வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

மிகவும் சவாலான பணிகளில் ஒன்று உண்மைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுப்பது. அதை வாழ்நாள் முழுவதும் செய்பவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள். குறிப்பாக, உலகில் மிகப் பெரும் சக்திகளுக்கு எதிராகப் பல்வேறு இடர்களையும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி, தொடர்ச்சியாகச் செயற்படுவதென்பது மிகக்கடினமான பணி. அதேநேரம், அவ்வாறானவர்கள் தான், வரலாறு தவறுதலாக எழுதப்படாமல் இருக்கப் பங்களிக்கிறார்கள். எமக்குச் சொல்லப்படும் வரலாறுகளின் பொய்களைத் தோலுரிக்கிறார்கள். வரலாறு என்றும், அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. (“வில்லியம் பிளம்: உண்மைகளின் குரல்” தொடர்ந்து வாசிக்க…)

பசுமைச் சுவடுகள்

எமது முதலாவது பொதுவெளி கலந்துரையாடலானது நேற்று (06/01/2019) காலை 10.00 மணியளவில் பருத்தித்துறை ஞானாலயத்தில் ஆரம்பமாகியிருந்தது. இக் கலந்துரையாடலானது சூழலியல் சார்ந்த மற்றும் இயற்கை வேளாண்மை, மியோவாக்கி காடுகளின் தேவைப்பாடுகள் பற்றி கலந்துரையாடுவதாக தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த விடயம்சார் அனுபவமுள்ளவர்களையும், அமைப்பினரையும், நலன்விரும்பிகளையும் உள்ளடக்கி தொடர்ந்திருந்தது. (“பசுமைச் சுவடுகள்” தொடர்ந்து வாசிக்க…)

பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

“அடுத்த வருடம் தைப் பொங்கலுக்கு முன்னர், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதற்கு முன்னர் ஓரிரு முறை கூறியிருந்தது. ஆனால், அதையடுத்துப் பல தைப்பொங்கல்கள் வந்து போய்விட்டன. அதேபோல், எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதிக்கு முன்னர், உத்தேச புதிய அரசமைப்பு, கொண்டு வரப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். (“பெப்ரவரி நான்குக்கு முன் புதிய அரசமைப்பு: முடியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தஷ்ரத் மஞ்சி.

2007இல் கேன்சரால்
செத்துப்போன இந்த மனிதன்
தஷ்ரத் மஞ்சி.

ஒரு பிஹார்க்காரக் கூலித் தொழிலாளி.

1960இல் காயமடைந்த தன் மனைவியின் உயிரைக் காப்பாற்ற
– கிராமத்தின் எல்லையிலிருக்கும் அந்த – கெலூர் மலைக்குன்றுகளைச்
சுற்றிக் கடந்து 70 கிலோமீட்டர் தூரம் ஆஸ்பத்திரிக்குப் பயணித்த துயரம் தஷ்ரத்தின் நெஞ்சை உலுக்கியது.

(“தஷ்ரத் மஞ்சி.” தொடர்ந்து வாசிக்க…)

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

(புருஜோத்தமன் தங்கமயில்)

“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத் தூதரக அதிகாரியொருவர் இந்தப் பத்தியாளரிடம் கடந்த வாரம் கேட்டார். (“கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்” தொடர்ந்து வாசிக்க…)

சம்பந்தன் – ராகவன் சந்திப்பு

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமனம் பெற்ற கலாநிதி சுரேன் ராகவன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று (08) சந்தித்துக் கலந்துரையாடினார். கலாநிதி சுரேன் ராகவன், வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் பெற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.

புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

வடக்கு மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். ஆளுநர் செயலகத்தில் காலை 10 மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

வடமாகாண ஆளுநர் தொடர்பில் விக்னேஸ்வரன் கருத்து

வடமாகாண ஆளுநராகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தனக்கு திருப்பதியளிப்பதாக அம்மாகாணத்தின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருவராலேயே தமிழர்களின் பிரச்சனையை புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அண்மையில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

‘திருகோணமலை பெருநகரத்திட்டம், தமிழர்களுக்கான சதித்திட்டம்’

சிங்கப்பூரின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பெருநகரத்திட்டம் (மெகாசிட்டி) திருகோணமலை நகரில், தமிழ் மக்கள் குடி அடர்த்தியை இல்லாதொழிக்கும் சதித் திட்டம் எனத்தெரிவித்துள்ள திருகோணமலை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சி. நந்தகுமார் (நந்தன் மாஸ்டர்), பெருநகரத்திட்டத்தை தடுப்பதற்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இணைந்து குரலெழுப்ப வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளார். (“‘திருகோணமலை பெருநகரத்திட்டம், தமிழர்களுக்கான சதித்திட்டம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘கிழக்கு மாகாணத்துக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்’

கிழக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு, இனி நிரந்தரத் தீர்வு கிடைக்கப்பெறுமென, கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்ததுடன், இதற்கான சகல விடயங்களையும், இன, மத, மொழி வேறுபாடின்றி முன்னெடுக்க, தன்னை அர்ப்பணித்துள்ளதாகத் தெரிவித்தார்.

(“‘கிழக்கு மாகாணத்துக்கு நிரந்தரத் தீர்வு கிட்டும்’” தொடர்ந்து வாசிக்க…)