யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு

யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாகப் பாதிப்புக்களையும், இழப்புக்களையும் சந்தித்த மக்களுக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு புனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். மீள்குடியேற்ற, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்துசமய அலுவல்கள் அமைச்சின் கீழியங்கும் புனர்வாழ்வு அதிகாரசபைக்கே அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். (“யாழ்., முல்லைத்தீவு, கிளிநொச்சியில் 690 பேருக்கு இழப்பீட்டு கொடுப்பனவு” தொடர்ந்து வாசிக்க…)

7 உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணத்தில், சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய ஏழு உணவகங்களுக்கு, 8 இலட்சத்து 26 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள அதேவேளை, அவ்வுணவகங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. (“7 உணவகங்களுக்கு சீல்” தொடர்ந்து வாசிக்க…)

பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன

பாகிஸ்தானில், மதநிந்தனைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்து வந்த கிறிஸ்தவப் பெண்ணை விடுதலை செய்வதற்கு, அந்நாட்டு உச்சநீதிமன்றம் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக நேற்றும் (01), போராட்டங்கள் தொடர்ந்தன. கடும்போக்கு இஸ்லாமியவாதிகள், வீதிகளை மறித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். (“பாகிஸ்தானில் கடும்போக்கு இஸ்லாமியவாதிகளின் போராட்டங்கள் தொடர்கின்றன” தொடர்ந்து வாசிக்க…)

வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!

தற்போதைய அரசியல் சூறாவளியை தனது மெகா துரோகத்தின் மூலம் தொடக்கிவைத்த மைத்திரியின் வழியில் கொஞ்சம் கொஞ்சமாக கட்சி மட்ட துரோகங்களும் அரங்கேற ஆரம்பித்திருக்கின்றன. இப்படியான சூழ்நிலைகளில் வழக்கமாக முஸ்லிம் தரப்பிலிருந்துதான் கட்சித்தாவல்கள் இடம்பெறும். “தொப்பி பிரட்டி விட்டார்கள்”, “விலைபோய்விட்டார்கள்” என்று ஆங்காங்கே வசைபாடல்கள் ஆர்ப்பரிக்க ஆரம்பிக்கும். ஆனால், தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நூல் கட்டிவிட்டதுபோல “முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ரணிலின் பக்கம்தான்” என்று ஒரேபிடியாக இருந்துகொண்டிருக்க, தமிழ்த்தரப்பிலிருந்து ‘முதலாவது வீரர்’ தனது சாகசத்தை காண்பித்திருக்கிறார். (“வெள்ளியன்று பதவியேற்ற வியாழனால் கூட்டமைப்புக்கு பிடித்திருக்கும் சனி!” தொடர்ந்து வாசிக்க…)

“தற்போதைய சூழலில் நாங்கள் இந்தியாவைக் கேட்டே முடிவுகளை எடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் மாவை” என்றழைக்கப்படும் சேனாதிராஜா.

ஒரு மூத்த அரசியல்வாதி, தமிழரசுக் கட்சியின் தலைவர், நீண்டகாலமாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் இவ்வாறு சொல்வதென்றால் அதை விடக் கேவலம் வேறில்லை. இந்திய மத்திய அரசின் அதிகார வரம்புக்குட்பட்ட தமிழ்நாட்டில் கூட இப்படிச் சொல்ல மாட்டார்கள். ஏன் அங்கே எந்த மாநில அரசுகள் கூட இவ்வாறு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அங்கே மக்களும் எதிர்த்தரப்புகளும் ஊடகத்தினரும் கேள்வி மேல் கேள்வி எழுப்பித் தொலைத்து விடுவார்கள்.

(““தற்போதைய சூழலில் நாங்கள் இந்தியாவைக் கேட்டே முடிவுகளை எடுப்போம்” என்று சொல்லியிருக்கிறார் மாவை” என்றழைக்கப்படும் சேனாதிராஜா.” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு

அரசமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. “நடுநிலை”வகிப்பதென்பது, அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயக விரோத செயல் எனவும், த.தே.கூ தெரிவித்துள்ளது.

(“மஹிந்த தலைமையிலான அரசாங்கத்துக்கு த.தே.கூ எதிர்ப்பு” தொடர்ந்து வாசிக்க…)

தெளிவாகத் தெரியும் வடக்கு கிழக்கின் தலைமைத்துவ வெற்றிடம்

(கருணாகரன்)
தமிழர்களுடைய ஒட்டுமொத்தக் கவனமும் இன்று கொழும்பு அரசியலிலேயே குவிந்திருக்கிறது. இதுவரையிலும் படுதீவிரமாக இருந்த வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணம், தமிழீழம், சமஸ்டி, சுயாட்சி போன்றவற்றைப் பற்றிய கதையாடல்களையே காணவில்லை. விக்கினேஸ்வரன், அனந்தி, இவர்கள் பரபரப்பாக ஆரம்பித்த புதிய கட்சிகள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை, சுரேஸ் பிரேமச்சந்திரனின் நிலைப்பாடுகள் பற்றியெல்லாம் கதைப்பாரே இல்லை. இந்தத் தரப்புகளின் அரசியல் பற்றிய பேச்சுகளும் ஒடுங்கி விட்டன.

(“தெளிவாகத் தெரியும் வடக்கு கிழக்கின் தலைமைத்துவ வெற்றிடம்” தொடர்ந்து வாசிக்க…)

இரணைமடு

இலங்கைத்தீவில் 7வது பெரிய நீர்த்தேக்கமாக இரணைமடு உள்ளது. இரணைமடு என்ற பெயர் அது இயற்கையாக கனகராயன் ஆறு பண்டைக்காலத்தில் இரு குளங்களாக இருந்ததன் அடிப்படையில் வந்தது. மடு என்பது நீர்த்தேக்கம். சிறந்த ஒரு வண்டல் வெளியான இரணைமடு படுகை தொல்லியல் மையமாகவும் உள்ளது. 3000 ஆண்டுகள் தொன்மையான தொல்பொருட்களும் இரணைமடு படுகையில் உள்ளன. (“இரணைமடு” தொடர்ந்து வாசிக்க…)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான் விரும்பியவாறு சில வேளைகளில் ஜனாதிபதி அதிகாரங்களைக் கூட உபயோகப்படுத்திக் கொள்வதற்கு அவருக்கு நான் அதிகாரத்தைக் கொடுத்திருந்தேன். இதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன? கடந்த மூன்று வருட காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சம்பவங்கள் காரணமாக மிக மோசமான அவல நிலையே ஏற்பட்டிருக்கின்றது. எனது உரை இன்னும் நீடிக்கும் என்பதால் காலத்தை நான் வீண்விரயம் செய்ய விரும்பவில்லை. ஆயினும் எதிர்வரும் காலங்களில் அவ்வப்போது அந்த விடயங்களைப்பற்றி நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என நான் எண்ணியிருக்கின்றேன். இந்த சம்பவங்களின் பின்னணியில் இரண்டு நாட்களுக்கு முன் நான் எடுத்த தீர்மானம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவதற்கும் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை பிரதமர் பதவியில் இருந்து நீக்குவதற்குமான முடிவை நான் எடுப்பதற்கு மிக முக்கியமான காரணத்தை மிகுந்த மதிப்புடன் நான் உங்களுக்கு விளக்கிக் கூற விரும்புகின்றேன்.

(“நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)” தொடர்ந்து வாசிக்க…)

வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!

(எஸ். ஹமீத்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினரான வீ.சி. இஸ்மாயில் பிரதியமைச்சர் பதவி தனக்குத் தருவதாக இருந்தால் மகிந்த-மைத்திரி தரப்புக்கு ஆதரவு வழங்கத் தான் தயார் என்று கூறி, மகிந்த தரப்பினரைத் தொடர்பு கொண்டுள்ளார். இந்தத் தொடர்பை ஏற்படுத்துவதில் பெரும்பான்மையின அமைச்சர் ஒருவரும் மற்றுமொரு முஸ்லிம் இராஜாங்க அமைச்சரும் செயற்பட்டுள்ளனர்.

(“வலிய வந்த எம்.பீயை விரட்டியடித்த மகிந்த!” தொடர்ந்து வாசிக்க…)