எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் – அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர். இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

சே குவேராவின் மகள் இந்தியாவில்

உலக புரட்சியாளர்கள் பட்டியலிலும், கியூபா புரட்சியிலும் முக்கியமானவரான சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா இந்தியா வந்துள்ளார். கியூபா நாட்டிலிருந்து டெல்லி வந்தடைந்த அவர், நேற்று முன்தினம் கேரளா வந்தார். அத்துடன், நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பேசினார்.

இயற்கை விவசாயம் – அடுத்த கட்டத்துக்கு நல்ல சிந்தனையை விதைத்தது.

ரெண்டுபேரும் கணவன் மனைவி.

எட்டுப்பொருத்தம் என்பார்கள்.
இவர்கள்தாம்.

பெயர்கூட –
ஆனந்தன், ஆனந்தி.

மக்களது ஜனநாயக உரிமைகளின் மீதான பாசிசக் கொடுந்தாக்குதலை முறியடிக்க…

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி—மாலெ (லிபரேஷன்), தனது 50வது ஆண்டு நிறைவையும், கட்சியின் நிறுவனரான சாரு மஜூம்தார் பிறந்த நூற்றாண்டையும் அண்மையில் அனுஷ்டித்தது. இது தொடர்பாக, ஒரு பெரும் சிறப்பு மாநாட்டை நேதாஜி உள் விளையாட்டரங்கில் கடந்த ஜூலை 30 ஆம் நாள் நடத்தியது. மவ்லாலி யுவ கேந்திரத்தில் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரு நாட்கள், கட்சித் தொண்டர்களுக்கான பயிற்சி முகாமையும் நடத்தியது.

‘அமெரிக்க பிராஜாவுரிமை கோட்டா நீக்கிக்கொண்டார்’

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ தனது அமெரிக்க பிராஜாவுரிமையை நீக்கிக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியதுடன், அது தொடர்பான ஆவணங்கள் உரிய காலத்தில் வெளிப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

குடிநீருக்காக அலையும் மக்களை கவனிப்பார் யாருமில்லை!!!

நாட்டின் கிழக்கு மற்றும் ஏனைய பல பிரதேசங்களில் நிலவுகின்ற வரட்சி காரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வட்டவான் கிராம மக்கள் குடிநீர் இன்றி மிகவும் கஷ்ட நிலையில் வாழ்கின்றனர்.

நல்ல கட்டுரை. வெட்டி – சாறு கொடுத்திருக்கிறேன்.

ராகுலின் முடிவை ‘காலத்தின் கட்டாயம்’ என்று காங்கிரஸ்காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பதவியில் இல்லாவிட்டாலும் ராகுல்தான் இந்திய அளவில் காங்கிரஸின் முகம்.
அது மாறப்போவதில்லை.

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்

இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு செப்டெம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கொழும்பில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை கூறினார்.

‘பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.