முள்ளுள்ள புதர்களின் மத்தியில்- அத்தியாயம் 2

(By Terrence Anthonipillai)
வன்னி முழுவதும் கோவில் திருவிழா போல் காட்சியளித்தது. திரும்பிய இடமெல்லாம் சனத்திரள். மிருகங்கள் வாழும் காடுகளையும் சனம் விட்டு வைக்கவில்லை. கடந்த நாலைந்து நாட்களாக வந்திறங்கிய பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களையே பராமரிக்க வன்னி தடுமாறிக்கொண்டிருக்கும்போது மேலும் ஆயிரக்கணக்கானோர் கிளாலியூடாக வந்திறங்கிக் கொண்டிருந்தார்கள்.

2001ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை புலிகள் உருவாக்கினரா?


சுமந்திரனுக்கெதிரான அரசியல் தாக்குதல்கள் புதியவையல்ல.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைமுக ஆதரவுடன் சுயாதீனமாக த.தே.கூ உருவாக்கப்பட்டது
கட்சி யாப்பு அல்லது கட்டமைப்பில்லாமல் பலவீனமாகவே த.தே.கூ உருவானது
அரசியல் சூறாவளி ஒன்றின் கண்ணாக யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான மதியாபரணன் ஏப்ரஹாம் சுமந்திரன் தற்போதுள்ளார்.

-டி.பீ.எஸ். ஜெயராஜ்

ஆதலினால் காதல் செய்வீர்……

(சாகரன்)

(புகைப் படத்தை ஒரு கணம் பாருங்கள் பின்பு பதிவை வாசிக்க தொடங்குங்கள்…..)

மனிதர்களுக்கிடையே இடைவெளி அவர்களிடம் ஒரு மன இறுக்த்தை தளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது தற்போதைய பேரிடர். இது நாம் பலரும் தற்போதைய கொரனா தொற்றுக் காலத்தில் எதிர் நோக்கியிருக்கும் பிரச்சனை. ஒரு நிச்சயமற்ற இலக்கு அற்ற பயணத்தை நோக்கி நாம் பயணிக்கின்றோமா என்ற நம்பிக்கையீனங்களை…. விரக்த்தியை நம்மில் பலரிடமும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கொவிட்-19க்குப் பின்னரான உலகம்: பெருநகரங்களின் எதிர்காலம்


(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

‘எது வெற்றிகரமான சமூகம்?’ என்ற வினாவுக்கான பதிலை, கொவிட்-19 பெருந்தொற்று காட்டி நிற்கின்றது. மக்களுக்காக அரசும் அரசுக்காக மக்களும், எவ்வாறு கைகொடுத்துத் தோளோடு தோள்நிற்பது என்பதை, இந்தப் பெருந்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளும், அவர்தம் மக்களும் காட்டி நிற்கின்றனர்.

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிறது கேரளம்!

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பல்வேறு மாநிலங்களும் தடுமாறிக்கொண்டிருக்கும் நேரத்தில், கேரளம் எல்லோருடைய பாராட்டுகளையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. ஜனவரி 30 அன்று கேரளத்தில் கரோனா தொற்று முதலில் கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே முதலில் கரோனா தொற்று தொடங்கிய இடமும் கேரளம்தான்.

முள்ளுள்ள புதர்களின் மத்தியில் அத்தியாயம் 1

(அக்கினி ஞானஸ்ஞானம்
By Terrence Anthonipillai)

‘எங்களுக்குத் தெரியும் சனத்துக்கு என்ன தேவையெண்டு. நீங்கள் சனத்தோட கதைக்கத்தேவையில்லை. அதுகளோட கதைச்சிட்டு, வெள்ளைக்காரனுக்கு தேவையில்லாததைச் சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவியள். அதாலதான் சொல்லுறம், நாங்கள் சொல்லுறதை நீங்கள் செய்யுங்கோ.’

என்ன பேச வேண்டும் என் பிரதமர்?- பொருளாதார சுதந்திரமே சுயராஜ்ஜியத்தின் அர்த்தபூர்வ வெளிப்பாடு

அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

கிறிஸ்து பிறப்பதற்கு முன், பின்; உலகப் போர்களுக்கு முன், பின்; சோவியத் ஒன்றியத்துக்கு முன், பின் என்றெல்லாம் வரலாற்றை நாம் பிரித்துப் பார்ப்பதுபோல, கரோனாவுக்கு முன், பின் என்றும் பார்க்கும் சூழல் உருவாகும் என்று வரலாற்றறிஞர்கள் பேசுகிறார்கள். நெடிய காலப்போக்கில் உலக வரைபடத்திலேயேகூட பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வித்தாக கரோனா காலகட்டம் அமையலாம் என்றும்கூட சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

ஒரே நாளில் பூகோளத்தில் அதிக தொற்றுக்கள்

பூகோள ரீதியில் கொவிட்-19 பரவல் ஆரம்பித்த பின்னர் நாள் ஒன்றுக்கு ஏற்பட்ட அதிக தொற்றாக கடந்த செவ்வாய்க்கிழமை பூகோள ரீதியில் தமக்கு 106,662 தொற்றுக்கள் பதிவானதாக உலக சுகாதார ஸ்தாபனம் நேற்றுத் தெரிவித்துள்ளது.

மீண்டும் மீண்டும் யாருக்குக் கல்வி மறுக்கப்படுகிறது?

கடந்த வாரம், நடந்த சம்பவமொன்றை இங்கு நினைவுகூர விரும்புகிறேன்: ஆசிரியரைத்தேடி மாணவர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். ஆசிரியரிடம் அவர் வழங்கிய பயிற்சித் தாள்களைத் தரமுடியுமா எனக் கேட்டுள்ளார். ஆசிரியர், அவற்றைத் தான், ‘வாட்ஸ்அப்’பில் அனுப்பி விட்டதாகவும் இலக்கத்தைத் தந்தால், தான் அனுப்பி வைப்பதாகவும் சொல்கிறார். மாணவர், பதில் அளிக்காமல் நன்றி சொல்லிவிட்டுத் திரும்பிவிடுகிறார்.

இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது

மறு அறிவித்தல் வரை ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள இலங்கைத் தூதரகம் மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் உள்ள பணியாளர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.