மே 26, 2020: மீண்டும் ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல்…..

(சாகரன்)
மே 26, 2020 ஒரு கறுப்பின அடிமையை கொல்லுதல் என்ற சிந்தனை மீண்டும் அரங்கேறிய நாள். உலகில் கறுப்பு, வெள்ளை, இடை நிறமான பழுப்பு நிறம் என்ற நிறப் பாகுபாடுகளில் வெள்ளையினமே மேன்மையானது என்ற பாகுபடுத்திப் பார்க்கும் வெளிப்பாடுகள் இன்று வரை உலகின் பொலிஸ்காரனாக தன்னை வரிந்து கட்டிய அமெரிக்காவில் குறைந்த பாடில்லை.

சுயசார்பு பொருளாதாரம் சாத்தியமா?

அன்றாடப் பொது நடைமுறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. பள்ளிகள் செயல்படும் முறை மாற்றப்படுகிறது; வீட்டிலிருந்து பணி புரிதல் புதிய நடைமுறையாக மாறியிருக்கிறது. அலுவலகங்களில் ஷிப்ட் முறைகளில் ஊழியர்கள் பணிக்கு வரச் செய்யப்படுகின்றனர்; பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளை அனைத்து நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இவை அனைத்தும் அந்நாடுகளுக்குள்ளான சமூகப்பழக்கவழக்கம் தொடர்பான மாற்றங்கள். இது ஒருபுறம் இருக்க, உலக நாடுகள் தங்களின் பொருளாதார கட்டமைப்பிலும் மாற்றங்களைச் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளன.

கிழக்கிலிருந்த 160 இந்தியர்கள் நாடு திரும்பினர்

கிழக்கு மாகாணத்தில் நிர்க்கதியான நிலையில் தங்கியிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த 160 பேர், அவர்களின் சொந்த நாட்டுக்குச் செல்வதற்காக இன்று (01) அதிகாலை கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்குத் திரும்பியது

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முகமாக, அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தை, 70 நாள்களின் பின்னர் இன்றைய தினம் (01) மீள வழமைக்குத் திரும்பியுள்ளது.