விளாமரம்

சிறுவயதில் “இது யானை தின்ற விளாம்பழம்” என்று பாரமற்ற விளாம்பழம் பற்றிச் சொல்லக் கேட்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்துக்கும் யானைக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கமுடியாத வயது. விளாத்தி இலைகளை ஆடுகள் சுவைத்து உண்பதைக் கண்டிருக்கிறேன். அவை எப்படி இலைகளுக்குள் மறைந்துள்ள முட்களைத் தவிர்க்கின்றன என்பது அதிசயம். விளாம்பழத்தின் காய் கொண்ட துவர்ப்பும், அதற்கு உப்பிட்டு உண்டதும், பழத்தைச் சீனி போட்டு உண்டதும் நினைவில் நிற்கின்றன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்த தடை

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும், நடத்த கூடாது என, மாணவர்களுக்கு பல்கலைக்கிக நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

அரசியலுக்கு விடைகொடுக்க தயாராகும் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மிக விரைவில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளதாக அவருக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து, கட்சியின் தலைமைப்பதவியை பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது.

அரசியல் படிப்பினைகள்

(கருணாகரன்)

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாகியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மகிந்த ராஜபக்ஸ புதிய பிரதமராகியிருக்கிறார். புதிய அமைச்சரவை ஒன்று பதவியேற்றுள்ளது. அதில் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

வடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவருகின்றார். அதன் பிரகாரம் விடுக்கப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்கள் பல மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள அதேநேரத்தில் அரசியல்வாதிகளை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது என்பதும் யாவரும் அறிந்தது.

கியூபா நாட்டின் வரலாற்றில் அழிக்க முடியாத ஆளுமை

அமெரிக்க வல்லரசை அரை நூற்றாண்டுகளாக எதிர்த்து நின்ற சிங்கம்

ஃபிடல் காஸ்ட்ரோவின் மூன்றாவது நினைவு தினம்

கியூபாவை ஒரு கட்சியால் ஆளப்படும் நாடாக அரை நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தவர்தான் ஃபிடல் காஸ்ட்ரோ.அவர் மறைந்து இன்றுடன் மூன்று வருடங்கள்.

கண்டி – கோட்டைக்கிடையில் புதிய ரயில்சேவை இன்று முதல்!

கண்டி – கொழும்பு, கோட்டை புகையிரத நிலையங்களுக்கிடையிலான புதிய அலுவலக ரயில் சேவையொன்று இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. கண்டி ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.35 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது காலை 7.16 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும்.

ஹொங்கொங் தேர்தலில் ஜனநாயக ஆதரவு குழுக்கள் பெரும் வெற்றி

ஹொங்கொங்கில் இடம்பெற்ற மாவட்ட சபை தேர்தல்களில் ஜனநாயக ஆதரவு இயக்கம் எதிர்பாராத பாரிய வெற்றியை பெற்றுள்ளது. ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் வேட்பாளர்கள் இதுவரையில் 278 ஆசனங்களை கைப்பற்றியுள்;ளனர். சீனா சார்பு வேட்பாளர்கள் 42 ஆசனங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த தேர்தலில் சீனாசார்பு தரப்பின் முக்கிய வேட்பாளரான யூனிஸ் கோ தோல்வியடைந்துள்ளார்.

நான் சொல்லவில்லை – இரா. சம்பந்தன்

சஜித் பிரேமதாஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வழங்க வேண்டுமென நான் சொல்லவில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை எனவும் தெரிவித்தார்.

சீரற்ற காலநிலையால் பாக்குச் செய்கைப் பாதிப்பு

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் நீடித்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக, பாக்குச் செய்கைப் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாக்குச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி மாகாணத்தில் பாரியளவில் பாக்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகினறது. சீரற்ற காலநிலையால் பாக்கு மரங்களில் பூக்கள் உதிர்கின்றமை, பாக்கின் அளவு சிறிதாகின்றமை, போதியளவு பாக்கு உற்பத்தி இன்மை காரணமாக, பாக்குச் செய்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக, செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதிக மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக சந்தையில் பாக்கின் தொகை விலை அதிகரித்துள்ளதாக, செய்கையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.