நீதிமன்ற தீர்;ப்புக்கு மாறாக முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்குவின் சடலம் தகனம் செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் அ. வரதராஜப்பெருமாள்.

(காணொளியை காண….)

விவசாயத்தின் வீழ்ச்சியும் ஏற்றுமதி தேக்க நிலையும்

(அனுதினன் சுதந்திரநாதன்)

அண்மைய காலத்தில் இலங்கையின் விவசாயத்துறையில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியானது, இலங்கையின் பொருளாதார செயற்பாடுகளில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் ஏற்றுமதி வருமானம், சென்மதி நிலுவை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் நேர்மறைத் தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

சகல அரசு ஊழியர்களின் மாத சம்பளம் 3 ஆயிரம் ரூபாய் முதல் 24 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் ஏகமனதாக தெரிவு

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சிறிகொத்தவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. செயற்குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவின் பெயரை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பிரேரித்தார். அவரது யோசனையை செயற்குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

1990 முதல் 2009 வரை புலிகள் (மிருகங்களின்) ஆட்சியில்…… நடந்த வன்கொடுமைகள்!(பகுதி 5)

(அந்தோணி!)
மருத்துவ மனைக்குச் சென்றவர்கள் வழக்குகளைச் சந்தித்தனர். இரண்டு பகுதியினரும் சட்டத்தரனிகளை ஏற்பாடு செய்தனர். ஊரில் இரண்டு வசதியானவர்கள் சண்டையிட்டால், இரண்டு சட்டத்தரணிகள் பணக்காரர் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே! இவர்கள் மருத்துவரையும் பணக்காரர்களாக்கிக் கொண்டிருந்தனர்.

பெய்ஜிங்கில் புதிய விமானநிலையம் திறப்பு

உலகின் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய விமானநிலையமொன்றாக வரும் என எதிர்பார்க்கப்படும் மிகவும் நவீன வடிவமைப்புகளைக் கொண்ட புதிய விமானநிலையமொன்றை சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் இன்று (25) திறந்து வைத்துள்ளார். நட்சத்திர மீன் வடிவிலான இந்த பெய்ஜிங் டக்ஸிங் சர்வதேச விமானநிலையமானது 2040ஆம் ஆண்டில் எட்டு ஓடுபாதைகளுடனும், ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளை பெறுமளவுக்கு தனது முழுக் கொள்ளவுடன் 2040ஆம் ஆண்டில் இயங்கவுள்ளது.

நீராவியடியில் எரிந்த பேரினவாதத் தீ

(புருஜோத்தமன் தங்கமயில்)
கொடுக்கில் இனவாத, மதவாத விசத்தைக் கொண்டு அலையும் பொதுபல சேனாவின் ஞானசார தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவொன்று, திங்கட்கிழமை (23) நீதிமன்றத் தீர்ப்பின் மீது, ஏறி நின்று, நர்த்தனமாடி இருக்கின்றது. நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டிய பொலிஸாரோ, அதைப் புறந்தள்ளி, பிக்குகளின் ஆட்டத்துக்குப் பாதுகாப்பு வழங்கி இருக்கின்றனர்.

ஓடாத குதிரையின் பந்தயக் கனவு

(முகம்மது தம்பி மரைக்கார்)
அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உடன்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நாளை புதன்கிழமை அந்த அறிவிப்பு வரலாம் என்றும் கூறப்படுகிறது.

‘எமக்குத் தேவை புதிய ஜனாதிபதி அல்ல’

(காரை துர்க்கா)
யாழ்ப்பாணம் விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தலில், திருநெல்வேலியில் அமைந்துள்ள வளாகத்தில், விவசாயக் கண்காட்சி கடந்த வாரம் நடைபெற்றது. இயற்கையோடு இணைந்து, இயற்கையையும் குழப்பாது, நாமும் குழம்பாது விவசாயச் செய்கை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட்டது.

சீரற்ற வானிலையால் 11,387 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் காரணமாக 11387 குடும்பங்களை சேர்ந்த 45,091பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. கொழும்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.