புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)

சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி, மாலதி படையணி போன்றவையும் முன்னரே பெருமளவுக்குச் சிதைந்துவிட்டன. இந்த நிலையிலும் அவர்கள் வெளியுலகுக்குத் தவறான தகவல்களையே சொல்லிக்கொண்டிருந்தனர். பதிலாக சிறிலங்கா அரசு இன்னும் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. இப்போது இறுதிக்கட்ட நடவடிக்கைக்குப் படைத்தரப்பு தன்னைத் தயார்படுத்தியது. அதுதான் புதுமாத்தளன் மற்றும் அம்பலவன் பொக்களையில் படைத்தரப்பு நுழைந்து ஒருலட்சத்திற்கும் அதிகமான சனங்களை மீட்ட நடவடிக்கை. உண்மையில் புலிகளின் பிடியிலிருக்கும்போது தம்மை முழுதாகப் பணயக் கைதிகளாகவே அந்த மக்கள் எண்ணியிருந்தனர். அந்த நிலையிலேயே அவர்களைப் புலிகள் நடத்தினார்கள். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பணயக்கைதிகள். (இப்போது அத்தனை பேரும் தடுப்புமுகாம்களில் தடைக்கைதிகளாக அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளனர்.) இந்தப் பணயக் கைதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஆயிரத்துக்கும் அதிகமான சனங்கள் கொல்லப்பட்டனர்.

(“புலிகள் எப்படி ஏன் தோற்கடிக்கப்பட்டார்கள் (Part11)” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 14)

(Thiruchchelvam Kathiravelippillai)
திருக்கோணமலை மாவட்டத்தின் வடபுறத்தே தென்னவன்மரபுஅடி ஊர் உள்ளது. திருக்கோணமலை மாவட்டத்தினை முல்லைத்தீவு மாவட்டத்துடன் இணைத்து வடக்கு கிழக்கு இணைப்பினை மேற்கொள்கின்ற ஊர் தென்னவன்மரபுஅடி ஆகும். 1824 ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் கணக்கெடுப்பில் தமிழ் ஊர் எனப் பதியப்பட்ட ஊராகும்.முழுமையாக தமிழ் மக்கள் வசித்த ஊர்.
1984 ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் நாள் அதிகாலை வேளையில் நாய்கள் குரைக்கும் சத்தம் ஊரைச்சுற்றிவரக் கேட்டுக்கொண்டிருந்தது.
1984 ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் இரவு புல்மோட்டை நகரத்தில் இருக்கின்ற கடைகள் சிலவற்றில் நுகர்ச்சிப்பொருட்களை விடுதலைப்புலிகள் கொள்வனவு செய்து சென்றிருந்தார்கள். இக்கொள்வனவிற்கு தென்னவன் மரபுஅடியில் வசித்த சில தமிழ் இளைஞர்களும் புல்மோட்டையில் வசித்த சில முஸ்லிம் இளைஞர்களும் உதவினார்கள். பலத்த அச்சம் நிலவிய நாள் அது.
1984 டிசம்பர் ஓராம் நாள் கொக்கிளாய் ஊர் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டு 11 சிங்கள ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.(அதில் சில பொது மக்களும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது)
1984 நம்பர் 11 ஆம் நாள் டொலர்பாம் என்ற சிங்களக் குடியேற்ற ஊரிலிருந்து 33 சிங்களப் பொதுமக்கள் மற்றும் ஊர்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 14)” தொடர்ந்து வாசிக்க…)

அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP

இலங்கையில் செய்யப்பட்ட முதல் தரப் போராட்டம்

இன்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டம் வெகு காலத்திற்குப் பிறகு இலங்கையின் தலை நகரில் நடந்த தூய எழுச்சியாகும்.

அரசியல் கட்சிகளின் பின்புலமில்லை, ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சார முறைமையில்லை, வாகனங்களில் மக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை, மது வழங்கி சனக்கூட்டம் திரட்டப்படவில்லை, உணவுப் பொதிகள் கைகளிலும்- “சந்தோசம்” சட்டைப் பைகளிலும் திணிக்கப்படவில்லை, கவர்ச்சிகரமான தலைவர்களில்லை, மேடையில்லை, அலறும் ஓலிபெருக்கியில்லை, ஆட்டமில்லை, பாட்டு இல்லை, நட்சத்திரப் பட்டாளத்தின் மேக்கப் முகங்களில்லை. கருப்புச் சட்டை எனும் முற்போக்கு அடையாளமும் , கனத்த மனங்களும் தைரியமான நெஞ்சுகளும் மட்டுமே இருந்தன. (“அனைவரும் ஆதரவுக் குரல் எழுப்ப வேண்டும். கற்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் இங்கு நிறைய உண்டு -VRP” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமரை பதவி விலக்க முடியுமா?

சட்ட ஆய்வாளரான சட்டத்தரணி கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது, 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய பிரதமர் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவரை அந்த பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தெளிவாக சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒன்று பதவி விலகுவதன் மூலம் , அல்லது எழுத்து மூலம் அறிவித்தல் இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணையில் தோல்வியடைவதன் மூலம் அவரை பதவியிலிருந்து நீக்கலாம். ஆனபோதும் பதவியில் இருக்கும் பிரதமர் ஒருவர் பதவி விலக முடியாது என கூறுவராக இருந்தால் அவரை அந்த பதவியிலிருந்து எப்படி நீக்குவது என அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்படவில்லை.

(“பிரதமரை பதவி விலக்க முடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

MR sworn in as PM, vows to overcome challenges

UNP MP defects

Former President Mahinda Rajapaksa was yesterday sworn in as Prime Minister by President Maithripala Sirisena. Newly elected Prime Minister Rajapaksa told The Island last night that the new government was faced with daunting challenges but it would overcome them all. Rajapaksa said that action would be taken to hold long overdue Provincial Council polls and national polls in due course. Presidential polls are is scheduled for 2019 and parliamentary polls for 2020. Rajapaksa assured that the new government would address public grievances. (“MR sworn in as PM, vows to overcome challenges” தொடர்ந்து வாசிக்க…)

பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த

இலங்கையின் அடுத்த பிரதமராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, சற்று முன்னர் பதவியேற்றார். அவருக்கான பதவியேற்பை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மேற்கொண்டார். இலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான முடிவை, ஜனாதிபதி சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எடுத்து, அது தொடர்பான அறிவிப்பை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு வழங்கியுள்ளது என்ற தகவலை, அமைச்சர் மஹிந்த அமரவீர வெளிப்படுத்திய பின்னர், இப்பதவியேற்புத் தொடர்பான தகவலும் வெளியானது. எனினும், இப்பதவியேற்பு, சட்டத்துக்கும் அரசமைப்புக்கும் உட்பட்டதா என்பது தொடர்பில், தொடர்ந்தும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

(“பிரதமராகப் பதவியேற்றார் மஹிந்த” தொடர்ந்து வாசிக்க…)

இரண்டு மகன்களை பெற்றும் பற்றற்ற நிலை…..

இரண்டு மகன்களை பெற்றும் பற்றற்ற நிலை. இதில் காதல் திருமணம் வேறு. இந்த அம்மாக்கு ஆன்மீகமாவது மன சாந்தி கொடுக்கட்டும். கவிஞர் வைரமுத்து காதல் திருமணம் செய்து கொண்டவர். . இப்போது இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். வைரமுத்து நாத்திகவாதி, பொன்மணி ஆத்திகவாதி. அண்மையில் ஆண்டாள் பற்றி பேசியது தவறு என்று பலர் கூறியபோது, பொன்மணியும் அவ்வாறே அதை கவிதை மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த கவிதை இதோ:

(“இரண்டு மகன்களை பெற்றும் பற்றற்ற நிலை…..” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ்த் தேசியம் கிழிந்தது

கனடாவில் நடைபெற் சிறிய வட்டாரத் தேர்தலில் ஐந்து தமிழர்கள் போட்டியிட்டு தோல்வி கண்டனர்.
உஸ்மான் காலித் 3308 வாக்குகள். 24.14% இவரே வென்றவர்.ஏனைய தமிழ் வாக்காளர் விபரம்.

லோகன் கணபதி கீர்திகா 2635 19.23%
செல்லையா கிள்ளி1961. 14.31%
வரதராச மலர் 1587. 11.58%
செல்லா சோதி 481. 3.51%
சிறீநாதன் இலகுப்பிள்ளை 236 1.72%

(“தமிழ்த் தேசியம் கிழிந்தது” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

‘தமிழ் மக்கள் விடயத்தில் இடதுசாரிகள் தவறிழைத்து விட்டார்கள்’ என பொத்தம் பொதுவாகப் பேசியும் எழுதியும் வரும் தமிழர்களைக் கவனத்திற்கொண்டு, ஒரு வரலாற்று ஆவணத்தின் மீள்வெளியீடு:

தேசிய ஒடுக்குமுறைக்கும்
பிரிவினைக்கும் எதிராக
தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!

(“தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்!” தொடர்ந்து வாசிக்க…)