞ்கள் மத்தியில் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு பண்பாடு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு சகலவும் உழைக்க வேண்டும் குரல் கொடுக்க வேண்டும் பல்கலைக் கழகம் பாடசாலை கிராமத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் விளையாட்டுக் கழகங்கள் கோவில் பரிபாலன சபைகள் என்று எல்லாஇடங்களிலும் சிந்தனையில் மாற்றத்தை உருவாக்க செயற்பட வேண்டும்.

(“வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வர சிந்தனை மாற்றத்தை எற்படுத்தி ஒரு பண்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

போராட்ட அமைப்புக்களில் தனித்துவமான அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஓர் நோக்கு!

அன்பார்ந்த போராளிகளே, ஆயுதரீதியாக போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்களே அனைவருக்கும் வணக்கம்! 1983ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் எழுச்சியுற்ற போராட்ட அமைப்புக்களின் வளர்ச்சியின் பின்னாலும், துரதிஷ்டவசமாக 1986ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் போராட்ட அமைப்புக்களுக்கிடையே, ஏற்பட்ட முரண்பாடுகளில் சிதைந்துபோன போராளிகளின் ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு எவ்வகையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்று வினவினால், இல்லை என்ற பதிலே விடையாகக் கிடைக்கிறது. கண்துடைப்புக்காக, இன்னுமொருவரின் வற்புறுத்தலுக்காக இதயசுத்தியற்ற, தொலைநோக்குப் பார்வையற்ற ஓர் ஒற்றுமையே மேலெழுந்தவாரியாகக் காணப்பட்டது. (“போராட்ட அமைப்புக்களில் தனித்துவமான அரசியலில் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது ஓர் நோக்கு!” தொடர்ந்து வாசிக்க…)

யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பொலிஸ்

அன்று பொதுவாக வன்முறைகள் அற்ற பிரதேசம் என அழைக்கப்பட்ட யாழ் மாவட்டம் உண்மையிலேயே வன்முறைகள் மலிந்த பூமியாகவே இருந்தது.இந்த வன்முறைகளின் பின்னணியில் யாழ்ப்பாண மேல்தட்டு வர்க்கம் துணையாகவும் காவல் துறை பக்க பலமாகவும் இருந்தது.இவை செய்துகள்களின் வெளிவருவது இல்லை.

(“யாழ்ப்பாணத்திற்கு மேலதிக பொலிஸ்” தொடர்ந்து வாசிக்க…)