பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு

(ஜனகன் முத்துக்குமார்)

ஜேர்மனியின் சான்செலர் இன்னமுமே ஐரோப்பாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூத்த அதிகாரியின் பங்கை வகிக்க முயலுகின்றமை, தற்போது ​​அங்கெலா மேர்க்கல் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலகுதல்) மீது பிரித்தானிய அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மூலம் தெளிவாகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் மார்ச் 29 அன்று வெளியேறும் குறித்த நான்கு மாத காலத்துக்குள் மற்றும் மேர்க்கல் தனது சான்செலர் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு நாள் குறித்த பின்னருமான இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சிய பிரதமர் தெரேசா மேயுடனான பேச்சுவார்த்தையில் ஒரு தீர்வை எட்டும் நோக்கிலேயே சான்செலர் மேர்க்கல் முயன்று வருகின்றமை – தன்னை – தனது சான்செலர் பதவியின் காலப்பகுதிக்கு பின்னரான காலத்திலும் ஐரோப்பிய அரசியலில் நிலைநிறுத்துவதற்கான ஒரு செயற்பாடாகவே மேர்க்கல் செயற்படுவதாக பார்க்கப்படுகின்றது. (“பிரெக்சிற் தீர்வில் மேர்க்கலின் வகிபங்கு” தொடர்ந்து வாசிக்க…)

காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் முடிவு? – பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்

காங்கிரஸ் கூட்டணியில் இணைய மக்கள் நீதி மய்யம் பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் கூட்டணி இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக வுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. (“காங்கிரஸ் கூட்டணியில் இணைய கமல் முடிவு? – பேச்சுவார்த்தை தொடங்கியதாக தகவல்” தொடர்ந்து வாசிக்க…)

அமெரிக்காவில் மீண்டும் ‘ஷட் டவுன்’ : அதிபர் ட்ரம்ப் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு

அமெரிக்க அரசின் செலவின மசோதாவுக்கும், அதிபர் ட்ரம்பின் கோரிக்கைக்கும் எதிர்ப்புத் தெரிவித்து எந்தவிதமான நிதிமசோதாவையும் நிறைவேற்றாமல் செனட் அவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் அமெரிக்காவில் ‘ஷட்டவுன்’ தொடங்குகிறது. (“அமெரிக்காவில் மீண்டும் ‘ஷட் டவுன்’ : அதிபர் ட்ரம்ப் கோரிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு: 8 லட்சம் ஊழியர்கள் பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா,ஜாவீ தீவுப்பகுதியில் உள்ள சுந்தா ஜலசந்தியில் ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். (“இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதல்: எரிமலை வெடித்து சிதறியதால் நடந்த கோரம்; பலி எண்ணிக்கை 222 ஆக உயர்வு” தொடர்ந்து வாசிக்க…)

9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்

9 மாகாணங்களுக்கும், எந்தவொர காலதாமதமும் இன்றி, ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும் என, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அவர், நேற்று (21) தனது கடமைகளை, உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்ற பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்தார். (“9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்” தொடர்ந்து வாசிக்க…)

‘வடக்குக்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது; கிழக்குக்கு இல்லை’

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளெனத் தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், வடக்கு மாகாணத்துக்கு என்று ஒரு தனியான அமைச்சு உள்ள போதும், கிழக்கு மாகாணத்துக்கு அவ்வாறானதோர் அமைச்சு இல்லையெனக் குற்றஞ்சாட்டினார். (“‘வடக்குக்கு அபிவிருத்தி அமைச்சு உள்ளது; கிழக்குக்கு இல்லை’” தொடர்ந்து வாசிக்க…)

கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்

கிளிநொச்சியில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் மூழ்கிய பல கிராமங்களில், இராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று (21) இரவு பெய்த மழையால், மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, பல கிராமங்களுக்கான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. (“கிளிநொச்சியில் வௌ்ளம்: மீட்புப் பணிகள் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

ரணிலும் அரசமைப்பை மீறிவிட்டார் : அனுர

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு கோரிநின்றார். (“ரணிலும் அரசமைப்பை மீறிவிட்டார் : அனுர” தொடர்ந்து வாசிக்க…)

மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை

(கே. சஞ்சயன்)

அங்குமிங்குமாகச் சுற்றிய பிரச்சினை இப்போது, மீண்டும் மஹிந்த ராஜபக்‌ஷவிலேயே வந்து நிற்கிறது. ஒக்டோபர் 26ஆம் திகதிக்கும், டிசெம்பர் 15ஆம் திகதிக்கும் இடையில் அவர், பிரதமரா, இல்லையா என்ற கேள்வி இருந்தது. இப்போது அவர், எதிர்க்கட்சித் தலைவரா, இல்லையா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இத்தோடு மட்டும் நின்று விட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தான். (“மஹிந்தவுக்கு வந்துள்ள சோதனை” தொடர்ந்து வாசிக்க…)

கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மய்யவாத அரசியல் அரங்கு அண்மைய நாள்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. (“கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்” தொடர்ந்து வாசிக்க…)