எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)

இலங்கை விமான நிலையத்தில் இறங்கி யாழ் நோக்கிய பிறந்த மண்ணுக்கான பயணத்தில் வவுனியா வரைக்கும் கிலோ மீற்றர் ஒன்றிற்கு நாலு ஐந்து என்று வீதி ஓரக் கடைகளை காணமுடியும் இது இளநீரில் ஆரம்பித்து ரம்புட்டான் மங்குஸ்தான் , கொய்யா பழ வகைகள் என்று விரிந்து மண்சட்டியில் சூட்டடுப்பில் சமைத்த சுவையான சாப்பாடு என்று விரிந்திருக்கும். எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை தரித்து தேவையானவற்றை வாங்கி சாப்பிடலாம். சுவையாக மட்டும் அல்ல சுத்தமாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தன. எங்கும் அப்பம் கட்டுச்சம்பல் இஞ்சி பிளேன் ரீ. ஆனால் இன்னமும் ரொய்லெர் மாத்திரம் தேவையான தரத்திற்கு வளர்ச்சியடையவில்லை என்பது ஒரு மிகப் பெரிய குறையே. வவுனியா தாண்டியதும் இந்த வீதியோரக் கடைகளை காணமுடியாது?. சிங்கள மக்களின் இந்த சிறிய தொழில் முயற்சிகள் தமிழ் பகுதிகளில் இல்லை. நான் குறிப்பிடுவது நிரந்தரக் கடைகளை அல்ல. இளநீர் கடைகள் போன்றவற்றை. இயக்கச்சி தாண்ட மிகக் குறைவாகவேனும் ஒன்று இரண்டு என்று தமது வீடுகளில் உற்பத்தியாகும் பழம் இளநீரை. நுங்கு என்பன காணக்கிடைத்தன.

(“எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த… (Part 8)” தொடர்ந்து வாசிக்க…)

விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு

(புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம், இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவுக்கு வருகின்றது. அது, கடந்த ஐந்து ஆண்டுகளாக “வடக்கின் முதலமைச்சர்” என்கிற அடையாளத்தோடும் அங்கிகாரத்தோடும் வலம்வரும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தன்னுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், தெரிவுகள் தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“விக்னேஸ்வரனுக்கான காத்திருப்பு” தொடர்ந்து வாசிக்க…)

வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’

(Gopikrishna Kanagalingam)

உலகின் முக்கிய விருதுகளில் ஒன்றாக முன்னர் கருதப்பட்டு, இப்போது பெரிதளவுக்குக் கவனத்தை ஈர்க்காத விருதுகளில் ஒன்றாக மாறியிருக்கும், அமைதிக்கான நொபெல் பரிசு, முக்கியமான தெரிவொன்றை, இவ்வாண்டு மேற்கொண்டிருந்தது. போரிலும் ஆயுத முரண்பாடுகளிலும், பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டமைக்காக, டெனிஸ் முக்வெகி, நாடியா முராட் ஆகிய இருவருக்கும், சமாதானத்துக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

(“வைரமுத்துவும் சிக்கியிருக்கின்ற ‘#நானும்’” தொடர்ந்து வாசிக்க…)

Rupee crisis mainly due to internal problems – DEW

General Secretary of the Communist Party Dew Gunasekara at a Seminar on ‘the Economic Crisis in Sri Lanka’ held at the Sujeewa Hall in Matara last weekend flayed the government for trying to shirk the responsibility for the current economic crisis.

(“Rupee crisis mainly due to internal problems – DEW” தொடர்ந்து வாசிக்க…)

இன்று சேவின் இறந்த நாள்.

1967 அக்டோபர் 8…. தென் அமெரிக்கச் சரித்திரத்தில் ஓர் இருண்ட தினம்.

சேவின் இறுதி நாள் இப்படியாக இருந்தது, காலை 10.30… யூரோ கணவாயை ஆறு கெரில்லா வீரர்களுடன் ‘சே’ கடந்து செல்கிறார். வழியில் தென்பட்ட ஆடு மேய்க்கும் பெண்ணின் மேல் பரிதாபப்பட்டு ஐம்பது பெஸோக்களைப் பரிசாகத் தருகிறார். (“இன்று சேவின் இறந்த நாள்.” தொடர்ந்து வாசிக்க…)

உண்ணாவிரதமிருந்த கைதிகளில் ஐவர் வைத்தியசாலையில்

தங்களுக்கு எதிராக, நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு தெரிவித்து, அநுராதபுரம் மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும், அரசியல் கைதிகள் 55 பேரில், ஐவர் சுகயீனமுற்றநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. சுகயீனமுற்ற கைதிகள், சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதன் பின்னர், மீண்டும் சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.

நடைபவனிக்கு ஆதரவு…

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்து வருகின்ற நடைபவனிக்கு அதரவு தெரிவித்து, கைதடி சித்த மருத்துவ மாணவர்களும், இன்று (09) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.