பிரிட்டனில் டிசெம்பர் 12ஆம் திகதி பொதுத்தேர்தல்

பிரிட்டனில் டிசெம்பர் 12 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்க அது உதவும் என்று நம்பப்படுகிறது. தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று மூன்று முறை மேற்கொள்ளப்பட்ட முயற்சி முன்பு தோல்வியில் முடிந்தது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்~ அவர்களுக்கு ஆதரவளிக்கக் கோரி யாழ்ப்பாணம் றக்காவீதி இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் 28.10.2019 அன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்.

இராஜினாமா செய்தார் பிரதமர் ஹரிரி

லெபனானின் பிரதமர் பதவியிலிருந்து சாட் அல்-ஹரிரி, நேற்று இராஜினாமா செய்துள்ளார். ஆளும் உயர் மட்டம், நாட்டை ஆழமான பிரச்சினைக்குள் தள்ளுவதற்கெதிரான பாரிய ஆர்ப்பாட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியைத் தீர்ப்பதில் தான் முடிவில்லா நிலையை அடைந்துள்ளதாக சாட் அல்-ஹரிரி தெரிவித்துள்ளார்.

நாளை முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மிர்

இந்தியாவின் ஜம்மு காஷ்மிர் நாளை முதல் ஜம்மு காஷ்மிர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறவுள்ளது. துணை ஆளுநர்களாக பதவியேற்கவுள்ளனர்.

வெடித்ததை ஐயா ஒரு வெடிகுண்டு

சம்பந்தரின் உள்வட்டத்தில் இருந்து கசிந்த ஓர் உண்மை
அண்மையில் ஒருநாள் சம்பந்தரிடம் அவரின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபர், சொல்லப்போனால் அவரை மையம் என்றும் கூறலாம். அவர் சம்பந்தரிடம் “ஏன் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் 11 பேர் இருந்தும் ஏழு பேர் உள்ள முஸ்லீம்களுக்கு முதலமைச்சர் பதவியை கொடுத்தீர்கள்” என்று. அதற்கு அவர் நான் ஒன்றும் யோசனை இல்லாமல் இதைச் செய்யவில்லை, அதாவது ஒரு தமிழன் முதலமைச்சராக வந்தால் அவர் ஓர் பெரிய அரசியல்வாதி ஆகி கிழக்கு தமிழர்களுக்கான ஓர் அரசியல் தலைமைத்துவத்தை ஏற்படுத்தி ஒரு பிரமுகராக, அரசியல் தலைவராக, அவர் வந்துவிடுவார். நாம் பின்னர் இருந்த இடம் தெரியாத பகல் வேளை நட்சத்திரங்களாக மறைந்துவிடுவோம்.

`மழைக்காட்டில் துளிர்க்கும் ஈர நம்பிக்கை!’ – உற்சாகத்தில் காட்டுயிர் ஆய்வாளர்கள்


(ரா.சதீஸ்குமார், கே.அருண்)
சூழலுக்குப் பயனற்ற அந்நிய களைத்தாவரங்களின் பிடியில் சிக்கித்தவிக்கும் தொட்டபெட்டா காடுகளில் சோலை மரங்கள் மெல்ல வளரத்தொடங்கியுள்ளது, காட்டுயிர் ஆய்வாளர்களிடம் நம்பிக்கையைத் துளிர்க்கச்செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி

1960களில் உருவான மக்கள் விடுதலை முன்னணியின் புதிய சகாப்தத் தலைவர். ஆனால், ரோஹண விஜயவீரவின் அன்றைய இனவாத விடுதலை முன்னணியல்ல அதன் இன்றைய அவதாரம். வரலாறு அக்கட்சியினருக்குப் புகட்டிய பல கசப்பான பாடங்களைக் கற்றுணர்ந்து, அதனால் விழிப்படைந்து முதிர்ச்சிபெற்று ஓர் இனவாதமற்ற தேசிய இடதுசாரி மக்கள் எழுச்சி இயக்கமாக அம்முன்னணி இன்று இயங்குகின்றது. தமிழர்களின் கோரிக்கைகளுள் நியாயமானவற்றை ஏற்று அமுல்படுத்துவேன் என்று திஸநாயக்க துணிந்து பேசியது இம்முன்னணியின் புதிய முகத்தை வெளிக்காட்டுகின்றதல்லவா? அது மட்டுமல்ல, தனது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தை இனங்களையும் மதங்களையும் மையமாகக் கொண்டல்லாது பொருளாதாரக் கொள்கைகளையும், மக்கள் நலன்பேணும் கொள்கைகளையும், யாவரும் இலங்கையரே என்ற அடிப்படையில் ஊழலற்ற ஓர் அரசியலையும், சமவுரிமைகளுள்ள ஒரு தேசிய சமுதாயத்தiயும் இலக்காகக்கொண்டு பேசிவரும் இவ்வேட்பாளனை சிறுபான்மைஇனங்களிண்டும் மிகப் பரிவுடன் நோக்க வேண்டும்.

சுதந்திரபுரத்தில் 3ஆவது நாளாக அகழ்வு நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20 ஆம் திகதி தோட்ட காணியினை துப்பரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது

5 தமிழ் கட்சிகளின் இறுதி தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்

“ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின்கோரிக்கைகளை தென்னிலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில் தமிழ்மக்கள் திட்டவட்டமான முடிவினை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.அதற்கான இறுதிமுடிவினை நாளை எடுக்கவுள்ளோம்” என ஈ.பி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஈராக்கில் ஆர்ப்பாட்டங்கள் தொடருகையில் நால்வர் கொல்லப்பட்டனர்

ஈராக்கிய அரசாங்கத்துக்கு எதிரான நேற்றுநான்காம் நாள் ஆர்ப்பாட்டத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன், 277 பேர் காயமடைந்துள்ள நிலையில், தலைநகர் பக்தாத்தில் ஊரடங்கொன்றை ஈராக் நேற்று முன்தினம் பிரகடனப்படுத்தியுள்ளது.